Sri Lanka

டொனமூர் அரசியல் திட்டம் சுதேசிகளை உள்ளடக்கும் வகையில் ஏற்படுத்திய தாக்கம்.

சிவில் சேவை என்ற கற்கை நெறியானது பொது நிர்வாகதுறையின் ஓரு பகுதியாகும். பொதுத்துறை நிர்வாகத்தினை சிவில் சேவை என்று பொதுவாக அழைக்கின்றனர். இது நிர்வாகத்தின் பொது தன்மையை பிரதிபலிப்பதோடு குடிமக்கள் நிர்வகிக்கப்படும் முறைமையினையும் குறிக்கின்றது. சிவில் நிர்வாகமானது பொது மக்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகளினை முன்னெடுத்துச் செல்லும் பிரதான நிர்வாக அமைப்பாகும். சிவில் சேவை மூலமே நிர்வாகம் நடை பெறுகின்றது. அதாவது அரசாங்கத்தின் பல நிலைகளிலுள்ள பணியாட்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரை குறிக்கும். சிவில் சேவையின்றி எந்தவோர் அரசும் ஆட்சி செய்ய முடியாது.
சிவில் சேவையின் ஆரம்ப கட்ட வளர்ச்சி உரோம சாம்ராஐ;யத்திலிருந்து நிர்வாக நிறுவனங்களில் உயர் அலுவல்கள் பிரத்தியேக சேவையாளர்களாக கடமையாற்றியுள்ளனர். இவர்களுடைய நியமனங்கள் மரபுரிமை அல்லது ஆதாய முறையினை அடிப்படையாகக் கொண்டது.
ஆரம்பகால சிவில் சேவைக்கும், நவீனகால சிவில் சேவைக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக காட்டப்படுகின்றது. 18ம் நூற்றாண்டிலே பிரித்தானிய சிவில்சேவையில் ஆதாய முறை பின்பற்றப்பட்டது. எனினும் திறமை அடிப்படையிலான சிவில் சேவைக்கு முதனிலை உதாரணமாகப் பழைய சீனாவின் சிவில் சேவையை கூறலாம். சீனாவில் வுயபெ னுலயௌவல ஆட்சியாளர்கள் உயர்குடிகளை சிவில் சேவைக்குள் சிபாரிசு செய்வதனை தடுத்தது.
இதன் பின்னர் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் சீனாவின் சிவில் சேவை தொடர்பாக ஆய்வு செய்து பல சீர்திருந்தங்களினை மேற்கொண்டு சிவில் நிர்வாகத்தினை கட்டியெழுப்பினர். அமெரிக்காவில் 1883ம் மேற்கொள்ளப்பட்ட பென்லெற்றின் சட்ட மூலத்தின் மூலம் மரபு ரீதியான சிவில் சேவை இல்லாதொழிக்கப்பட்டு திறமை அடிப்படையிலாக அமைந்த சிவில் சேவையினை கட்டியெழுப்பினர். இன்று சிவில் சேவையானது பாரிய வளர்ச்சியினை பெற்றுள்ளதோடு பல புதிய நாமங்களிலும் அழைக்கின்றனர் அவையாவன,

   அரசாங்க சேவை
    பொது நிர்வாக சேவை
    பொது முகாமைத்துவ சேவை
    ஆளணி நிர்வாகம்
    நிரந்தர நிர்வாகம்
    இலங்கையானது ஒரு சிறிய தீவாக காணப்பட்ட போதும் இது 2500 வருட கால வரலாற்றை கொண்டதாக காணப்படுகின்றது. இலங்கையின் காலத்தால் முந்திய வரலாறு கி.மு 06ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் இருந்து வருகை தந்த விஜயன் என்ற மன்னனின் ஆட்சியால் ஆரம்பமாகிறது என கூறப்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் இயக்கர் நாகர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இயக்கர் நாகர் இலங்கையில் ஆட்சியமைத்து செயற்பட்டமை தொடர்பாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பின்னர் இலங்கையானது பல்வேறு இராச்சியங்களின் ஊடாக நிர்வாகம் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இதிலே முதலாவதாக அனுராதபுர இராச்சியம் கூறப்படுகின்றது. இதன் பல்வேறு இராச்சியங்கள் மாற்றமடைந்தது. குறிப்பாக பொலனறுவை இராச்சியத்தின் பின்னர் பல இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்து பல்வேறு நி;ர்வாக கட்டமைப்புகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

No comments:

Post a Comment