கால்மார்க்ஸ்

clip_image002
கால்மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். மெய்யியல், வரலாறு ஆகிய பாடங்களை ஜேர்மனியிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார். ஹேகலின் சித்தாந்தத்தினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெல்ஜியத்திற்கும்,பின்னர் அங்கிருந்து 1849ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் நாடு கடத்தப்பட்டார். 1853ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இங்கிலாந்தில் வசித்திருந்தார்.
கால்மார்க்ஸ் பிரட்றிக் ஏங்கல்ஸ்ஸை பிரான்சில் சந்தித்தார். இவர் மிகவும் துடிப்புடைய இளைஞனாகவும், வேறுபட்ட சமூகத்திலிருந்தும் வந்திருந்ததுடன், இருவருக்கும் ஒருமித்த அரசியல் சிந்தனை இருந்திருந்தது. மாக்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து 1848 ஆம் ஆண்டு கம்யூனிச அறிக்கையினை வெளியிட்டனர்.
கால்மாக்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கோட்பாடு, அரசியல் நடைமுறை ஆகிய இரண்டிற்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்திய முதன்நிலைக் கோட்பாட்டாளர்களாகும். இவர்கள் இருவரும் விஞ்ஞான பூர்வமானதும், புரட்சிகரமானதுமாகிய சோசலிசக் கோட்பாட்டை முன்வைத்தனர். கால்மாக்ஸ் 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட “கம்யூனிச அறிக்கையிலும், “மூலதனம்” என்ற நூலிலும் சோசலிசக் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். மூலதனம் என்ற நூல் சோசலிசத்தின் மூலாதார நூலாகக் கருதப்படுகின்றது. மூலதனம் என்ற நூலின் முதற்பகுதி 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த இரண்டு பகுதிகளும் முறையே 1885ஆம் 1894ஆம் ஆண்டுகளில் பிரட்றிக் ஏங்கல்ஸினால் வெளியிடப்பட்டது. கால்மாக்ஸ் தனது நூலில் பொருள்முதல்வாதம், மூலதன செறிவாக்கல் விதி, வர்க்கப்போராட்டம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைப் பகுப்பாய்வு செய்கின்றார்.
மிகைப்பெறுமானம் மாக்ஸிசக் கோட்பாட்டின் மையப்பகுதியாகும். டேவிட் றிகாடோவின் தொழிலாளர் கோட்பாட்டினால் கால்மாக்ஸ் கவரப்பட்டிருந்தார். முழுச்சொத்துக்களினதும் உண்மைப் பெறுமானம் தொழிலாளர்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். அதேநேரம் முதல்தரப் பொருளியலாளர்கள் கூறும் ஒரு உற்பத்தி பொருளின் சந்தைப் பெறுமதி கேள்வி நிரம்பலினால் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் கால்மாக்ஸ், நீண்ட காலத்தில் உற்பத்திக்குச் செலவிடும் நேரம், தொழிலாளர்களின் உழைப்பு, என்பவற்றினாலேயே உற்பத்திப் பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது எனக் கூறுகின்றார். அதாவது பொருள் உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி பயன்படுத்தப்படும் போதுதான் உற்பத்திப் பொருளுக்கு பெறுமதி கிடைக்கின்றது. ஆகவே தொழிலாளர்கள் சமூகத்தின் முதுகெலும்பு எனக் கூறுகின்றார். இங்கு இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.
ஒன்று உற்பத்திக் கருவிகளாகிய தொழிற்சாலைகள், இயந்திரங்கள்,மின்சாரம், நீராவி வலு போன்றவற்றை இயக்குவதற்கு தொழிலாளர்கள் அவசியமாகும். தொழிலாளர்கள் இன்றி கருவிகள் தானாக இயங்கமாட்டாது.
இரண்டாவது உற்பத்திப்பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டாலே சந்தையில் விற்பனை செய்ய முடியும். இதற்கும் தொழிலாளர்களின் உழைப்புத் தேவையாகும்.
தொழிலாளர்களும் ஏனைய உற்பத்திப் பொருட்களைப் போல் வர்த்தகப் பொருட்களாகும். ஏனைய உற்பத்திப் பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுவது போல் அவர்களின் பெறுமதியும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
உற்பத்திப் பொருட்களின் “பரிமாற்றப் பெறுமானம்”உற்பத்திக்குத் தேவையான தொழிலாளர்களைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு ஏற்படும் செலவினை ஈடு செய்வதற்குத் தேவையான ஊதியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் உண்மையில் முதலாளித்துவ சமூகத்தில் இது நடைபெறுவதில்லை. தொழிலாளர்கள் பெறும் ஊதியம் தமது ஜீவனோபாயத்தினை நடாத்துவதற்கு தேவையானதையும் விட குறைவாகவேயிருந்தது. இதற்கான காரணம் மிகவும் தெளிவானதாகும்.
உண்மையில் உற்பத்திக்கு பயன்படும் கருவிகளாகிய இயந்திரங்கள், கருவிகள்,மூலப்பொருள், என்பன சிறிய ஒரு வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்திற்குச் சொந்தமானதாகும். இவர்களே முதலாளி வர்க்கமாகும். தொழிலாளர்கள் உழைப்புத் திறன் ஒன்றிற்கு மாத்திரமே சொந்தக்காரர்களாகும். இவர்கள் தமது உழைப்பினை முதலாளிகளுக்கு விற்று ஊதியத்தைப் பெற்றனர்.
ஆனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை வாங்கக் கூடியளவு விலை விகிதாசாரத்திற்கேற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் பெறுவதில்லை. தொழிலாளர்கள் விரைவில் குறைவடைந்து விடும் திறன் கொண்டவர்கள் என்பது முதலாளிகளின் கருத்தாகும். அதேநேரம் தொழிலாளர்கள் தகுதியின்மையும், இயலாமைகளையும் கொண்டவர்கள். இதனை முதலாளிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். குறைந்த ஊதியத்தை முதலாளிகள் வழங்க அதனைத் தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். அதன்மூலம் முதலாளிகள்; தமது இலாபத்தை அதிகரிக்கின்றனர்.
ஆகவே உற்பத்திப் பொருட்களுக்கான பரிமாற்றப் பெறுமானத்திற்கும், தொழிலாளர்களிற்கு வழங்கப்படும் ஊதியத்திற்கிடையிலும் வேறுபாடு தோன்றுகின்றது. இதனையே கால்மாக்ஸ் “மிகைப்பெறுமானம்” என அழைக்கின்றார். இம்மிகைப் பெறுமானம் முதலாளிகளால் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியம் உண்மையில் முதலாளிகளினால் மேற்கொள்ளப்படும் சுரண்டலாகும். தொழிலாளர் மீதான சுரண்டல் நீக்கப்பட வேண்டும். சோசலிச சமூகம் ஒன்றிலேயே இது சாத்தியமாகும் என்பதே கால்மாக்ஸின் முடிவாகும்.
இயக்கவியல், பொருள்முதல்வாதம்
இயக்கவியல் ,பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டும் மாக்சிசக் கோட்பாட்டிற்கான அடிப்படைத்தத்துவங்களாகும். வரலாறு என்பது இயக்கவியல், பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டினூடாக படிப்படியாக வளர்ச்சியடைந்த சமூகம் பற்றிய வரலாறேயாகும்.
இயக்கவியல் தத்துவம் ஹெகலினால் உருவாக்கப்பட்டதாகும். ஆயினும் கால்மாக்ஸ் இயக்கவியலுடன் பொருளாதாரம், வரலாறு ஆகிய இரண்டினையும் இணைத்து ஆய்வு செய்கின்றார். கால்மாக்ஸிற்கு முன்னர் யாரும் இயக்கவியலை பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றுடன் இணைத்து ஆய்வு செய்யவில்லை.
உலக வரலாறு “வர்க்கப் பேராட்டத்தின் வரலாறு” என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். சமூகப் பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரப் பலத்தினாலேயே நிகழ்கின்றது என்பது கால்மாக்ஸின் முடிவாகும். சமூகம், பொருளாதாரம், வரலாறு, இவைகளைப் படிப்பதற்கான முறையியலாக கால்மாக்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை பயன்படுத்தும் போது அதற்குள் இயக்கவியல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
சமூக வரலாற்றின் அபிவிருத்தியை கோள் (Thesis) முரண்கோள் (Anti-Thesis) என்ற எண்ணக்கருக்களுக்கூடாக கால்மாக்ஸ் விளக்குகின்றார். வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்தினையும் “கோள்” என்றும் அச்சமூகத்திற்குள்ளிருந்து அச்சமூகத்தினை எதிர்க்கின்ற சமூகத்தினை “முரண்கோள்” என்றும் கூறுகின்றார். எனவே வரலாற்றில் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் முரண்கோள் காணப்படுகின்றது. இம்முரண்கோள் அச்சமூகத்தினை அழித்து புதிய சமூகத்தினை தோற்றிவித்தது. சமூக வரலாற்றின் தொடர்ச்சி இதன்மூலமே ஏற்பட்டது என்பது கால்மாக்ஸின் கருத்தாகும்.
கால்மாக்ஸ் கூறும் இயக்கவியல் முரண்பாட்டு எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. பதிலாக வர்க்க இயக்கவியலை அடிப்படையாகக் கொண்டது. வர்க்க முரண்பாட்டினால் புதிய உற்பத்திமுறைகள் பிறந்துள்ளன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு உற்பத்திமுறைகளைக் கொண்டிருந்தன. வரலாற்றினூடான உற்பத்திமுறைகளுக்கான இம்மாற்றம் இயக்கவியலூடாகவே நிகழ்ந்தது. இயக்கவியல் புதிய உற்பத்திமுறைகளுக்கு வழிகாட்டியாகி, வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்திக்கான மூலப்பொருள் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தே சமூகம் ஒன்றின் அடிப்படை தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக கால்மாக்ஸ்சும் பிரட்றிக் ஏங்கல்ஸ்சும் மேற்கு ஐரோப்பாவினை அடிப்படையாகக் கொண்டும் உற்பத்திக்கான மூலப்பொருள் சமூகத்தில் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தும் சமூகத்தின் அபிவிருத்தியை ஐந்து படிநிலைகளாக பிரிக்கின்றார்.
முதலாவது படிநிலையில் ஆதிகால கம்யூனிஸ சமூகம் இருந்ததாக கூறுகின்றார். இங்கு உற்பத்திமுறைமை சமுதாயம் சார்ந்ததாக இருந்தது. இச்சமுதாயத்தின் உற்பத்தி கருவிகளாக வேட்டையாடுதலாகவும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டி குவிப்பதாகவும் இருந்தது. இங்கு சொத்துக்கள் யாவும் யாருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. வேட்டையாடுதல் மூலமும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதன் மூலமும் கிடைத்த மேலதிகப் பொருட்கள் சேமிப்புக்களாகின. இது சமூகத்தில் சமமின்மையினைத் தோற்றிவித்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். யாரிடம் மிகையான சேமிப்பு இருந்ததோ அவரிடம் அதிகாரமும் சென்றடைந்தது. அவர் சமூகத்தின் தலைவரானார்.
சமூகத்தில் தோன்றிய இவ் ஆரம்ப படிநிலை நகர அரசுகளின் தோற்றத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இரண்டாவது படிநிலையில் ஆண்டான் அடிமைச் சமூகம் இருந்தது. இச்சமூகத்தின் தோற்றத்துடன் தனியார் சொத்துடமையும் “வர்க்க சமூகமும்” தோன்றிவிட்டதாக கால்மாக்ஸ் கூறுகின்றார். இங்கு அடிமைகள் ஆண்டானின் சொத்துக்களாகினர். இவர்கள் எவ்வித ஊதியமுமின்றி ஆண்டானிற்காக வேலை செய்தார்கள். இச்சமூக அமைப்பிலிருந்து இயக்கவியல் பற்றி கால்மாக்ஸ் விளக்குகின்றார். அடிமைகள் ஆண்டானின் சொத்துக்கள் மாத்திரமல்ல, ஆண்டானின் பாதுகாவலர்களுமாகும். அடிமைகள் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆண்டான் அடிமை சமூகம் உள்முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
மூன்றாவது படிநிலையில் நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். நிலப்பிரபுத்துவ சமூகம் நேரடியாக முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாகியது என்ற வகையில் முக்கியமான இடத்தை பெறுகின்றது. நிலப்பிரபுத்துவ சமூகம் படுக்கைகளாயமைந்த பல வர்க்கமுறையைக் கொண்டதாகும். இங்கு அரசன், பிரபு, குடியானவன் போன்ற பல வர்க்கங்கள் இருந்தன. குடியானவன் என்பவன் அடிமையினை விட சற்று கூடிய சமூக அந்தஸ்துடையவனாகும். அரசன் நிலங்களின் ஆட்சியாளன். பிரபுக்கள் பெருந்தொகையான நிலங்களுக்குச் சொந்தக்காரனாகும். குடியானவன் தனது தொடர்ச்சியான வாழ்க்கைக்காக பிரபுவின் நிலங்களில் வேலை செய்கின்றவனாகும். குடியானவனால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களில் தனது வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்குத் தேவையானவை பிரபுவினால் வழங்கப்பட்டது. நிலங்கள் யாவும் பிரபுவிற்குச் சொந்தமாக இருந்ததினால் எஞ்சிய மிகை உற்பத்தி யாவும் பிரபுவுக்குச் சொந்தமாக இருந்தது. ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமை ஆண்டானின் உடமையாக இருந்தான். பிரபுத்துவ சமூகத்தில் குடியானவன் பிரபுவின் உடமையல்ல. ஆனாலும் அடிமைத்தனத்தின் இயல்பு வேறு வடிவத்தில் தொடர்ந்தது. குடியானவனின் பிள்ளைகள் பிரபுவின் நிலங்களில் பெற்றோர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மேலும் குடியானவன் யுத்தகளத்தில் போர்வீரனாகவும் பயன்படுத்தப்பட்டான். நிலச்சொந்தக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ சமூகத்தை சிதைக்கத் தொடங்கியது. நிலப்பிரபுக்கள் ஏனைய நிலப்பிரபுக்களால் வெற்றிகொள்ளப்பட்டு அவர்களிற்குச் சொந்தமான குடியானவர்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இது இறுதியில் அரசனின் அதிகாரத்திற்கு ஆபத்தாகியது. மறுபக்கத்தில் நாணயங்களின் அறிமுகம் குடியானவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்குவதற்கு உதவியது. மேலும் நாணயங்களின் அறிமுகம் புதிய “வர்த்தக சமூகம்” ஒன்றைத் தோற்றிவித்தது. மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என அரசன் கட்டளை பிறப்பித்தான். தமது நிலங்களைக் கடந்து செல்லும் வர்த்தகர்கள் மீது நிலப்பிரபுக்கள் வரி விதித்தனர். இது நிலப்பிரபுக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் புதிய முரண்பாட்டைத் தோற்றிவித்தது. சமூகத்தில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் புதிய உற்பத்தி முறைகள் அறிமுகமாவதற்கும் காரணமாகியது. புதிய உற்பத்திமுறைமை முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு உதவியது.
நான்காவது படிநிலையில் முதலாளித்துவ சமூகம் இருந்தது. இங்கு புதிய வர்க்க அமைப்பு இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். தொழிலாளர்கள், புதிய உற்பத்திக் கருவிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய முதலாளிகள் என்பவர்களே இப்புதிய வர்க்கத்தினர்களாகும். உற்பத்திக் கருவிகளுக்கிடையிலான உறவுகளே “சமூக வர்க்க முறைகளைத் தீர்மானிக்கின்றன என கால்மாக்ஸ் நம்புகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திக் கருவிகளாகிய நிலம்,தொழிற்சாலைகள், தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவற்றின் சொந்தக்காரர்களும் விநியோகத்தர்களுமாக முதலாளிகளே காணப்படுவார்கள். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறிய வர்க்கமாகும். உழைக்கும் திறனை வேதனத்திற்கு விற்பனை செய்து வாழும் மக்கள் தொழிலாளர்களாகும். இவர்கள் சமூகத்தில் பெரும்பான்மையினராகும். இப் பெரும்பான்மைச் சமூகம் தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர். தொழிலாளர் வர்க்கம் தமது உழைப்பினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பொருட்கள், சேவைகள் என்பன முதலாளிகளால் இலாபத்திற்கு விற்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகித்ததோடு அரச இயந்திரத்தினை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தனர். முதலாளிகள் தமது நலன்களை உயர்த்தவும், பாதுகாக்கவும் ஏற்ற கொள்கைகளை உருவாக்கி அவற்றைச் சட்டமாக்கி கொண்டார்கள். உண்மையில் முழு அரசாங்க இயந்திரமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான சுரண்டலுக்கு ஏற்ற பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டனர்.
வர்க்க முரண்பாடு
சமூக முரண்பாடு தொடர்பாக கூறும் அதி சக்தி வாய்ந்த சமூகவியல் விளக்கங்களுள் ஒன்றாக கால்மாக்ஸின் வர்க்க முரண்பாட்டினைக் கூறலாம். உற்பத்தி உறவுகளே வர்க்கமுரண்பாடுகளை தீர்மானிக்கின்றன. சொத்துடமை அதன் கட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்ததே வர்க்கமுறையாகும். சமூக பொருள் உற்பத்தி அமைப்பில் பொருள் வகிக்கும் இடம், உற்பத்தி சாதனங்களுடன் பொருளிற்குள்ள உறவு, சமூக அமைப்பில் உழைப்பும் அதற்குள்ள பொறுப்பும், சமூகச் செல்வத்தில் அவற்றின் ஆளுமைக்குட்படும் பங்கின் அளவு, இப்பங்கினை அவையடைந்து கொள்ளும் முறைமை என்பவற்றின் வழி ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடக்கூடிய மக்கள் குழுவினரே வர்க்கமாகும்.
எனவே வர்க்கம் என்பது சொத்துடமையின் அளவால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய ஒழுங்கமைப்பு எனலாம். இன்னோர் வகையில் கூறின் சமூக வர்க்க அமைப்பானது சொத்துடமையினால் சமத்துவமின்மையினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்ப காலத்தில் வர்க்கம் என்பது உயர் மக்களாக கருதப்பட்ட சுரண்டுவோர் தோன்றியமை, யுத்தக் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டமை, வறிய மக்கள் தாம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத போது அடிமைகளாக்கப்பட்டமை மூலம் தோற்றம் பெற்றதாக மாக்ஸ் கூறுகின்றார். ஆனால் மிக ஆரம்ப காலத்தில் மக்கள் சமத்துவமாக வாழ்ந்ததாக மாக்ஸ் கூறுகின்றார். இங்கு மரபுகள், வழக்காறுகள், முதியோருக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகள் காணப்பட்டன. முதியோர்கள் சமுதாயக் கடமைகளை நிர்வகித்தனர். இதற்காக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பிற்பட்ட காலத்தில் உற்பத்தி சக்திகள் பெருக்கமடைய தொழிற் பிரிவினை ஏற்பட்டு சமுதாய நலன்களை நிர்வகிக்கும் தனியமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இத்தனியமைப்புக்கள் சமுதாயத்தின் ஒரு சாராரிடம் தனிமைப்பட்டன. காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து இவ்வமைப்புக்கள் விலகி நின்றன. இறுதியில் சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாய சுரண்டலை மேற்கொள்ளுகின்ற சுதந்திர அமைப்புக்களாக இவைகள் மாற்றமடைந்தன. இது வர்க்க முறைமை தோன்றுவதற்கும் முரண்பாடு தோன்றுவதற்கும் காரணமாகியது.
முதலாளித்துவ சமூகத்தில் சொத்துடமை கொண்டிருக்கும் உறவுநிலை பல்வேறுபட்ட வர்க்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என கால்மாக்ஸ் விபரிக்கின்றார். அவற்றுள் முதன்மையானவைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
  1. பூர்ஸ்வாக்கள்: இவர்கள் உற்பத்திக் கருவிகளின் உடமையாளர்களாகும். பாட்டாளி வர்க்கத்திடமிருந்து உழைப்புச் சக்தியை இவர்கள் சுரண்டுகின்றார்கள். பூர்ஸ்வாக்களை மிகவும் செல்வந்த பூர்ஸ்வாக்கள், சிறிய பூர்ஸ்வாக்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். சிறிய பூர்ஸ்வாக்கள் சிறிய முதலீட்டாளர்களாக, நிலவுடமையாளர்களாக, வர்த்தகர்களாக காணப்பட்டார்கள்.
  2. பாட்டாளிகள் வர்க்கம்: இவர்கள் தமது உழைப்புச் சக்தியை விற்பனை செய்பவர்களாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வித உற்பத்தி கருவிகளையும் கொண்டிராதவர்களாகும். முதவாளித்துவ உற்பத்தி முறையானது பாட்டாளிகளைச் சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் பூர்ஸ்வாக்களினால் உருவாக்கப்பட்டதாகும்.
  3. கீழ் வர்க்க பாட்டாளிகள்: குற்றவாளிகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், போன்றவர்களை உள்ளடக்கிய வர்க்கமாகும். இவர்கள் பொருளாதார முறைகளுக்குள் உள்வாங்கப்படாதவர்களாகும். இவர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்த ஏலத்திற்கு விற்கக் கூடியவர்கள்.
  4. நிலவுடமையாளர்கள்: இவ்வர்க்கத்தினர் வரலாற்று ரீதியாக முதன்மையானவர்களாகும். தங்களிடமுள்ள நிலவுடமையின் அடிப்படையில் செல்வத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருந்தனர்.
  5. விவசாயிகள், பண்ணையாளர்கள்: இவ்வர்க்கத்தினர் மாற்றத்தினை ஏற்படுத்தும் திறனற்றவர்களாகவும், ஒழுங்குபடுத்தப்படாதவர்களாகவும் காணப்பட்டதாக கூறும் கால்மாக்ஸ் இவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடலாம். பலர் பாட்டாளிகளாகவும், சிலர் நிலவுடமையாளர்களாகவும் மாற்றமடையலாம் எனக் கூறகின்றார்.
எல்லா சமூகத்தினதும் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறேயாகும். வரலாற்று ஆசிரியர்கள் தேசங்களுக்கு இடையிலான யுத்தமே வரலாறாகும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் கால்மாக்ஸ் வர்க்கங்களுக்கிடையிலான புரட்சிகரமான போராட்டமே வரலாறு எனக் கூறுகின்றார். இவ்வர்க்கப் பேராட்டம் புரட்சிகரமான மீள்கட்டமைக்கப்பட்ட பாரிய புதிய சமுதாயம் ஒன்றை இறுதியில் தோற்றிவிக்கின்றது. எல்லா சமுதாய மாற்றங்களும் பொருளாதார வர்க்கப் போராட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் மனிதாபிமானத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவேயுள்ளது. ஒவ்வொரு உற்பத்தி முறைமையும் சுரண்டுபவர்,சுரண்டப்படுபவர் என்ற இரண்டு எதிர்வினை பொருளாதார வர்க்கங்களைத் தோற்றிவித்தது. அதாவது அடக்குபவர், அடக்கப்படுபவர் என்ற இரண்டு வர்க்கங்களைத் தோற்றிவித்தது. சமுதாயம் இயங்கியல் பண்பு கொண்டது. மாற்றங்களும், பரிணாமமும் இதன் பண்புகளாகும்.
வர்க்கம் சொத்தினால் தீர்மானிக்கப்படுகின்றதேயன்றி வருமானம் அல்லது அந்தஸ்தினால் தீர்மானிக்கப்படுவதில்லை. வருமானம், அந்தஸ்து ஆகியவை நுகர்வு, விநியோகம் என்பவைகளால் தீர்மானிக்கப்படுவதுடன், உற்பத்தியிலும், வர்க்க அதிகார உறவிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூர்ஸ்வாக்களின் சமூகநிலை அவர்களிடமுள்ள சொத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. வர்க்கம் தனிநபர்களுக்கிடையில் கோட்பாட்டு ரீதியான முறை சார்ந்த உறவுநிலைகளைத் தோற்றிவிக்கின்றது. வர்க்கப்போராட்டமானது, வர்க்க அங்கத்தவர்களினால், வர்க்க நலன்களுக்காக நடாத்தப்படுகின்றது. ஒவ்வொரு தனிநபர்களும் தனது வர்க்க நிலையினைப் பொறுத்து இணைந்து செயற்படுகின்றனர். பின்னர் படிப்படியாக ஒவ்வொரு வர்க்கத்தினுள்ளும் இருக்கும் தனிநபர்கள் பரஸ்பரம் ஒவ்வொருவரில் தங்கியிருக்கவும், பொது வருமானத்தினை அல்லது கூலியினை தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர். இப்பொது நலனிலிருந்து வர்க்கம் என்பது உருவாகி விடுவதுடன் தனது பொதுநலனுக்கு எதிரான வர்க்கத்துடன் போராடவும், தனது நலனைப் பேணவும் தயாராகிவிடுகின்றது.
வர்க்கப் புரட்சி
முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகளே பொருளாதார பலமுள்ளவர்களாக இருப்பதால் இயல்பாகவே அரசியலதிகாரமும் அவர்களிடம் சென்றுவிடுகின்றது. இதனால் இச்சமூகத்தில் அரசு என்பது முற்றாக முதலாளித்துவ நலன்பேணும் ஒரு கருவியாகவே விளங்கும். அது தனது நிலைபேற்றிற்கு ஆயுத பலத்திலேயே தங்கியுள்ளது. சிறுபான்மையினரான முதலாளிகள் பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் பலத்தை ஆயுத பலத்தின் மூலம் அடக்குகின்றார்கள். இதற்காக முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சட்டம், காவல்துறை, இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை அனைத்தும் பாட்டாளிகள் மீது முதலாளிகளின் அடக்குமுறைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி – பாட்டாளி வர்க்கமுரண்பாடுகள் நாளடைவில் பெருகும். இம்முரண்பாடு வர்க்க மோதல்களுக்கு வழிவிடும். முதலாளித்துவம் என்பது ஆயுத பலத்தை நம்பியிருக்கும் ஆட்சிமுறையாகும். எனவே எந்த மோதல்களையும் ஆயுத பலத்தின் மூலம் அடக்கவே முதலாளிகள் முற்படுவார்கள். எனவே இவ்வாயுத பலத்தை பாட்டாளிகளும் ஆயுத பலத்தின் மூலமே முறியடிக்க வேண்டும். இதன்மூலம் பாட்டாளி மக்களின் விடுதலைக்கு பலாத்காரப் புரட்சி அல்லது ஆயுதப் புரட்சி அவசரமும் அவசியமானதுமாகும். எந்தவொரு பழைய சமூகத்திலிருந்தும் புதியதோர் சமூகம் பிறக்க பலாத்காரம் மருத்துவ மாதாகத் தொழிற்படுகின்றது என மாக்ஸ் கூறுகின்றார். இந்நிலையினை மாக்ஸ் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“பலாத்காரப் புரட்சிக்காக பாட்டாளிகள் தம்மைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும். இவ்வாறு இடம்பெறும் பலாத்காரப்புரட்சி வரலாற்றில் இடம்பெறும் சகல புரட்சிகளிலும் சிறப்பானதாகும். வரலாற்றில் இடம்பெற்ற வேறு எந்தப் புரட்சியினாலும் வர்க்கமுரண்பாடுகளோ, சுரண்டலோ, அரசு என்ற அமைப்போ ஒழிக்கப்படவில்லை. மாறாக அவை வேறோர் வழியில் மாற்றீடு செய்யப்பட்டன. ஆனால் பாட்டாளிகளின் புரட்சி என்பது வர்க்கமுரண்பாடு, சுரண்டல், அரசு என்ற மூன்றையும் ஒழித்துவிடும் தன்மை கொண்டதாகும்” என மாக்ஸ் கூறுகின்றார்.
எனவே முதலாளித்துவ சமுதாயம் தனது பரிணாம வளர்ச்சியில் பூரணமாகவே இல்லாதொழிக்கப்பட்டு பிறிதொன்றினால் வெற்றிகொள்ளப்படும். முதலாளித்துவமும், முதலாளித்துவ முறைமையும் தனது அழிவிற்கான வித்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாட்டாளிகள் ஐக்கியப்பட்டு முதலாளித்துவ வர்க்கத்தினை வீழ்த்துவார்கள். இதன்மூலம் பாட்டாளிகள் அதிகாரத்தை கைப்பற்றுவர். பாட்டாளி வாக்க சர்வாதிகார ஆட்சி முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி சோசலிச புரட்சி மூலம் தோற்கடிக்கப்படும் போது இயற்கைச் சட்டங்களால் சமுதாயம் ஆட்சி செய்யப்படும்.
சோசலிச சமுதாயம் பாட்டாளி வர்க்க புரட்சியிலிருந்து எழுச்சியடைந்த வர்க்கங்களற்ற சமுதாயமாகும். சோசலிசம் சமூகப் பரிணாமத்திலுள்ள இயற்கைச் சட்டங்களால் தீர்மானிக்கப்படுகின்ற போது தனிமனிதர்களின் சுதந்திரமான விருப்பங்கள், நோக்கங்கள் இச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும். எல்லா நிலங்களும் மூலதனமும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். இதன்மூலம் சுரண்டல் தடுக்கப்படும். சொத்துடையவர்களின் கொடுங்கோண்மை இல்லாதொழிக்கப்படும். எல்லா மனிதர்களும் சுதந்திரமாக இருப்பார்கள். கம்யூனிச அறிக்கையின் இறுதியில் கால்மாக்ஸ் “கம்யூனிசத்திற்காக எல்லாத் தொழிலாளர்களையும் எழுச்சி பெறுமாறு” அழைப்பு விடுக்கின்றார். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு கை விலங்குகளைத் தவிர எதுவுமில்லை. நீங்கள் வெல்லுவதற்கு உலகம் உள்ளது.”
சோசலிச அடிப்படைகளில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு உலகைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. இவ்வகையில் மாக்ஸிசம் என்பது இயற்கை மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியைப் பற்றிய பொதுவான விதிகள்,சோசலிசப் புரட்சியின் வெற்றி, சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கட்டுமானப் பாதைகள் ஆகியவற்றை பற்றிய விஞ்ஞான கருத்துக்களடங்கிய தத்துவமாகவுள்ளது. சமூக உறவுகளின் மத்தியில் பொருளாதார அல்லது உற்பத்தி உறவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதனைப் படிக்காமல் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எப்படி மாறிச் செல்வது என்ற கேள்விக்குப் பதில் காண முடியாது.

அரிஸ்ரோட்டில்

clip_image002கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்ராகிரா (Stagira) என்னும் இடத்தில் அரிஸ்ரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வைத்தியராகும். இவர் அளவையியல் அல்லது விஞ்ஞான முறைமைகள், உளவியல், பௌதீக விஞ்ஞானம், நெறிமுறை விஞ்ஞானம், கவிதை, உயிரியல், அரசியல் என பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
பிளேட்டோ வடிவமைத்த அரசியலமைப்பு முறைகளை விமர்சனம் செய்யும் அரிஸ்ரோட்டில் அரசு ஒன்று எவ்வாறு ஆளப்படக்கூடாது என்பதற்கு ஸ்பார்டா, கிரிட் ஆகிய நகர அரசுகளை உதாரணமாகக் காட்டுகின்றார். ஸ்பார்டாவில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பெண்கள் ஆண்களை அடிமைகளாக வைத்திருந்தனர். ஸ்பார்ட்டாவில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது. பெண்களை பொது வாழ்வில் நிராகரிக்கும் அரிஸ்ரோட்டில் ஸ்பார்ட்டாவின் ஆட்சிமுறையினை ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தார்.
ஸ்பார்டாவில் இலஞ்சம், ஊழல் என்பன வலுவடைந்திருந்தது.. நீதிபதிகளின் வாழ்வாதராம் மிகவும் கீழ் நிலையிலிருந்தது. இதனால் இவர்கள் இலஞ்சம் பெறுபவர்களாக இருந்தனர். நாட்டின் அரசியலமைப்பு கூறும் விதிகள் ஒன்றாக இருக்க நடைமுறை வேறு ஒன்றாக இருந்தது. இவற்றினை நிராகரிக்கின்ற அரிஸ்ரோட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதுடன் ஸ்பார்ட்டாவின் ஆட்சிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் வாதிட்டுள்ளார்.
அரிஸ்ரோட்டில் அரசு பற்றிய கருத்துக்களை தனது அரசியல் எனும் நூலின் மூலம் கூறியுள்ளார். இந்நூலின் மூலம் இலட்சியரசு ஒன்றை உருவாக்க அல்லது அரசியல் தத்துவம் ஒன்றை உருவாக்க அரிஸ்ரோட்டில் முயற்சிக்கவில்லை. பதிலாக தனது காலத்தில் கிரேக்கத்திலிருந்த நகர அரசுகளின் பல்வேறு அரசியல் யாப்புக்களையும் ஆராய்ந்து அவற்றிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை விளக்கியுள்ளார். இவ்வகையில் அரிஸ்ரோட்டில் எழுதிய அரசியல் என்ற நூல் அரசியலின் முக்கியத்துவம், அரசு ஒன்றின் பகுதிகள் போன்ற விடயங்களை ஆராய்கின்றது.
2. அரசியல் யாப்பு
மனிதன் தான் வாழும் ‘அரசியல் யாப்பின்’ ஒரு பகுதியாகும். அரசியல் யாப்பிலிருந்து மனிதன்; பிரிந்து விட்டால், தனது குறிக்கோளினை அடைய முடியாது. குடும்பம், சமுதாயம் என்பன அரசியல் யாப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பொழுதே தனது தேவைகளை அவற்றினூடாக மனிதன் பூர்த்தி செய்ய முடியும். இது தொடர்பாக கூறும் அரிஸ்ரோட்டில்
“ஒழுங்குபடுத்தலால் விலங்கினங்களுக்குள் சிறந்து விளங்கும் மனித இனம், சட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் விலங்குகளுக்குள் படுமோசமான விலங்காகி விடுகின்றான். சட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டுமானால் அதற்கு நாடு, அரசியல் என்பவைகள் தேவை” எனக் கூறுகின்றார்.
அரசியல் யாப்புக்களை வகைப்படுத்தியவர்களில் முன்னோடியாக அரிஸ்ரோட்டில் கருதப்படுகின்றார். அவர் அரசியல் நிறுவனங்களுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களைக் கொடுக்க முயற்சித்துள்ளார். இவரின்; யாப்பு வகைப்பாடுகளில் இரண்டு பிரதான அடிப்படை பண்புகள் காணப்படுகின்றன.
  • ஆளும் அதிகாரத்தினை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை
· அரசினுடைய இலக்கு (End of the State)
அரிஸ்ரோட்டிலின் வாதத்தின்படி அதிகாரத்தினை வைத்திருக்கும் நபர்களைப் பொறுத்து அரசாங்க முறையில் ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி பண்புகள் வெளிப்படுகின்றன. இவ் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தும் அதிகாரத்தின் பண்பானது சிறப்பானதாக (Good) அல்லது தீயதாக (Bad) அமையலாம். பொதுநோக்கத்திற்காக அல்லது பொதுநலனிற்காக ஆளும் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் அது சிறப்பான ஆட்சியாகக் கருதப்படும். மாறாக சுயநலனிற்காக ஆளும் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் அது தீமையான ஆட்சியாக கருதப்படும். இவ்வகையில் அரிஸ்ரோட்டில் அரசியல்யாப்புக்களை ஆறு வகையாக வகுத்துள்ளார். ஆறுவகை யாப்புக்களும் ஆட்சியாளர்களின் பண்புகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டன.
வகைப்பாடுகள் நல்ல அல்லது உண்மையான ஆட்சிமுறை (Normal) தீய அல்லது தவறான முறை (Prevented )
ஒருவராட்சி (One) முடியாட்சி (Monarchy) வல்லாட்சி (Tyranny)
சிலராட்சி (Few) உயர்குடியாட்சி (Aristocracy) சிறுகுழுவாட்சி (Oligerachy)
பலராட்சி (Many) மிதமான குடியாட்சி (Polity) மக்களாட்சி (Democracy)
ஆரம்பகாலத்தில் தனிமனிதனொருவனின் ஆட்சியே சாத்தியமானதாக இருந்தது. இவ் ஆட்சி நீதி, நேர்மை கொண்ட மன்னராட்சியாக இருந்தது. காலப்போக்கில் மன்னனின் நேர்மையும், நீதியும் வலுவிழந்து சென்றபோது அது சர்வாதிகார ஆட்சியாக மாற்றமடைந்தது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து இவ் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், சிலரை ஆட்சியாளராகக் கொண்ட புதியதொரு ஆட்சி அமைக்கப்பட்டது.
சிலராட்சியில் உயர்குடியாட்சிப் பண்புகள் காணப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்சிமுறையாக இது காணப்பட்டதுடன், காலப்போக்கில் உயர்குடியாட்சியிலிருந்து செல்வாக்குடைய பிரபுக்கள் உருவாகினர். இவர்களுடைய அதிகாரம் மேலோங்க ஊழலும், அமைதியின்மையும் கொண்ட சிறுகுழுவாட்சியாக இது மாற்றமடைந்தது. பிரபுக்களின் அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்ட மக்கள் சிலராட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து இச்சிறுகுழுவாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் புதிய ஆட்சி முறையாகிய பலராட்சி உருவாக்கப்பட்டது.
இப்பலராட்சியில் பலர் பங்கெடுப்பதால் இதுவொரு மிதமான குடியாட்சியாகக் காணப்பட்டது. இவ்வாட்சியில் பங்கெடுக்கும் பலர் பெரும் எண்ணிக்கையினராக மாற்றமடைந்து மக்களாட்சியாக வளர்ந்தது. மக்கள் அனைவரும் ஆளும் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதை அரிஸ்ரோட்டில் விரும்பவில்லை. அறிவுடையவர்களே ஆட்சி புரிய வேண்டும் எனும் பிளேட்டோவின் சிந்தனையினால் கவரப்பட்டிருந்த அரிஸ்ரோட்டில் மக்களனைவரையும் ஆளும் தகுதியுடையவர்களாக கருதவில்லை. மக்களாட்சியில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து அராஜகத்திற்கு வழிவிடும் என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார்.
i. ஆளும் வர்க்கம்
அரசு மூன்று வகையான வர்க்கங்களைக் கொண்டு காணப்படும். ஆவைகளாவன பணக்கார வர்க்கம், ஏழைகள் வர்க்கம் ,நடுத்தர வர்க்கம் என்பவைகளாகும்.
பணக்கார வர்க்கத்தினர் ஆணவம், இறுமாப்பு, வன்முறை, பலம், அழகு கொண்டவர்களாக காணப்படுவார்கள். ஏழைகள் பலவீனமானவர்களாகவும், அழகு இல்லாதவர்களாகவும், தாழ்வுணர்வு, பொறாமை, வஞ்சகம் போன்ற குணாம்சங்கள் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். வறுமை இவர்களை அடிமைகளாகவும் கட்டளை இட முடியாதவர்களாகவும் ஆக்கிவிடுகின்றது. பணக்கார வர்க்கம் சட்டத்திற்கு கீழ்படியாது. ஏழைகள் சட்டத்திற்கு வளைந்து கொடுத்து செயற்படுவார்கள். இந்நிலையில் பணக்காரர்கள் அரசை ஆட்சி செய்தால் அது கொடுங்கோண்மை ஆட்சியாக (Despotic) மாற்றமடையும். அதேநேரம் ஏழைகள் ஆட்சி செய்தால் அது வெறுக்கத்தக்க அல்லது பயனற்ற (Despicable) ஆட்சியாக மாற்றமடையும். இவ்விரண்டு வர்க்கத்தில் எது ஆட்சி செய்தாலும் அரசு மோதல்களாலும் ,பொறாமையினாலும் சிதைவடைந்து விடும். இவர்களால் நண்பர்களையும், ஐக்கியத்தையும் உருவாக்க முடியாது.
எனவே ஒரு அரசு சிறப்பாக ஆட்சி செய்யப்பட வேண்டுமாயின் அது மத்திய தர வர்க்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வர்க்கம் அதிக பணம் படைத்த வர்க்கமும் அல்ல. அதேநேரம் சொத்தில்லாத ஏழைகளுமல்ல. இதனால் இவர்கள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் சாதகமாக ஆட்சி செய்வார்கள். மத்தியதர வர்க்கமே மற்றைய இரண்டு வர்க்கத்தினரையும் சரியாகப் புரிந்து செயற்படக் கூடிய வர்க்கமாகும். மத்தியதர வர்க்கத்தினரின் ஆட்சி ஏனைய இரு வர்க்கத்தினராலும் சதி செய்யப்பட்டு கவிழ்க்கப்படமாட்டாது. ஏனெனில் பணக்கார வர்க்கமும், ஏழை வர்க்கமும் ஒரு போதும் ஒன்று சேர்வதில்லை. ஆகவே சிறப்பான ஆட்சி உருவாக வேண்டுமானால் மத்தியதர வர்க்கத்தினரிடமே ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும். இதனை அரிஸ்ரோட்டில் மிதமான குடியாட்சி (Polity) அல்லது அரசியல் யாப்பு அரசாங்கம் (Constitutional Government) என அழைக்கின்றார்.
அரிஸ்ரோட்டில் வரைவிலக்கணப்படுத்தும் மிதமான குடியாட்சி என்பது பொதுவான நலன்களுக்காக பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் செயற்படுவதாகும். இங்கு மத்தியதரவர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுவார்கள். அத்துடன் ஏழைகள், பணக்காரர்களை விட பலமானவர்களாகவும் இருப்பார்கள்.
ii. புரட்சிகள்
சிலர் ஆட்சிக்கும், குடியாட்சிக்குமிடையில் ஏற்படும் மோதலின் விளைவுதான் புரட்சியாகும். மக்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்ற நிலையில் குடியாட்சி பிறக்கிறது. ஏனெனில் மனிதர்கள் பிறக்கும் போது சமமான சுதந்திரத்துடனேயே பிறக்கின்றார்கள். இதனால் இவர்கள் முழுமையான சமத்துவத்தினை கோரி நிற்கின்றார்கள்.
அதேநேரம் சிறுகுழுவாட்சி இக்கருத்தினை நிராகரிப்பதுடன் எல்லோரும் சமத்துவத்தினை கோர முடியாது. உதாரணமாக பிறக்கும் போது சமமற்ற சொத்துடமையின் வாரிசாகவே பிறக்கின்றார்கள். பின் எவ்வாறு சமத்துவத்தை கோர முடியும் என்பது இவர்களின் வாதமாகும். எனவே சில விடயங்களில் சாதாரண மக்களைவிட தாங்கள் மேன்மக்களாக சிறுகுழுவாட்சியினர் கருதுகின்றனர். இந்நிலையில் இவ்விரண்டு கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதால் புரட்சி ஏற்படுகின்றது. சிறுகுழுவாட்சியிலுள்ள தீமையான அம்சங்களே விரைவில் புரட்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். இவற்றை விட புரட்சி நிகழ்வதற்கு வேறு சில காரணங்களையும் அரிஸ்ரோட்டில் முன்வைக்கின்றார்.
அந்தஸ்து, அதிகாரம் பற்றிய சிந்தனை பெருமளவில் எல்லோரிடமும் காணப்படும் பண்பாகும். தனி மனிதர்களை விட குழுக்களிடம் இப்பண்பு அதிகமாக காணப்படுகின்றது. அந்தஸ்திலும், அதிகாரத்திலும் தம்மை விட மற்றவர்கள் கூடியவர்களாக இருப்பதை சகிக்க முடியாத குழுவினர் இதனை எதிர்த்து புரட்சி செய்யலாம். அதாவது தம்மை விட குறிப்பிட்ட குழுவினர் அந்தஸ்திலும், அதிகாரத்திலும் கூடியவர்களாக இருக்கின்றனர் என மாற்றுக்குழு கருதுவதுடன் இது அநீதியானது என்ற உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இந்நிலையிலும் புரட்சி தோன்றலாம்.
அரசிற்குள்ளே ஒரு குறிப்பிட்ட பகுதி பொருளாதார நிலையிலோ, அல்லது சமூக அந்தஸ்திலோ அல்லது வர்த்தகத் துறையிலோ மற்றப் பகுதியை விட மிகச் சிறந்து விளங்கலாம். இதனால் சிறப்பாக வளர்ச்சியடைந்த பகுதி தம்மை ஆக்ரமித்து விடுமோ என்ற அச்சம் ஏனைய பகுதி மக்களுக்கு ஏற்படலாம். இவ்வச்சம் சிறப்பாக வளர்ச்சியடைந்த பகுதி மக்களுக்கு எதிராக புரட்சி செய்யக் காரணமாகலாம் என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். இவற்றைத் தவிர, பரம்பரையாக இருந்து வரும் பகைகள்,பல்வேறு பகுதிகள் அல்லது சமூகத்தினர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடாத்தும் பேராட்டங்கள்,அரசியல்வாதிகள் வழக்கத்திலிருந்து வரும் கொள்கைகளையும், சம்பிரதாயங்களையும் சட்டத்தின் மூலம் மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றினாலும் புரட்சி ஏற்படலாம்.
3. அரசின் தோற்றம்
அரசு ஒன்றின் தோற்றம் தொடர்பாக பல கருத்துக்களை அரிஸ்ரோட்டில் முன்வைக்கின்றார். முதலில் குடும்பம் என்ற சமுதாய அமைப்புத்தான் தோன்றியிருக்க வேண்டும். குடும்பம் கிராமமாகி, கிராமம் நகரமாகி, நகரம் அரசாகியது. இப்படிமுறை வளர்ச்சியின் இறுதியில் தோற்றம் பெற்றதே அரசாகும். அரசு எல்லா நிநுவனங்களிலும் மிகவும் இயற்கையான அமைப்பாகும். அரசு தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும்போது
“அரசு இயற்கையின் படைப்பு. மனிதன் இயற்கையாகவே அரசியல் மனப்பாங்குள்ள ஜீவன். அரசு என்ற முழுப் பொருளின் அங்கமே மனிதன். அதிலிருந்து அவன் தனியே பிரிந்து விட்டால் அவனுக்குத் தன்னிறைவு கிடையாது. இவ்வாறு இல்லாமல் சமுதாயத்தில் வாழமுடியாதவன் அல்லது தனி வாழ்வில் தன்னிறைவு பெற்றிருப்பவன் மனிதனல்ல. அவன் அரசியலின் ஒரு பகுதியுமல்ல. அவன் கடவுளோ, மிருகமோ தான்”. எனக் கூறுகின்றார்.
அரசியல் சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கு அதன் அங்கங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் சமுதாயத்தின் அங்கங்கள் குடும்பங்களாகும். குடும்பத்தின் அங்கங்கள் கணவன்,மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அடிமைகள் என்பவைகளாகும்.
i. குடும்பம்
குடும்ப உறவு தொடர்பாக அரிஸ்ரோட்டில் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். ஆணைவிட பெண் தாழ்ந்தவள். எஜமானனுக்கு இருக்கும் அடிமையைப் போன்று ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும். உயிரினங்களைத் தர வரிசைப்படுத்தும் போது ஆணுக்கு அடுத்த நிலையிலேயே பெண்ணை நிலைநிறுத்து முடியும். உலக இயக்கங்களுக்கான அடிப்படையினை கொடுப்பவன் ஆணேயாகும். ஆண் ஒருவனை ஏற்றுக் கொள்ளும் பண்புடையவள் தான்; பெண். இது தொடர்பாக கூறும் அரிஸ்ரோட்டில்
“ பிளேட்டோ குடியரசு என்னும் நூலில் கூறுவதைப் போன்று பெண்ணையும் ஆணைப் போல் வளர்த்தால் அது அனர்த்தத்தையே விளைவிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் பரந்து இருக்க வேண்டும். அது தான் அழகு. ஆணுக்கும் பெண்ணுக்கும் துணிவு ஒன்று தான் என சாக்ரட்டிஸ் கூறுவது தவறு. ஆணின் தைரியம் அவன் இடும் கட்டளையிலேயே தங்கியுள்ளது. பெண்ணின் தைரியமோ அதற்குக் கீழ்படிவதிலேயே தங்கியுள்ளது. மௌனமாக இருத்தலே பெண்ணிற்குப் பெருமையாகும்” எனக் கூறுகின்றார்.
ஆண்கள் 37 வயது வரை திருமணம் செய்யக் கூடாது. 37 வயதின் பின்னர் 20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். இவ் வயது வேறுபாடு இருந்தால் தான் பெண்ணை அடக்கியாளமுடியும். அத்துடன் இவ்வயது வேறுபாடு உடல் நலத்திற்கும், சந்ததி விருத்திக்கும் அவசியமானதாகும். அன்பை விட உடல்நலமே பெரிதாகும்.
ஆனால் இவ்விடயங்கள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை இளைஞர்களுக்கு கிடையாது. இளைஞர்களின் திருமண வயது எது?, எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்களை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். சனத்தொகை அதிகரிப்பினை கட்டுப்படுத்த வேணடிய தேவை ஏற்படின் பிறந்த பின் கொல்லப்படுவதை விட கருவிலேயே சிதைத்து விட வேண்டும்.
பிளேட்டோ ஆளும் வர்க்கத்தினருக்கான பொதுவுடமைக் குடும்பத்தை உருவாக்கியுள்ளார். பிளேட்டோவின் கருத்துப்படி ஆளும் வர்க்கத்தினருக்கு தனிப்பட்ட வீடோ, சொத்தோ, மனைவியோ, குழந்தைகளோ இருக்கக் கூடாது. ஆளும் வர்க்கத்தினர் அனைவரும் ஒரே உணவை உண்டு ஒரே இடத்தில் உறங்க வேண்டும். அவர்களுக்குத் தனிப்பட்ட குடும்பம் என்ற ஒன்று இருக்கக் கூடாது.
பொதுநல சமுதாயத்தின் மீது அவர்களின் அன்பும், அக்கறையும் குறையாது இருக்க வேண்டுமாயின் ஆளும்வர்க்கத்தினர் தனிப்பட்ட பெண்கள் மீதோ, குழந்தைகள் மீதோ அன்பு வைக்கக் கூடாது. ஆளும் வர்க்கத்தினர் அனைவருக்கும் மனைவிகள் பொதுவுடமையாகும். ஆனால் இதற்காக விரும்பியபடி இனவிருத்தி செய்யக்கூடாது. அரசாங்க மருத்துவர்களின் பராமரிப்பின் கீழ் அவர்கள் கொடுக்கும் திகதிகளில் மாத்திரமே இனவிருத்தியில் ஈடுபட வேண்டும். குழந்தை பிறந்ததும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு பொதுநிலையம் ஒன்றில் வளர்க்கப்படும். ஆளும் வர்க்கத்தினரை திருமணம் செய்யும் பெண்கள் ஆளும்வர்க்கத்தினர் அனைவருக்கும் மனைவிகளாகிக் குழந்தைகளைப் பெற்றுப் பொதுவாக வளர்க்க வேண்டும். ஆளும்வர்க்கத்தினரின் ஒவ்வொரு மூத்த ஆண்மகனும் தகப்பன் அல்லது சகோதரன் ஆகும். அதேபோல் ஒவ்வொரு மூத்த பெண்ணும் தாய் அல்லது சகோதரியாகும்.
பிளேட்டோவின் இக்கருத்தினை அரிஸ்ரோட்டில் முழுமையாக நிராகரிக்கின்றார். எல்லோரும் தந்தை அல்லது சகோதரன் என்ற பொதுமைக் கருத்தானது இயற்கைக்கு முரணானதாகும். இதன்மூலம் உண்மையான தாய்,தந்தை, சகோதரன்,சகோதரி அன்பு உருவாக முடியாது. இது தொடர்பாக கூறும் போது
“ஒரு பொருள் நம்முடையது என்ற உண்மையும் அது நம்மிடத்தில் உண்மையான அன்பைத் தோற்றிவிக்கிறது என்ற உணர்வும் தான் மக்களிடத்தில் அன்பையும் அக்கறையையும், தோற்றிவிக்கின்றன. எனது என்ற உணர்ச்சி இல்லாத போது அன்பே இல்லாது போய்விடும். எல்லாம் நமது என்ற போலியான உணர்வே ஏற்படும்”என்கின்றார்.
ii. அடிமை
சமுதாயத்தில் எஜமான் – அடிமை உறவு பிரதானமான அலகாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் சிலர் அடிமைகளாக இருக்க வேண்டியது இயற்கையின் நியதியாகும். சிலர் பிறக்கும் போதே அறிவுத்திறனற்றவர்களாகவும், சுயமாக வாழத் தெரியாதவர்களாகவும் பிறந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு அறிவூட்டி, விழிப்படைய வைப்பது வீண்நேரவிரயமாகும். பதிலாக ஏனையவர்கள் இவர்களை அடக்கி ஆட்சி செய்து என்ன தொழிலை, எப்போது செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் ஆளப் பிறந்தவர்கள். இவர்கள் அறிவற்றவர்களை தமது உடமைகளாகக் கருதி அவர்களிடமிருந்து வேலை வாங்கி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுவே நீதியுமாகும். வீட்டு மிருகங்களை மனிதன் தனது உடமைகளாகக் கருதி காப்பாற்றுவது போன்று அடிமைகளை எஜமான் உடமையாகக் கருதி பாதுகாக்க வேண்டும். அடிமை உயிருள்ள இயந்திரமாக செயற்பட வேண்டும்.
இயற்கையாகவே ஆளப்படுவதற்காகப் பிறந்தவர்கள் பணிய மறுத்தால் அவர்கள் மீது போர் தொடுப்பதே நியாயமானதாகும். இப்போரில் இவர்கள் தோற்றுவிட்டால் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வது நீதிக்குப் புறம்பானதல்ல. எனவே இயற்கையின் நியதி என்ன என்பதை யுத்தமே தீர்மானிக்க வேண்டும்.
“ஒருமைப்பாடு எந்தளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்தளவிற்கு அது நாட்டிற்கு நல்லது” என்ற பிளேட்டோவின் கருத்தினை அரிஸ்ரோட்டில் நிராகரிக்கின்றார். “ஒருமைப்பாடு ஓரளவிற்கு மேல் மிஞ்சினால் தீமையே ஏற்படும்.ஏனெனில் அது இயற்கையின் நியதிக்கு முரணானதாகும்” என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். வேற்றுமை இயற்கையின் நியதி. இதனை மாற்றியமைப்பது இயற்கையுடன் முரண்படுவதற்குச் சமமானதாகும். எனவே ஒருமைப்பாடு பற்றி விவாதிப்பது சமூகத்திற்கு நன்மையளிக்கும் என்பதை விட தீமையையே விளைவிக்கும்.
பிளேட்டோ கூறும் “இலட்சியரசு” என்பதை அரிஸ்ரோட்டில் விமர்சனம் செய்கின்றார். தனிமனிதர்களின் சுதந்திரம், திறமை, தரவேறுபாட்டின் அவசியம் என்பவற்றில் அரிஸ்ரோட்டில் நம்பிக்கை கொண்டவராகும். இந்நிலையில் சட்டங்களையும், காலங்காலமாக நடைமுறையில் இருந்து வரும் விதிகளையும் திடீரென மாற்றியமைப்பதால் தீமையே ஏற்படும்.
iii. பொருளாதாரம்
அரசு ஒன்றில் பொருளாதாரத்தின் வகிபங்கு தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறுகின்றார். தனியார் சொத்துடைமையினை அரிஸ்ரோட்டில் ஆதரித்துள்ளார். ஒருவன் எந்தத் தொழிலை திறம்பட செய்ய முடியுமோ அதனைச் செய்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். தனது தொழிலை திறமையாக நடத்துவதற்கு அவனுக்கு மூலதனம் தேவை. எனவே சொத்து வைத்திருப்பது இயற்கையின் நியதியாகும். சொத்துக்களைச் சேர்த்தல் என்பது நிலங்களைச் சரிவரக் கவனித்து வருவதன் மூலம் கிடைக்கும் வருவாய்களாகும். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“விலங்கினங்களுக்கு உணவு தேடும் உணர்ச்சி இருப்பது எவ்வளவு இயற்கையானதோ அதேயளவிற்கு மனிதர்களின் சொத்து சேர்ப்பதற்கான உணர்ச்சியும் இயற்கையானதாகும். ஒரு அரசிலுள்ள வீடுகளில் பயன்படுத்துவதற்குரிய கருவியே சொத்தாகும்” என்கின்றார்.
வர்த்தகம் செய்து சொத்துக்களை சேகரிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது இயற்கைக்கு முரணானதாகும். எனவே இது வெறுக்கப்பட வேண்டும்.
இதனைவிட வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பது மேலும் இயற்கைக்கு முரணானதாகும். ஏனெனில் பணம், பொருளை கொள்வனவு செய்யவும், விற்பனை செய்யவும் பயன்படும் கருவியேயன்றி அது தன்னைத் தானே வளர்ப்பதற்கு பயன்படும் கருவியல்ல. சொத்துச் சேகரிக்கும் வழிமுறைகள் யாவற்றிலும் இயற்கைக்கு முரணானது இதுவாகும்.
சொத்துக்கள் யாவும் எல்லோருக்கும் சொந்தமாக இருக்கும் நிலை இருக்குமானால் அதன் மீது யாரும் கவனம் செலுத்தமாட்டார்கள். இலாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கை இருந்தால்தான் உழைப்பில் அக்கறை ஏற்படும். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“இலட்சியரசு பற்றிய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் மக்கள் எளிதில் செவிசாய்க்கின்றார்கள். அனைவரும் அனைவருக்கும் நண்பர்களாகி விடுவார்கள் என்பதை நம்புகின்றார்கள். அதிலும் ஒருவன் தற்போதைய சமுதாயத் தீமைகளை எடுத்துக் கூறும் போது இந்நம்பிக்கை பலப்படுகின்றது. அத்தகைய தீமைகளுக்கு காரணம் தனிப்பட்டோர் சொத்து உரிமையே என்று கூறப்படுகின்றது. ஆயினும் உண்மை அதுவல்ல. மனிதனின் தீய இயல்புகளே சமுதாயத்தில் காணும் தீமைகளுக்கு அடிப்படை” என்று கூறுகின்றார்.
iv. பிரஜாவுரிமை
அரசின் நிர்வாகப் பொறுப்பில் பங்கு ஏற்கக் கூடிய அதிகாரம் கொண்டவர்கள் அந்த அரசின் பிரஜைகளாகும். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் அரசில் பிரஜாவுரிமையும், வாக்களிக்கும் உரிமையும் கிடையாது. எனவே இவர்கள் பொதுவாழ்விலும், அரசியலிலும் இவர்களுக்கு இடம் கிடையாது. இவர்கள் இருசாராரும் தமக்கென ஒரு கருத்தினை உருவாக்க முடியாதவர்களாகும். எனவே இவர்களுக்கு அரசில் பங்கு கொடுக்கத் தேவையில்லை.
இவர்களை விட சொத்தில்லாத ஏழைகளுக்கும் பிரஜாவுரிமை வழங்கக் கூடாது. இவர்கள் நாளாந்தம் தமது உணவிற்காக ஏங்குபவர்கள். இவர்களால் ஓய்வாக இருந்து சிந்தித்துச் செயற்பட முடியாது. இவர்கள் அரசில் பங்கேற்பதால் இவர்களுக்கும், அரசிற்கும் எவ்வித இலாபமும் இல்லை.
மேலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கக் கூடாது. ஏனெனில் இவர்கள் செய்யும் தொழில் நல்வாழ்விற்கு ஏற்றதல்ல. எனவே பெண்கள், அடிமைகள், சொத்தில்லாதோர், வர்த்தகர்கள், தொழிலாளிகள், தவிர்ந்த ஏனையோர் நாட்டின் பிரஜைகளாகத் தகுதியுள்ளவர்களாகும். இவர்கள் சட்டங்கள் இயற்றவும் நீதி வழங்கவும், நிர்வாகம் செய்யவும், உரிமை உடையவர்களாகும்.
v மாதிரி அரசு
மாதிரி அரசு (Model State) ஒன்று எவ்வாறு உருவாக வேண்டும் என்பது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கருத்துக் கூறியுள்ளார். நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரவளம் அரசுகளில் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சகல விடயங்களினையும் நிர்வகிக்க கூடிய வகையில் அளவான சனத்தொகை இருக்க வேண்டும். அரசு ஒன்றின் எல்லையை நிர்ணயம் செய்த பின்னர் அதில் வாழக் கூடிய மக்கள் தொகையினை அரிஸ்ரோட்டில் தீர்மானிக்கின்றார். பொதுவாக ஒரு அரசின் சனத்தொகையானது அதன் வளத்தையும், அது அமைந்திருக்கும் இருப்பிடத்தையும் பொறுத்ததாகும். ஆயினும் ஓர் அரசில் 10,000 மக்களுக்கு மேல் வாழ்வது பொருத்தமானதல்ல.
மிகப் பெரிய அரசுகளாக இருந்தால் அவற்றை ஆட்சி செய்வது மிகவும் கடினமாகும். ஆனால் பொருளாதார தன்னிறைவு பெற்றிருப்பதற்கு ஏற்ப அவை பெரிதாக இருக்க வேண்டும். பெரிய அரசாக இருந்தால் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளமுடியாது. மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் சிறியதாகவும் இருக்கக் கூடாது. “ஒரு குன்றின் மீது ஏறிப் பார்த்தால் அரசு முழுவதும் தெரிய வேண்டும்”அதுதான் அரசிற்கான சிறந்த அளவு என அரிஸ்ரோட்டில் கூறுகின்றார்.
அதேநேரம் தற்பாதுகாப்புக்கு ஏற்ற அளவாகவும் இருக்க வேண்டும். எதிரிகள் படை எடுத்து வந்தால் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இது போர் முறைகளையும், மக்களின் போர் திறன்களையும் பொறுத்தாகும். போரிடுவது ஒரு அரசின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. அடிமை வாழ்வுக்கென்று பிறந்தவர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமைப்படுத்தி வாழ்வது தான் உண்மையான போர்.
மக்கள் திருப்தியாக வாழும் வகையில் போக்குவரத்து, தற்பாதுகாப்பு கொண்ட எல்லைகள் என்பன இருக்க வேண்டும். கடல் சார்ந்த வியாபாரம் செய்வதற்கு ஏற்ற துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டும். உடல், மனம் சிறப்பாக இருக்கக் கூடிய காலநிலை இருக்க வேண்டும். இவற்றைவிட பல்வேறு துறைகளிலும் பயிற்சி பெற்ற மக்கள் நாட்டில் இருக்க வேண்டும். ஆகவே “மக்கள் மிகச் சிறந்த வாழ்க்கை நடாத்த வாய்ப்பளிப்பதுதான் சிறந்த அரசியல்” என்பது அரிஸ்ரோட்டிலின் கருத்தாகும்.
vi அரசின் குறிக்கோள்
அரசாங்கத்தின் முக்கியமான கடமை கல்வித் திட்டத்தினை வகுத்து அதற்கு ஏற்ப மக்களுக்கு கல்வியறிவூட்டுவதாகும். மக்களுக்கு அவர்கள் வாழும் அரசியல் முறைமைக்கு ஏற்ப கல்வியளித்தால் தான் அரசியலமைப்பு நிலைத்து நிற்கமுடியும். பொதுக் கல்வி நிலையமொன்றை உருவாக்கி பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி அறிவூட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு நற்பண்பு போதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாளடைவில் நற்பண்புகள் வளர்ந்து நற்செயல்களை மேற்கொள்ளத் தொடங்குவர். இவர்கள் பின்னர் நற்பிரசைகளாகி ஆட்சியை அமைக்கும் தகுதி பெற்றுவிடுவார்கள். இது தொடர்பாக அரிஸ்ரோட்டில் கூறும் போது
“மனிதன் பிறக்கும் போது அறிவாற்றலுடன் பிறக்கின்றான். தீயவழிகளில் அதை அவன் பயன்படுத்தினால் முடிவு மிகுந்த விபரீதமாக இருக்கும். நற்பண்புகள் இல்லாவிடில் மனிதன் மிகுந்த மூர்க்கமானதொரு மிருகம் தான். அதாவது பேராசையும், காமமும் கொண்ட மிருகம். சமுதாயக் கட்டுப்பாடு தான் அவனுக்கு நற்பண்புகளை அளிக்கமுடியும் என்கின்றார்.
பொதுக்கல்வி நிலையத்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் போது அங்கும் தர நிர்ணயத்தினை அரிஸ்ரோட்டில் விதிக்கின்றார். யார் யார் அரசு ஒன்றின் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்களோ அவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் கல்வி போதிக்கப்பட வேண்டும். அடிமைகள், தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு பயன்தரக் கூடிய தொழிற் கல்வியை மாத்திரம் கற்பிக்கலாம். இக்கல்வியானது கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படக்கூடாது. அரிஸ்ரோட்டிலின் கல்விக் கொள்கைகள் பிளேட்டோவின் கல்விக் கொள்கைகளுக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது.

மாலைத்தீவுகள்


மாலைத்தீவுகள்

அறிமுகம்

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 298 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். இதன் தலை நகரமான மாலே 2 கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது. மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் 'மாலத்வீப'(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது 'மகால்' என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். மாலைத்தீவு 26 தீவு திட்டங்களும் 19 நிர்வாகப்பிரிவாக ஒன்றினைக்கப்பட்டடுள்ளதுடன் அதன் தலைநகராக மாலேவே காணப்படுகின்றது.

மலைத்தீவு மக்கள் முஸ்லிம்களாக காணப்படும் அதே வேளை உத்தியோகப்பூர்வ மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது. உலகில் மாலைத்தீவு பெண்களே அதிக சுதந்திரமுடையவர்கள் என்ற கருத்தும் காணப்படுகின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக 'திவெகி' காணப்படுகின்றது. சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களவர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு யூலை 26 ஆம் திகதி மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார். மலைத்தீவானது சுதந்திரமடைந்தன் பின்பு 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தவராக இணைந்து கொண்டது. அதே நேரம் 1976 ஆம் ஆண்டு கொழும்பில் நடைப்பெற்ற 5வது உச்சி மாநாட்டில் அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் இணைந்து கொண்டது.

வரலாறு

கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி கலாசார வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.

மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் 'ஏவிட்டா'(திவெயி) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயெ மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கி பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டன என கருதுகின்றார்.

மாலைத்தீவின் வாரலாற்றின் படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்புநிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைதீவில் தங்கும் படியாயிற்று அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைதீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தான் என கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைதீவை ஆண்டார்கள் இவர்கள் தங்களை தமிழரின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1988 இல் இலங்கை தமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது

2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியது.

அரசியல்

மாலைத்தீவு ஒரு ஜனநாயமுறையிலான குடியரசு அரசாங்கத்தை கொண்டுள்ளது. குடியரசு அரசியலமைப்பு 1968 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது, மற்றும் 1970 1972 மற்றும் 1975 ல் திருத்தப்பட்டது. மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அவருக்க உதவியாக அமைச்சர் சபையையும் காணப்படுகின்றது. அதனை அவரே நியமிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது.  தேர்தல் வரும் போது மக்கள் மஜ்லிஸ் என்பது ஒருவரை நியமிக்கன்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அல்லது மக்கள் அவரை நிராகரிக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்ததின் படி அவர் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

ஜனாதிபதி தமது மந்திரி சபையை நியமிக்கின்றார். அமைச்சராக நியமிக்கப்படுபவர் மக்கள் மஜ்லிஸ் சபை அங்கத்தவராக இருக்கவேண்டும் என்பதில்லை. அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட பின்பும் கூட மஜ்லிஸ் சபை அங்கத்தவராக வர முடியும். அமைச்சரவை ஜனாதிபதிக்கு பொறுப்பாகவும் அவருக்கு வேண்டிய ஒத்தாசைகளை செய்கின்றது. ஆனால் எப்பொழுதுமே அமைச்சரவை ஆலோசனைகளை ஜனாதிபதி ஏற்கவேண்டுமென்பதில்லை. ஜனாதிபதி அரசியல் யாப்புக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

மாலைத்தீவுகளின் பாரளுமன்றம் மக்கள் மஜ்லிஸ் என அழைக்கப்படுகின்றது. இது 1957 இல் உருவாக்கப்பட்டது. இதில் 1968 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி 54 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். இவர்களில் 46 அங்கத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 8 மஜ்லிஸ்கள் அதாவது பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்கள். மலைத்தீவு தலைநகரமான மாலேக்கு எட்டு அங்கத்தவர்கள் உள்ளனர். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 77 பேர் தெரிவு செய்யப்பட்டனர். மாலைத்தீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. சட்டம் இயற்றும்பணியில் மஜ்லிஸ் சபை பங்குப்பற்றுகின்றது. ஜனாதிபதியும் சட்டம் இயற்றம் பணியை பெற்றுள்ளார். மஜ்லிஸ் சபை நம்பிக்கையில்லா தீர்மானம் இயற்றி யாராவது மந்திர்pயை நீக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. வேறு பெரிய அதிகாரங்கள் அதற்கில்லை.

ஜனாதிபதி முன்மொழியும் சட்டங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு திருத்தங்கள் சம்பந்தமாக பிரத்தியேகமாக நியமிக்கப்படும் மக்கள் மஜ்லிஸ் செயல்படுகின்றது. பிரதேசவாரியாக அங்கத்தவர்களை மஜ்லிஸ்சும் ஜனாதிபதியும் நியமிக்கிறார்கள். அரசியல் யாப்பு திருத்த பிரேரனைகளை கையாளும் இந்த ஸ்பெசல் மஜ்லிஸ் மாலைத்தீவு அரசியல் யாப்பில் ஒரு சிறப்பம்சம். அன்றாட நிர்வாக்கடமைகளை கவனிக்க ஒரு பணிக்குழுவோ சிவில் நிர்வாக அலுவலர்களோ இருந்தாலும் அது மற்ற நாடுகளை போன்று வலுவுள்ளதாக இல்லை. ஏனெனில் சிவில் நிர்வாக்கட்டமைப்பு ஒன்ற இருந்தாலும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளுக்கு மஜ்லிஸ்சே நியமிக்கப்படுகின்றார்கள். அதனால் அரசியல் தலையீடு நிர்வாகத்தின் பல நிலைகளிலும் உணரப்படுகின்றது. வி.எச். கொலின் தமது ஆராய்ச்சியில் இத்தகையதொரு நிர்வாக்கட்டமைப்பை வேறு எந்த தென்னாசிய நாடுகளிலும் காணமுடியாது என்கிறார்.

நீதித்தறை தலைவராக இருப்பவர் பிரதம நீதியரசர். அவரும் அவரது நீதிபரிபாலன குழுவும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் இஸ்லாம் மத கோட்பாடுகளையும் இஸ்லாமிய ஷரிஆவினையும் கருத்தில் கொள்ள வேண்டும்;. நீதித்துறையின் எல்லா நிலைகளிலும் மஜ்லஸ், காசிகள் என்போர் பங்கு பற்றுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகள் அரசியல் யாப்பு சட்டமாகவும் அன்றாட நீதிபர்பாலன ஒழுங்கு முறையாகவும் உள்ளது. நாட்டில் 194 நீதவான் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. மாலத்தீவில் சிவில் துறையும் நீதித்துறையும் மேலிருந்து கீழாக கூர் கோபுர அமைப்பில் காணப்படுகின்றது. அரசின் சகல துறைகளிலும் இஸ்லாமி சரியத் சட்டம் மேலோங்கி நிற்கிறது.  

நிருவாக அலகுகள்

மாலைதீவுகளின் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாக பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.

ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்க்ப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாக பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்கு பதில் கூறவேண்டியவர்களாவர்.

பொருளாதாரம்

மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தை கொண்டது. மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும். அதே நேரம் மாலத்தீவின் பணம் ருபியா என்றழைக்கப்படுகிறது.

 மீன்பிடி :- மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.

1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய 'டோனி' என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களை தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி பாடசாலை கல்வியில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைத்தீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிலாளர் படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயை கொடுக்கிறது.

சுற்றுலாத் துறை :- சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாக பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20மூ வழங்கும் சுற்றூலாத்துறை, நாட்டுக்கு கூடிய வெளிநாட்டு வருவாயை பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதலங்களுக்கு 2000 ஆம் ஆண்டு சுமார் 467,154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அண்மைக்காலத்தில் உல்லாச பயணிகளின்  வருகை அதிகரித்து காணப்படுகின்றது.

குடிசைக் கைத்தொழில் :- சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ச்சியை மறைமுகமாக அதிகரித்தது. பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல் போன்ற கைத்தொழில்கள் முக்கிய வளர்ச்சியைக் கண்டன.

ஏனைய துறைகள் :- தக்க மண்வளமும் நீரும் இல்லாததால் விவசாயம் வேரூண்ட வில்லை. இப்பொழுது பெருமளவ நிலப்பரப்பில் தெங்கு நடுகையில் ஈடுபட்டுளளனர். கால்நடை வளர்ப்பும் இல்லை. மாலைத்தீவில் விவசாயத்திற்கோ அல்லது கைத்தொழில் வளச்சிக்கோ வேண்டிய உள்ளீடுகள் இல்லை. இப்பொழுது அரசாங்கம் தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஏற்றுமதி என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. நான்கு மாதம் மழையும் ஏனைய மாதங்கள் வரண்ட நிலையம் சீரில்லாமல் காணப்படுகின்றது. அதனால் பெரிய காடுகள் உருவாகவில்லை.

25மூ வீத தேசிய உற்பத்தி கடற்தொழிலிருந்து பெறப்படுகிறது. தேங்காய், கொப்பரா போன்ற தெங்கு உற்பத்திகள் எற்றுமதியாகின்றன. உல்லாச பயணத்துறை மூலம் 20மூ  பொரளாதார அபிவித்தி கண்டுள்ளனர். உல்லாச பிரயாணிகள் பெரும்பாலும் தென்னாசியா, தென்கிழக்காசியா, யப்பான் போன்ற நாடுகளிலிருந்து வருகிறார்கள். அண்மைக்காலங்களில் பன்முகப்படுத்தப்பட்ட பொரளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.  1957 அம் ஆண்டு குடியரசின் இரண்டாவது ஜனாதிபதியான இப்ராகிக் நஸீர் ஸ்திரமாக ஆட்சி செய்தார். இவரே பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதில் முழுமூச்சாக நின்றார். இவரே மாலைத்தீவின் உல்லாச பிரயாணக்கைத்தொழிலுக்கு அடிப்படை வகுத்தவர். கயிறு உற்பத்தி, கப்பல் கட்டுமானம், தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி என்பவற்றில் அரசு கவனம் செழுத்துகின்றது. பொருளாதாரத்தை நவீனப்படுத்த முனைகிறது.  இலங்கை, இந்தியா, அரபு சாடுகளுடன் நல்லுறவ வைத்திருக்கிறது நவீன மாலைத்தீவு.

சமூக அமைப்பு

மாலைத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள், பாரசீகத்தவர்கள், அராபியர் போன்ற பல இனத்தவர்கள் வாழ்ந்துள்ளனர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். கிபி 12வது நூற்றாண்டில் மலாய தீவுகள், கிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர்.

மாலைத்தீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.

இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றப்படுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் செல்வம், இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறு பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை.

எ  கலாசாரம்

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாமின்  வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.

ஐந்து வேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள் பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களை பின்பற்றுகின்றார்கள். இங்கு 'பர்தா' முறை முகத்திரை போடும் வழக்கம் இல்லை. பெண்கள் அரசாங்கத்தில் பெரிய பதவிகள் வகிக்கின்றனர். இது முழுக்க முழுக்க ஒரு முஸ்லீம் நாடு, எனவே மற்ற மதங்களை சார்ந்த பொருட்கள், பத்திரிகைகள், படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

சவால்களும் எதிர்ப்புகளும்

மாலைத்தீவு அரசியலில் அரசியல் கட்சிகள் இல்லை. கட்சிக்கு எதிராக எந்த சட்டமும் இல்லாவிட்டாலம் மக்கள் கட்சி ரீதியாக அரசியல் நடாத்த விரும்ப வில்லை இதனை ஜனாதிபதி அப்துல் கயூம் பல சந்தர்ப்பங்களில் நிராகரித்துள்ளார். கட்சிகள் இன ,மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் என்று தலைவர்கள் நம்பினார்கள். ஆனால் அங்கு நலன்பேணும் குழுக்கள், மஜ்லீகள் அமைப்பு, வியாபாரிகள் சங்கம், என்பன அவ்வபோது  கோரிக்கைகள் எழுப்புகின்றன. ஆனால் அவ்வபோது அரசியல் கொந்தழிப்புகள் உருவாகின்றன. 1985ன் பின்பு கயூமின் காலத்தில் இரண்டு தடவையும் அதற்கு முன்பு ஒரு தடவையும் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக கிளர்சிகள் தோன்றின. 1988ல் ஏற்பட்ட கொந்தழிப்பை சமாளிக்க இந்திய உதவி நாடப்பட்டது. அதன்பிறகு மாலைத்தீவு அரசாங்கம் இந்திய உதவியோடு காவல் துறையினையும் இராணுவத்தினையும் புணர்நிர்மானம் செய்யத்தொடங்கியது. முதல் முறையாக கயூம் அரசாங்கம் இராணுவத்தை பலப்படுத்த ஆரம்பித்தது.

அப்துல் கையூம். இவரின் இடத்தைப் பலகட்சிகள் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து வீழ்த்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்தான் இந்த முகம்மது நசீத். இவர் ஆக நான்கு ஆண்டுகள் மாத்திரமே ஜனாபதியாக பதவி வகித்த நிலையில் திடீர் போராட்டம் மிகப்பெரிய கலவராமாக மாறும் நிலை தோற்றம் பெற்றவுடன் தானாகவே பதிவியை துறந்து அரசியலில் புதிய யுகம் படைத்திருக்கின்றார் முகம்மது நசீத். இவரின் எதேச்சதிகாரமே இங்கு கிளர்சிசி ஏற்பட பிரதான காரணம். அண்மைக்காலமாக பல நாடுகளில் உள்நாட்டுப் போராட்டம் ஏற்பட்டு புரட்சிகளாக வெடித்து வருகின்றமை யாவரும் அறிந்தவிடயமாகும். இதன் காரணமாக உயர் அரச பதவிகள் பறிபோயுள்ள நிலையில் சிலர் விட்டுக் கொடுப்புடன் பதவியைத் துறக்கவும் தயராகிவிட்டனர். இங்கு நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்தவர் மாமூன் அந்தவகையில் அரச கதிரையை விட்டுக் கொடுப்பதில் இறுதியாக இணைந்துகொண்ட நாடு மாலைதீவாகும். மேலும் மாலைத்தீவு எதிர் கொள்ளும் பிரச்சினை 2.3 மீற்றர் உயரம் கொண்ட நிலமே இங்கு காணப்படுவதால்  இன்னும் சில வருடங்களில் கடல் மட்டத்தின் உயர்வு இந்நாட்டை கடலுக்குள் அடிமையாகிவிடும் என்கிற அச்சமாகும்.

மலைத்தீவு தென்னாசிய பிராந்தியத்தில் தன்னை குடியரசாக நிலைநிறுத்தியுள்ள ஒரு நாடாகும். அதேநேரம் தனக்கென அரசியல் பொருளாதார சமுக அம்சங்களுடன் விளங்கும் நாடாகும். அரசியல் நிலை என்கிற போது ஜனாதிபதி, பாராளுமன்றம் என்ற மஜ்லிஸ், நீதித்துறை போன்ற கட்டமைப்புடன் ஜனாதிபதித்துவ ஆட்சியைக்கொண்டு விளங்குகின்றது. அதேபோன்று அந்நாட்டின் பொருளாதார அம்சத்தை எடுத்து கொண்டால் மீன்பிடி, சுற்றுலாத்துறை, குடிசைக்கைத்தொழில், ஏனைய உற்பத்திகள் என்ற வகையில் பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. மாலைத்தீவின் சமூகக் கட்டமைப்பை நோக்கும் போது பல்லினத்தவர்களின் கலப்பு இனமாவும் பிறகு முழு நாடும் முஸ்லிம்களாக மாறி முஸ்லிம் சமூக அமைப்பை கொண்டு காணப்படுகின்றது.  இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்நாடு பல உள்நாட்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்த போதும் தன்னை குடியரசாக நிலை நிறுத்திருப்பதே அதன் சிறப்பம்சமாகும்.


மா.சே.துங்.


மாக்சினதும், சீனத் தேசியவாதத்தினதும் கலப்பேமாவோயிசமாகும்.

                D. JEGATHEESWARAN
                B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
                SPECIAL IN POLITICAL SCIENCE

01. மா.சே.துங். அறிமுகம்

 இக்கால ஆசிய வல்லரசு நாடாகிய சீன மக்கள் குடியரசைப் பொதுவுடமைக் கொள்கையடிப்படையில் நிறுவிய அரசியல் தலைவர் மாவோ.சே.துங் ஆவார். நவசீனத்தின் சிற்பியான மா.சே.துங் 1893ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சீனாவின் ஹீனான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். தந்தை ஒரு விவசாயி.

     படிப்பை முடித்ததும் பள்ளிகூட ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். பின்னர் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலைய குமாத்தாவாகச் சேர்ந்தார். அப்போதுதான் கம்யூனிஸக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் உயர் அதிகார குழுவில் (பொலிட் பீரோ) உறுப்பினர் ஆனார்.

     சீனாவில் மன்னராட்சியை எதிர்த்து சன்யெட் சென் புரட்சி நடத்தியபோது மா.சே.துங் 18 வயது இழைஞர். புரட்சியின் மகத்துவத்தை நேரில் கண்ட அவர் புரட்சிக்காரராக மாறினார்.

     1931ஆம் ஆண்டில் சியாக்கி மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சிப் படை திரட்டினார். இதை அறிந்த சியாங்-கே-ஸேக், புரட்சிப் படையை ஒடுக்க இராணுவத்தை ஏவிவிட்டார். இதை அறிந்து கொண்ட மா.சே.துங் தன் புரட்சி படையினருடன் நிண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த தூரம் 8 ஆயிரம் மைல் தூரம். இந்த மகத்தான சாதனையைச் செய்ததால், கமடயூனிஸ்ட் கட்சியினரின் உள்ளத்தில் இடம் பிடித்தார். 1934இல் சீனக் கம்யூனிசக் கட்சியின் தலைவரானார்.

     இரண்டாவது உலகப்போர் மூண்டபோது, சீனாவை ஜப்பான் தாக்கியது. ஜப்பானிடம் இருந்து சீனாவை காப்பாற்றுவதே உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம் என்பதை உணர்ந்து உள் நாட்டில் தன் அரசியல் எதிரியாக இருந்த சியாங்.கே.ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டு ஜப்பானை எதிர்த்துப் போராடினார். போரில் ஜப்பான் தோர்த்தது. சிலாங்.கே.ஷேக் ஆட்சிக்கு எதிராக விவசாயிகளின் ஒத்துழைப்புடன் 'கொரில்லாப்போர்' நடத்தினார். அதனால் சிலா.கே.ஷேக் சீனாவை விட்டு ஓட்டம் பிடித்தார். பார்மோசா (இன்றைய தைவான்) தீவில் போய் உட்கார்ந்து கொண்டு ஒரு பொம்மை ஆட்சி நடத்தினார். ஆனால் சியாங்.கே.ஷேக் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா 1949 அக்டோபர் 1ம் திகதி குடியரசு நாடாகியது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிகராக மா.சே.துங் பதவி ஏற்றார்.

     அதிபரானதும் சீனாவை மன்னேற்றிச் செல்ல பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிரிட்டனை போல சீனாவை வளம் கொழிக்கும் நாடாக உருவாக்க வேண்டும், அதுவும் குருகிய காலத்தில் இதை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதிக ஆர்வத்தினால் அவர் மேற்கொண்ட திட்டங்கள் தோல்வி அடைந்தன. 1961க்கும், 1963க்கும் அடையே சினாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு 4 கோடிப்பேர் மாண்டனர்.

     'சீன மக்கள் அதிகம் படிக்காதவர்கள். அவர்கள் கல்வி கற்று அனுபவங்கள் பெற்ற பிறகே தீவிரமான திட்டங்களை அமுல்படுத்தியிரக்க வேண்டும். அர்வ மிகுதியால் நான் அவசரப்பட்டு விட்டேன்' என்று தனது தவறை மா.சே.துங் ஒப்புக் கொண்டார்.

     1970க்குப் பிறகு மா.சே.துங் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அரசு பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல் ஆலோசனைகள் மட்டும் கூறிவந்தார். 1976 செப்டெம்பர் 9ஆம் தேதி காலமானார். மாவோ.சே.துங்கின் கருத்துக்கள் மாவோயிசம் என்று கூறப்படுகின்றது.

     சீனப் பெருந்தவைலவரான மாஓசே துங்கின் சிந்தனைகபனைத் தோகுத்துக்கூறும் போது அவர் மாக்ஸிய தத்துவத்திற்கு எத்தகைனய பங்களயிப்பினைச் செய்துள்ளார் என்பதையும் ஒரு மாச்சிச – லெனினிச புரட்சிகரவாதி என்ற அளவில் எத்தகைய பங்களிப்பினை ஆற்றியுள்ளார் என்பதையும் நோக்குதல் அவசியமாகும்.

02. மா.சே.துங்கின் சிந்தனைகள்

 சீனப் பெருந்தலைவரான மா.சே.துங்கின் சிந்தனைகளை விரிவாக நோக்கும் போது இவருடைய கருத்துக்கள் சீனத் தேசிய வாதத்தினதும், மாக்சிஸத்தினதும் கருத்தாக அமைகின்றனவா என்பதனை அறிந்து கொள்ள முடியும். அவ்வகையிவல் மாவேலாசிம் எத்தகைய கருத்துக்களை முக்கியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன என்ற ஆய்வில் நடைமுறை பற்றிய கருத்துக்கள் மற்றும் முரண்பாடு, அரசு, புரட்சி, யுத்தம், தத்துவம், சீனப்புரட்சி, புதிய ஜனநாயகம் போன்ற கருத்துக்களைப் பற்றியும் ஆராயவேண்டியுள்ளது.  அவ்வகையில் மேற்படி கருத்துக்கள் ஓர் ஒப்பிட்டு ரீதியாக ஆராய்வதின் ஊடாக சீனத் தேசியவாத்த்தினதும், மாக்சிஸத்தினதும் கலப்பாகவா மாவோயிசம் காண்படுகின்றது, அல்லது அவற்றில் இருந்து விடுபட்ட வகையிலா காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ளத்தக்க வகையில் விளங்கங்களை இங்கு நோக்குவோம்.

03. நடைமுறை பற்றி மா.சே.துங்

     மாக்சிச தத்துவவியலாளரான மா.சே.துங்  இனுடைய இரண்டு குறிப்பிடத்தக்க ஆக்கங்களான நடைமுறை பற்றி, முரண்பாடுகள் பற்றி என்பன அவருக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாக்சிச தத்துவவியலாளரும், புத்தி ஜீவியும் என்ற அந்தஸ்தைக் கொடுத்தன. இவ்விரு ஆக்கங்களைக் கொண்டே அவரை உலக கொம்யூனிச இயக்கத்தின் முன்னனிக் கோட்பாட்டாளர்களுள் ஒருவராகக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. 1937ஆம் ஆண்டு இவ்விரு நூல்களும் அவரால் எழுதப்பட்டன எனக் கொள்ளப்படுகின்ற போதிலும் தற்போதய மாதிரியில் அவை 1950ஆம், 1952ஆம் ஆண்டுகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியில் காணப்பட்ட கருத்து முதல் வாதிகளின் பிடிவாதமான தவறுகளை விசேடமாக அறிவு பற்றிய மாக்சிய கோட்பாட்டின் தவறுகள் பற்றிய தனது கருத்துக்களை தருவதற்காகவே மா.சே.துங் 'நடை முறை பற்றி' என்ற நூலை எழுதினார்.

பெனாலில் இருந்து யப்பானியர்களுக்கு எதிரான இராணுவ அரசியல் கல்லூரியில் மா.சே.துங் நிகழ்த்திய ஒரு விரிவுரையில் காணப்பட்ட சிந்தனைகளே இக கட்டுரை உள்ளடக்கியிருந்தது. இக் கட்டுரையில் இவர் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

'மனிதனின் சமூக இயல்பு, அவனுடைய வரலாற்று அபிவிருத்தி என்பவற்றுக்கு அப்பால் நின்றே மாக்சிக்கு முன்னைய லோகாதயம் அறிவு பற்றிய பிரச்சினைகளை பரிசீலனை செய்து அதனால் சமூக நடைமுறை மீது அறிவு தங்கியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது. அதாவது உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலுமே அறிவு தங்கியிருக்கின்றது என்பதை உணராது இருந்தது. ஆனால் மாக்சும், மாக்சீய வாதிகளும் மனிதனுடைய நடவடிக்கைகளுள் மிகவும் அடிப்படையான நடவடிக்கை உற்பத்தி நடவடிக்கையே என்றும் இதுவே மனிதனுடைய மற்றைய நடவடிக்கைகளையும் தீர்மானிக்கின்றது எனவும் கொண்டனர்.

உலோகாயத உற்பத்தியின் நடவடிக்கைகளிலேயே மனிதனின் அறிவு முக்கியமாகத் தங்கியிருக்கின்றது. அதனூடாக மெல்ல மெல்ல இயற்கையின் பெருமானங்கள், இயற்கைச் சட்டங்கள், தனக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றை விளங்கிக் கொள்கிறான். உற்பத்தி நடவடிக்கைகளினூடாக மனிதன் சிறிது சிறிதாகப் பல்வேறு அளவுகளிலும் மனிதனுக்கும், மனிதறுக்குமிடையிலான தொடர்புகளை அறிகிறான். இத்தகைய அறிவினை உற்பத்தி நடவடிக்கைகளினாலன்றி மற்றவற்றின் மூலம் அறிய முடியாது.

மேலும், மனிதன் ஒரு சமூகத்தின் சகல விதமான துறைகளிலும் பங்கு பற்றுகிறான் என வாதிட்டார். நடைமுறை என்பது அறிவினையும் விட உயர்ந்தது. ஏனெனில் அது சர்வ உலகு வாய்ந்தது என்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதோடு உடன் நிகழ்கால யதார்த்தமானது என லெனின் சொன்னார் என்று மா,சே.துங் குறிப்பிட்டார். முரணறுவாத லோகாதாயம் பற்றிய மாக்சிய தத்துவம் இரு பிரதியட்சமான இயல்புகளைக் கொண்டுள்ளன. ஒன்று வர்க்க இயல்பு. இது கோட்பாடு, நடைமுறையில் தங்கியுள்ளதோடு அது நடைமுறைக்குச் சேவையாற்றுகின்றது. உண்மைக்கான அளவீடு தனியே சமூக நடைமுறையே அறிவு பற்றிய முரணறுவாத லோகாதாயம் அடிப்படை மூல நிலைப்பாடு நடைமுறை பற்றிய நிலைப்பாடேயாகும் என்றும் வாதிட்டார்.

மாக்ஸிக்கு மன்பு அறிவைப்பற்றிய விடயங்கள் அனைத்தும் மனிதனின் சமூகத்தன்மை அவனது வரலாற்று வளர்ச்சி என்பவற்றுடன் தொடர்புபடுத்தப்படாது தனியானதொன்றாக ஆராயப்பட்டது. மாக்ஸ் அறஜவு என்பது மனித நடத்தையின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது என்றார். உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவனது அறிவும் தீர்மானிக்கப்படுகின்றது. வர்க்கம் அற்ற சமுதாயத்தில் சகலரும் தமது தேவைக்காக இயக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதுவே மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது. வர்க்கங்கள் வௌ;வேறு வகையில் சிந்திக்கத் தலைப்படகின்றபோது அதற்கு ஏற்ப அறிவு வளர்ச்சியடைகின்றது. ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமாயின் அவன் தனது சிந்தனைகளை வெளிக்காரணிகளுடன் தொடர்பு படுத்த Nவுண்டும். மனித அறிவினை இயக்கப்பாட்டில் இருந்து பிறித்தறிய முடியாது. லெனின் அறிவை விடப் பெரியது நடைமுறையே என்றார். மாக்ஸிய இயக்கவியல் பொருள் முதல் வாதம் இரு தன்மைகளைக் கொண்டது.

1.   வர்க்கப் போராட்டம்

2.   நடைமுறைப்படுத்தல்

சமூக நடைமுறையின் மூலமே வெற்றி தங்கியுள்ளது. மாக்ஸ், லெனின் ஆகியோர் கூறிய கருத்துக்களை மாவோவும் ஏற்றுக் கொள்கின்றார். மாவோ கோட்பாடும் நடைமுறையும் ஒரே இடத்தை வகின்கின்றது எனக் கூறுகின்றார். மாக்ஸிய லெனினிச கோட்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாவோவின் கோட்பாடுகளை அபிவிருத்தி செய்யத்தக்க கருவியாக அமைந்தன. மாக்ஸீம் ஏங்கல்சும் தமது கோட்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளை வைத்தே கூறினர். மாவோ அவற்றை தமது நாட்டுக்கு ஏற்ப ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்தினார். சீனா அரைமானிய அரைக்குடியேற்ற நாடானதால் அந்நிலைமையை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. மாவோ சீனச் சமுதாயத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ப கோட்பாடுகளை அமைத்து நடைமுறைப்படுத்தினார்.

  

04. முரண்பாடு பற்றி மா.சே.துங்

   

மாக்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் முரண்பாடுகளை ஆராய்ந்து விளக்கினர். இவர்கள் அபிவிருத்தி என்பது முரண்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்படும் என்றனர். இதே கருத்தை மாவோவும் ஏற்றார். ஆனால் அதனை சரியான முறையில் சீனாவிற்கு ஏற்ப பிரயோகித்தார்.

     உலகிலுள்ள சகல பொருட்களிலும் முரண்பாடுகள் உண்டு. முரண்பாடு இல்லாத எதுவுமே இல்லை. பொருட்களின் உள்ளேயும், வெளியேயும் முரண்பாடுகள் உண்டு. ஒரு பொருளின் அபிவிருத்திக்கு அதனுள் இருக்கும் முரண்பாடே காரணமாக அமைகின்றது. உள்முரண்பாடுகளே வெளிமுரண்பாடுகளை விட கூடிய பங்கினை வகிக்கின்றன. ஆரம்பம் முதல் இறுதிவரை முரண்பாடு நிலவிவருகின்றது. இம் முரண்பாடுகளின் தொடர்பு காரணமாகவே சகலதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

     மாவோ அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப முரண்பாடுகளை கண்டுபிடித்து செயற்பட வேண்டும் என்றார். முரண்பாடு சில வேளை நேரடியாகத் தென்படும். சிலவேளை தென்படாமலும் இருக்கலாம். ஆனால் மாற்றங்களுக்கு முரண்பாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீன சமுதாயத்தில் ஜனநாயக புரட்சியின் பின் மாற்றங்கள் ஏற்பட்டாலும் முரண்பாடுகள் இல்லாமலில்லை. சீன மக்கள் நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டிருக்கலாம். ஆனால் இதனைக் கண்டு சீன சமுதாயத்தில் முரண்பாடு இல்லை என்று கூறமுடியாது. சீன சமுதாயத்தில் இரண்டு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

    எமக்கிடையிலான முரண்பாடு
    எமக்கும் எதிரிக்கும் இடையிலான முரண்பாடு

இவை இரண்டும் தன்மையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும்.

     ஒவ்வொரு முரண்பாடும் அதனது ஒவ்வொரு அம்சங்களும் அவற்றுக்குரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இதுவே முரண்பாட்டின் குறிப்பிடத்தக்கதும், தொடர்பானதுமான இயல்புகளாகும். குறிப்பிடத்தக்கதும், தொடர்பானதுமான இயல்புகளாகும். குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் எதிர் எதிரானவை அடையாளங்களைக் கொண்டிருப்பதோடு அதன் விளைவாக கரு உட்பொருளில் ஒன்று சேர்ந்து இயங்கக்கூடியவை. ஆனால் எதிர் எதிரானவற்றின் போராட்டம் முடிவற்றது. இது எதிர் எதிரானவை. ஒன்று சேர்ந்து இயங்கும் போதும் அவை மாற்றமடையும் போதும் தொடர்ந்து இடம்பெறுகிறது. அவை வேறொன்றாக மாற்றமடையும் போது விசேடமாகத் தெளிவாகக் தெரியும். முரண்பாட்டின் குறிப்பிட்ட தன்மை, தொடர்பான தன்மை என்பவற்றைப் படிக்கும்போது பிரதான முரண்பாடு, பிரதானமற்ற முரண்பாடு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். முரண்பாட்டின் சர்வ உலகத் தன்மை பற்றிப் படிக்கும் போதும் முரண்பாட்டின் எதிர் எதிரானவற்றின் போராட்டம் பற்றிப் படிக்கும் போதும் போராட்டத்தின் வேறுபாடுகள் மீது கவனம் கொள்ள வேண்டும் என்றும் மா.சே.துங் குறிப்பிட்டார்.

05. யுத்தம் பற்றிய மாவோவின் கருத்துக்கள்

     மாவோ யுத்தம் செய்து எதிரிகளையும் காட்டிக் கொடப்பவர்களையும் வெறிற கொள்ள வேண்டும் என்றார். அதற்காக யுத்த உபாயம் என பல நூல்களையும்ட எழுதியுள்ளார். மாக்ஸ், லெனின் போன்றவர்கள் குறிப்பிடாத யுத்தம் பற்றிய கருத்துக்களை மாவோ கூறினார். ஏகாதிபத்திய வாதிகளின் பலம் அதிகமாக இருக்கும் போது அதற்கு எற்ப உபாயங்களை கையாள வேண்டும். எனNவுதான் ஆயுதம் தாங்கிய யுத்தம் செய்ய வேண்டும் என்றார். முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளயர்ச்சியடைந்து விட்டால் இதனைத் தீர்க்க சிறந்த கருவி யுத்தமேயாகும். வர்க்கங்களுக்கிடையிலும் முரண்பாடு நிலை பெற்றிருக்கும்போது யுத்தம் அவசியமாகும். அதனைக் கடைப்பிடிஎக்கும் முறைகள் கைக்கொள்ளப்பட வேண்டுமென மாவோ கூறுகின்றார். யுத்தம் ஒன்று ஏற்படக் காரணம் யுத்தத்தைத் தடுப்பதற்கேயாகும். வர்க்கங்களுக்கிடையிலான எதிர் யுத்தங்களையும் தேசிய எதிரிகளையும் ஒழிக்க யுத்தமொன்றும் அவசியமாகின்றது என்றார்.

     யுத்தம் என்பது நீதியான யுத்தம், நீதியற்ற யுத்தம் என இரு வகைப்படும். நீதியற்ற யுத்தம் இல்லாம்ல் போக நீதியான யுத்தம் அவசியமாகின்றது. மனித விடுதலைக்கு அவசியமான யுத்தங்கள் அனைத்தும் நீதியானதாகும். எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தங்கள் அனைத்தும் நீதியானதாகும். எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே கடைசியாகும். சீனாவின் விடுதலைக்கே சீன யுத்தம் நடத்தப்படும். எம்மை எதிர்நோக்கியிருப்பது பயங்கரமான யுத்தமாகும். எனவே நாமும் பயங்கரமாக போராடுவோம். இதுவே கடைசி யுத்தமாகும். இந்த யுத்தத்தை கிராமத்திலிருந்து ஆரம்பித்து நகரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நகரில் எதிரிகள் தமது பலத்துடன் ஆயத்தமாக உள்ளனர். எனவே நாம் திட்டமிமட்ட வகையில் யுத்தம் செய்ய வேண்டும். தேசிய கம்டயுஸ்ரீனிச கட்சியே யுத்தத்திற்கு தலைமைதாங்க வேண்டும்.  

06. மாவோவின் அரசு பற்றிய கருத்துக்கள்

 மாவோ அரசு பற்றிய கொட்பாடுகளில் மாக்சிஸ கருத்துக்களில் இருந்து மாறுபடகின்றார். புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்ற மாக்சிஸ கருத்தை நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச் சர்வாதிகாரம் என அழைக்கப்பட வேண்டும் என்றார். இதுவே 'Pநழிடந னுநஅழஉசயவiஉ னுசைநஉவழசளாip' எனப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாபரத்திற்கு பூர்சுவாக்களின் மக்கியத்துவத்திi மாவோ வலியுறுத்தினளார். இதனால் புரட்சியின் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்டவேண்டும் என்ற மாக்ஸிச கருத்தை நிராகரித்துஅ அவர்களை தொடர்ந்தும் ஒரு வர்க்கமாக இயங்கவோ அனுமதிக்கின்றார். மேலும் கல்வசி முறையின் ஊடாக பூர்சுவாக்களில் மனப்போக்கினை மாற்ற முடியும் என்றார்.

     இன்று 3ஆம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிரான புரட்சி சக்திகள் மாவோவின் அரசு பற்றிய கோட்பாட்டின் அம்நமான மக்கள் கம்யூனிசம் (Pநழிடநள ஊழஅஅரnளைஅ) அமைகின்றன. இந்த கம்யூனிசங்களில் மக்களை ஒழுங்கமைப்பதன் வாயிலாக தமது நலன்களைப் பேணும் தீர்மானங்களை தாமே மேற்கொள்வதற்கும் அவை உதவும் என்றும் அதன் மூலம் அரசின் முக்கியத்துவத்தினை படிப்படியாக குறைக்க முடியும் என்றும் நம்பினார். சோசஸிச சமூகம் கம்யுஸ்ரீனிசத்தை நோக்கி முன்னேறுவதற்கம் மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது அவசியம் எனக் கருதினார்.

07. தத்துவம் பற்றி மா.சே.துங்

   

மாஓவின் 'தத்துவம் பற்றி' என்ற கட்டுரை முதலில் யெனானிலுள்ள ஜப்;பானிய எதிர்ப்பு இராணுவ அரசியல் கல்லூரியில் தொடர் விரிவுரைகளாக அற்றப்பட்டவை பின்னர் தெரிவு செய்யப்பட்ட அவரது எழுத்துக்களில் சேர்ப்பதற்காக நிறுத்தப்பட்டது.

     பொருட்களிலுள்ள முரண்பாட்டு விதி, எதிர் எதிரானவற்றின் ஒற்றுமை இயற்கையினதும் சமூகத்தினதும் அடிப்படை விதியாகும். மனித அறிவு பற்றிய வரலாற்றில் இது ஒரு பெரும் புருட்சியினைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. முரணறுவாத லோகாயத்தின் அடிப்படையில் எல்லா

08. சீனப் புரட்சி பற்றி மாஓவின் கோட்பாடு

     மாவோ சேத்துங் ஜனநாயக கருத்தின் மூலம் சீனா தனது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு புரட்சியை மேற்கொள்ள வேண்டும். அப்புரட்சி எவ்வகையாக அமைய வேண்டும் என்று விளக்கினார். மாக்ஸ் கூறியது போன்று மனித வாழ்வை மனித அறிவுணர்வு அன்றி சமூக வாழ்க்கiயை நிர்ணயிக்கின்றது என்ற அடிப்படையில் சீன மக்களின் வாழ்வ எவ்வாறு அமைந்துள்ளத என அறிந்து அதற்கு ஏற்ப எவ்வாறு புரட்சி செவய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். சீனாவில் 1940 இன் பின்னரே முதலாளித்துவம் வளரத் தொடங்குகின்றது. ஆனால் சீனா முழுமையான முதலாளித்துவ நாடாகவோ முழுமையான குடியேற்ற நாடாகவோ அகாமல் அரைகுறை குடியேற்ற அiகுறை முதலாளி;துவ சமுதாயத்தைக் கொண்டதாக மாறியது. இதற்கு ஏற்ப அதன் அரசியல் ,பொருளாதார, கலாசார நிலைகளும் மாற்றமடைந்தன. எனவே மாவோ இந்நிரைலயை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்கு ஏற்ப புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியவை புதியதாக மாற்றப்பட வேண்டுமென்று கூறினார். இக்கரு;தினை எவ்வாறு மேற்கொள்ளாம் என்பதனையே புதிய ஜனநாயகத்தில் குறிப்பிட்டார்.

     சீன்ப புரட்சி இரு கட்டங்களாக நடைபெற வேண்டுமு;.

    ஜனநாயக புரட்சி
    சோஷலிச புரட்சி

 சினச் சமுதாய நிலைமையானது அரைகுபுறை குடியேற்றவாத அரை மானிய அமைப்பாகும். இந்நிலைமையை மாற்ற வேண்டும். இதற்குப் புதிய ஜனநாயகம் அமைக்கப்டவேண்டும். அந்த ஜனநாயகத்தை மேலும் அபிவிருத்தி செய்து சொசலிஸ ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும். சோசலிஸப் புரட்சியை நோக்கி நாம் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

     எதிர்காலத்தில் சீன ஜனநாயகப் புரட்சியை கொண்டு செல்வோர் சிட்சயமாக விவசாய வர்க்கத்தினராகவே இரப்பர். சீனா அரைகுறை முதலாளித்துவ நாடாக இருப்பதால் அங்குள்ள முதலாளித்துவ வாதிகள் புரட்சி மனப்பான்மை உடையவர்களாக இருப்பர். இதற்கு காரணம் ஏகாதிபத்திய பிரபுத்துவ அடக்குமுறைக்கு அவர்கள் உட்பட்டிருப்பதாகும். சீன தொழிலாளர் வர்க்கம் அவர்களை ஒன்றுதிரட்டி ஐக்கிய மன்னணி ஒன்றை அமைக்க வேண்டும்.

     1917 இல் நடைபெற்ற ரஸயப்புரட்சியும், அங்கு அமைக்கப்பட்ட சோஸலிச அரசும் இனிமேல் நடைபெறும் புரட்சியை முதலாளித்துவ புரட்சியாக இருக்காமல் செய்ய உதவும் என்றார். அதனால் இவர்களின் உதவியாலும், நடவடிக்கைகளின் முலமுமே ஜனநாயகப் புரட்சியை கொண்டுவர முடியும். புரட்சியில் பங்கு பற்றும் சகல வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டும் போது எல்லா வாக்கங்களும் எல்லா விடயங்களையும் அறிந்திருக்க வேண்டியதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக இருந்தால் போதும்.இவர்களே முதலில் ஏகாதிபத்திய விடுதலைக்காக போராட ஒன்றுபட வேண்டும். தொழிலாளர் வர்க்கமே புரட்சியினைக் கொண்டு செல்ல வேண்டும் என்று உறுதியாக கூறினார்.

     மாவோ பாட்டாளிகளின் சர்வாதிகார அரசும் பல புரட்சிகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றார். மாக்சிஸத்தின் படி முதலாளித்துவத்தினை வீழ்த்திப hட்டாளிகள் தங்கள் சர்வாதிகாரத்தினை நிறுவுவதற்கு மாத்திரமே புரட்சி தேவைப்படகின்றது. பாட்டாளிகள் சர்வாதிகாரம் உருவாக்கப்பட்ட பின் புரட்சிக்கான அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. னோல் மாவோ பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிலவும் போதும் எதிர்ப்புரட்சியாளர்களினதும், பூர்சுவாக்களினதும் மறைமுகமான எதிர்ப்பினை முறியடிப்பதற்கும் புரட்சி அவசியமானது என்றார். சீனாவில் சோஸலிச சமூகத்தில் 1965இல் ஏற்பட்ட விவசாயப் புரட்சி இதற்கு உதாரணமாகு மாவோ வாதிகளால் குறிப்பிடப்படகிறது.

 மாவோவின் புரட்சி பற்றிய கோட்பாடகிள்ல அடுத்ததாக விவாசாயிகளின் புரட்சி என்ற கோட்பாடு அமைகின்றது. அதாவது சீனா போன்ற அசிய நாடொன்றில் விவசாயிகளெ புரட்சியின் முன்னொடிகளாக இருக்க முடியுமென மாவோ குறிப்பிட்டார். கைத்தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடகளில் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதினால் மாக்ஸீம் லெனினும் தொழிலாளர்களே புரட்சியின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்றும், விவசாயிகள் அவர்களுட்ன இணைந்து இரப்பார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் மாவோ சீனா போன்ற பின்தங்கிய விவசாய நாடகளில் விவசாயிகள் பெரும்பான்மையினராக இருப்பதால் விவசாயிகளெ புரட்சியின் முன்னொடிகளாக இருப்பார்கள் என்றும் சிறு பான்மையினரான தொழிலாளர்கள் அவர்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இங்கு மாவோ மாக்ஸிச – லெனினிசத்தின் புரட்சிக்கொட்பாட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காணலாம். அதேவேளை மாக்ஸிச – லெனினிச புரட்சி கோட்பாட்டினை பின்தங்கிய நாடுகளுக்கேற்ப புனரமைக்க முற்பட்டதைக் காணலாம். இருந்த போதிலும் மாவோவின் விவசாயப் புரட்சி பற்றிய கோட்பாடு அவருடைய சுயமான சிந்தனையல்ல என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. 1904இல் லெனின் எழுதிய 'யுபசயசஉயn Pசழபசயஅ ழச ளுழஉயைட னுநஅழஉசயஉல' என்ற நூலிலும் ஏங்கல்ஸ் எழுதிய 'சுநளநவெ ஙரநளவழைn in குசயnஉந யனெ புநசஅயலெ' என்ற நூலஜலும் காணப்படுவதாக கூறப்படகின்றது. எனினும் மாவோதான் விவசாயிகளை ஓர் வர்க்கமாக்கி விவநசாயிகள் புரட்சி பற்றிய ஓர் கொள்கையை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட நவீன மாக்ஸியவாதி எனப்படகின்றது.

     மாக்சியப் புரட்சி என்பது நகரங்களில் நவீன ஆயுதங்களின் துணை கொண்டு உருவாக்கப்பட்டு பின்பு கிராபமங்களுக்கு பரவ வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களின் வாழி;விடங்கள் பெருமளவிற்கு நகரங்களிலேயெ அமைகின்றன. ஆனால் மாவோவின் புரட்சி உபாயத்தின்படி விவசாய நாடுகளைப் பொறுத்தவரை கிராமப்புரங்களே விவசாயிகளின் வாழ்விடங்களாக அமைவதால் கிராமப் புறங்களிலேயெ முதலில் புரட்சி ஆரம்பிக்ப்பட வேண்டும் என்கின்றார். சிங்காய் குன்றுகளின் போராட்டம் (வுர்நு ளுவுசுருபுபுடுநு ஐN ஊர்ஐNபுமுயுNபு ஆழுருNவுயுஐNளு) என்ற நூலில் கிராமப்புரங்களிலிருந்தே போராட்டங்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். நகரப் புரங்களில் ஏகாதிபத்திய படைகள் விரிவடைந்திருப்பதால் முதலில் கிராமப்புறங்களிலிருந்தே புரட்சி ஏற்பட வேண்டும் எனக் கூறுகின்றார். குடியேற்ற நாட்டுப் புரட்சி சக்திகள் கிராமங்களையே அடிப்படை அலகாகக் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் படிப்படியாக நகரங்களை நோக்கி மன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.                  

சீனப் புரட்சி பற்றி விளக்கும் போது மா.சே.துங் முதலில் சீனாவின் சூழ்நிலையினை ஆராய்ந்தார். சீனச் சமூகம் காலனித்துவ, அரைகுறை மானிலத்தன்மைகளை கொண்டிருந்ததால் புரட்சியின் இலக்கு வெளிநாட்டு ஏகாதிபத்திய ஆட்சிக்கும், உள்ளுர் மானிய முறைக்குமெதிரானதாகையால் புரட்சியின் கடமைகள் இவ்விரு அடக்கியொடுக்குபவர்களையும் தாக்கியெறிவதால் சீன சமூகத்தில் காணப்படும் பல்வேறு வர்க்கங்கள் பகுதிகள் என்பவற்றில் எது மேற்சொன்னவற்றோடு போராடும் தகுதி பெற்றவை? தற்போதய கட்டத்தில் சீனப் புரட்சியின் ஊக்குவிக்கும் சக்திகள் எவை என்ற கேள்வியே முக்கியமாகும்.

     நிலச் சுவார்ந்தர் வர்க்கமோ, கொம்பிநாடோ, பூர்சுவா வர்க்கமோ புரட்சியன் உந்து சக்திகளாக இருக்க முடியாது என இரு வர்க்கங்களையும் அவர் நிக்கினார். அவர் குடியானவர், பாட்டாளிகள் முதலானவர்கள் தவிர்ந்த பூர்சுவாக்களின் செயற்பாடுகிக்க உந்து சக்திகளாக இருப்பர் எனக் கொண்டார். எல்லாத் தேவையான சூழ்நிலைகளும் பழுத்து வரும் போது சீனாவின் பூர்சுவா ஜனநாயக புரட்சியினைப் பூர்த்தியாக்குவதும் அதனையே சோசலிசப் புரட்சியாக மாற்றுவதும் இடம் பெறும். அதுவே சீன கொம்யூனிஸ் கட்சியின் பெரும் புகழ் மிக்க கடமைப்பாடும் என மா.சே.துங் குறிப்பிட்டார்.

09. புதிய ஜனநாயகம் பற்றி மாஓவின் கோட்பாடு

     மா.சே.துங்கின் புதிய ஜனநாயகத்தின் அரசியலில் ஒரு பிரதான அம்சமாக அமைவது, பல புரட்சிகர வர்க்கங்களது ஒன்றினைந்த சர்வாதிகார ஆட்சி என்பதாகும். 1939இல் மா,செ.துங் எழுதிய 'சீனப் புரட்சியும், சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியும்' என்ற நூலில் முதன் முதுதலில் இந்தப் பல்வர்க்க ஆட்சி என்ற சிந்தனையை முன்வத்தார். 1940இல் அவர் வெளியிட்ட 'புதிய ஜனநாயகம் பற்றி' என்ற நூலில் இதனை மேலும் விளக்கினார்.

     மா.சே.துங்கினுடைய எண்ணக்கருவில் மிகவும் குறிப்பிடத்தக்க இல்பு தேசிய பூர்சுவாக்களிடையே காணப்படும் புரட்சிகர பகுதியினை அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினரிடையேயுள்ள மிகவும் ஒத்துழைப்பு வழங்கும் பிரிவினைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். புரட்சிக்குப் பிந்திய அரசில் சோசலிசத்தை நோக்கிய மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் கட்டத்திலும் பின்னர் இறுதி கொம்யூனிசத்தை அடைவதற்கு மன்பும் அவர்களோடு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொண்ளாமை என்பதே.

     இவ்வாறு மா,சே.துங் இரண்டு வர்க்க சர்வாதிகாரத்துக்குரிய பதிலாகப் பல புரட்சிகர வர்க்கங்களது இணைந்த சர்வாதிகாரம் என்பதை முன்வைத்தார்.

10. ஒரு மாக்ஸிய – லெனிஸிச  புரட்சிகரவாதியாக மா.சே.துங்

     மா.சே.துங் இனுடைய தனித்துவம்ஈ அறிவு ஜீவத் தன்மை என்பன பற்றி சில கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், மா.சே.துங் ஒரு வெற்றிகரமான புரட்சிகர தலைவர் என்பதையும், இராணுவ உபாயங்களை வகுத்தவர் என்பதையும் இருவரும் மறுப்பதில்லை. இவ்விடயத்திலும் அவர் இரு பிரதான பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவை,

    கொரில்லாப் போர் முறை பற்றிய மா.சே.தங்கின் பங்களிப்பு
    கிராமப் புற தளங்களை உருவாக்கி நகரங்களை சுற்றிச் சூழவேண்டுமென்ற புதிய சிந்தனை.

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பல புரட்சிகர தலைவர்கள் மா.சே.துங் இன் சிந்தனைகளைக் கடன் வாங்கித்தமது நாட்டுப் புரட்சிகரப்போராட்டங்களில் பயன்படுத்தியுள்ளனர். புதிய இடதுசாரி கோட்பாட்டாளர்களான பிராகர் சிங் பனன், மாக்கூங் என்போர் தமது எழுத்துகளில் மேற்சொன்ன இரு அம்சங்களையும் வற்பறுத்தியுள்ளார்கள்.

'லின்பியெர் அவர்கள் குறிப்பிட்டதபோல்' : தோழர் மா.சே.துங்கின் மக்கள் போர் பற்றிய கோட்பாடும் கொள்கைகளும் மாக்சிச செனினிசத்தை புதிய அணி செய்திருப்பதோடு அதனை அபிவிருத்தியும் செய்துள்ளது. சின்ப புரட்சி இயல்புகளின் அனுபவங்களிலிருந்து மா.சே.துங் கிராமப்பற தள பிரதேசங்களை கட்டியெழுப்புவதன் மக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்'.

 மிகவும் பலம் வாய்ந்த (பயிற்சி – ஆயுதங்கள்) இராணுவத்தினை பலம் குறைந்த இராணுவத்டதினால் தோற்கடிக்கும் உபாயத்திலேயே கொரில்லாப் போர் முறையின் முக்கியத்துவம் தங்னகியுள்ளது. சினப்புரட்சி யுத்தத்தினை இராணுவக்கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பின்வரும் நான்கு பிரதான இயல்பகளை அவர் முன்வைத்தார்.

    அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமனற்ற வளர்ச்சி பெற்ற பரந்த நிலப்பரப்பையும் செழிப்பான சூலவளங்களையும் கொண்ட நாடு சீனாவாகும்.
    எதிரியின் பெரும் பலமே அடுத்த இயல்பாகும்.
    செம்படை சிறிதாகவும் பலவினாமாகவும் இருப்பது அடுதத இயல்பாகும்.

மேற்சொன்ன சூழ்நிலைகளுக்குப் பொருந்தத்தக்கவாறும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கும் மாஓ பின்வரும் உபாய தத்துவங்களை வித்தித்தார். கொரில்லாப் போர் முறையே அடிப்படையானது. ஆனால் சாதகமான சூழ்நிலைகளில் நடமாடும் போர் முறையை நடத்தும் சந்தர்ப்பத்தினை இழக்கக் சூடும்.

   மாஓ கொரில்லாப் பேர் முறையில் அடிப்டைத் தத்துவங்களை பின்வறுமாறு விளக்கினார். எதிரி முன்னேறும் போது நாம் பின்வாங்குவோம். எதிரி முகாம் இடும் போது நாம் கரச்சல் கொடுப்போம். எதிரிகள் தாக்கும் போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும்போது நாம் பின்தொடர்வோம். உபாயமான உள்ளுர் எல்லைகளில் செயற்படும் இராணுவம் பல வாய்ப்பு இன்மைகளுக்குள்ளாகிறது. விசேடமாக சுற்றிவளைத்து அடக்குதல் என்பதை எதிர்நோக்கும் சீனச் செம்படை இதனை எதிர் நோக்குகிறது. என மாஓ எழுதினார். அனால் போராட்டத்திலும் போர் முனைகளிலும் நாம் இந்தச் சூழ்நிலைகளினை மாற்றுவோம். எதிரி எமக்கெதிராக நடத்ர்தும் பல பெரும் சுற்றிவளைத்து அடக்குதல் என்ற போராட்டத்தினை பல சிறிய வௌ;வேறான சுற்றி வளைத்து அடக்குதல் என்ற எதிரிக்கெதிரான எமது போராட்டங்களாக மாற்றுவோம். செம்பட்டை பொதுவாக எதிர்பாராத தாக்குதல்களையே மேற்கொள்ளும். 

   எதிர்ப்பலமாக இருந்தாலும் தொடர்ச்சியான எதிர்பாராத தாக்குதல்களினால் பலவினமாக்கப்படுவதோடு எதிர் அரைவாசி வழியில் வரும் போது அதிகமாக பின்வாங்கிவிடும். ஆனால் பின் தொடர்ந்து செல்லும்போது கொரில்லா குழுக்கள் பல எதிர்பாராத தாக்குதல்களைச் செய்யும். அதனால் எதிரி மேலும் பலவீனமடையும்.

வரலாறுகளுக்கு இரண்டு விதமான போர்களையே தெரியும். நீதியானதும், நீதியற்றதுமான போர்கள். நாம் நீதியான போர்களை ஆதரித்து நீதியற்ற போர்களை எpர்க்கின்றொம். எல்லா எதிர்ப்புரட்சி போர்களும் நீதியற்றவை. எல்லா புரட்சிப் போர்களும் நெர்மையானவை. சீனாவில் நடந்த மக்கள் போரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே 'துப்பாக்கி முனையிலிரந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற சிந்தனையை முன்வைத்தார். கஜராமப்பற புரட்சிகர தளப்பிரதேசங்களை உருவாக்கி கிராமப் புறங்களிலிருந்து நகரங்களை சுற்றி வளைக்க வேண்டும். என்ற மாஓசே துங்கின் கோட்பாடு எல்லா அடக்கியொடுக்கப்பட்ட தேசங்களிலும் மக்களினதும் குறிப்பாக ஏகாதிபத்திய வாதத்திற்கெதிரான ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ள ஒடக்கப்பட்ட தேசிய இனங்களது சமகால புரட்சிகரப் போராட்டங்களுக்கு சர்வ உலகுத் தன்மை வாய்ந்த, நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த முன்னணிக் கோட்பாடு ஆகும். 
 
   முடிவுரை

மேற்படி விடயங்களைத் தொகுத்து நோக்கும்போது, மா.சே.துங் புரட்சிகர போர்கள், தந்திரங்கள் என்பவை பற்றி எழுதியதோடு, நடைமுறையில் சீனாவில் புரட்சிகர போராட்டங்கள், போர்கள் என்பவற்றைத் தலைமை தாங்கி நடத்தி தான் ஒரு புரட்சிகர தலைவர் மட்டுமல்ல சிறந்த ஒழுங்கமைப்பாளரும், நடைமுறை உபாயவாதியும் என்பதை நிரூபித்தார்.


மேலும்
 மா.சே.துங் மாக்சிசத்தையும், லெனினிசத்தையும் ஒரு அரைகுறை காலனித்துவ, விவசாய, அபிவிருத்தியடையாத சீனா போன்ற நாட்டுக்கப் பிரயோகித்து வெற்றி கண்டார். சுறுக்கமாகக் கூறுவதானால் மா.சே.துங் வாதம் மாக்சிசத்தின் ஆசிய மாதிரியாகும். லெனின் வாதத்தினை ஏகாதிபத்திய யுகத்தின் மாக்சிசம் எனக் கொண்டால், மா.சே.துங் வாதம் என்பது ஏகாதிபத்தியம் முழுமையாக அழிவை நோக்கிச் செல்கின்ற காலகட்டத்து மாக்சிசம் எனவும் ஆசிய குடியானவர் சமூகங்களின் மாக்சிச லெனினிசம் எனவும் கொள்ளலாம். மாஓ சே துங்கின் கருத்துக்களானவை சீனத் தேசியவாதத்தினை அடிப்படையாக் கொண்டும், மாச்சிச கருத்துக்களை தமது நாட்டு சூழலுக்கு ஏற்றவகையில் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தப்பட்டவையாகவுமே காணப்படுகின்றன. எனவே சீனத் தேசியவாதத்தினதும், மாக்சிஸத்தினதும் கலப்பாகவே மாஓ சே துங்கின் சிந்தனைகள் காணப்படுகின்றன என்பதனை எற்றுக்கொள்ளலாம்.