அரசியல் கருத்தியல்(POLITICAL IDEOLOGY)

 அரசியல் கருத்தியல் 



D.JEGATHEESWARAN.

B.A(HONS), M.A(PERA), M.ED(RED), PGDE, DIP.IN.HR, 

SPECIAL IN POLITICAL SCIENCE

அறிமுகம்

சமூகத்தின் அரசியல் அறிவிற்கு தனிநபர்கள் மற்றும் சமூகக்குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை, மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செழுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுப்பே அரசியல் கருத்தியல் எண்ணக்கருவின் விளக்கமாகும். அரசியல் கோட்பாடுகள், மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். அரசறிவியலில் அரசியல் கருத்தியல்கள் என்ற எண்ணக்கருவானது முறையாக அமையப்பெற்றுள்ள அரசியல் சிந்தனைகள் தொகுதிகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.

அரசியல் கருத்தியல் ஒன்று பிரசித்தமான சிந்தனையாளர் ஒருவரின் அல்லது சிந்தனையாளர்கள் பலரின் கற்பிதங்கள் மற்றும் கருத்துக்களின் தொகுதியாக கட்டியெழுப்பப்பட்டடிருக்கலாம். அன்றேல் பிரதான ஒரு சிந்தனையாளர் இன்றி சிந்தனையாளர்கள் பலரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வளர்ச்சியின் பெறுபேறாக கட்டியெழுப்பப்பட்டிருக்க முடியும்.

01. கருத்தியல் என்பதன் பொருள் POLITICAL IDEOLOGY)

கருத்தியல் என்ற சொற்பதத்திற்கு பல அறிஞர்கள் வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்துள்ளனர். அவ்வகையில் 'கருத்தியல்' என்ற சொல் கருத்து முரண்பாட்டுக்குரிய சொல்லாக கண்டுகொள்ளப்படுகிறது. கருத்தியல் என்பது கருத்து இயல் (Idea+Logy) என பிரித்து நோக்கப்பட்டால் 'இயல்' என்ற சொல்லுக்கு விஞ்ஞானம் என்ற அடிப்படை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 'கருத்துக்களின் விஞ்ஞானமே கருத்தியல்' (Science of ideas) என்று பொதுவாக கூறப்படுகிறது. அத்துடன் இது கருத்துக்களை மதிப்பீடு செய்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. 1797 மே மாதம் 23 ஆம் திகதி பிரான்சிய கோட்பாட்டாளரான Destutt De Tracey என்பவரால் முதன் முதலில் கருத்தியல் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இவர் நடைமுறை செயற்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு சொற்பதம் என்ற வகையிலேயே கருத்தியலை பயன்படுத்தினார். இவர் கருத்தியலை கருத்துக்களின் விஞ்ஞானம் (Science of Ideas) என விளக்கினார். H.M.Drucker என்ற அறிஞர் கருத்தியலை 'விஞ்ஞான பூர்வமற்ற இறந்த காலத்திற்கான நவீன பதில்' என விளக்கமளித்தார்.


சில வரைவிலக்கணங்கள்.

v  Destutt De Tracey

கருத்தியலானது ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துக்களின் கூட்டாக காணப்படுகின்றது. அதன்படி அது கருத்துக்களின் விஞ்ஞானமாக (Science of Ideas) காணப்படுகின்றது.

சமூக விஞ்ஞானிகளின் கருத்துப்படி,

ஒவ்வொரு சமூகமும் பொதுசன அபிப்பிராயம் (Public Opinion) அல்லது பொதுவான உணர்வு (Public Opinionபோன்றவற்றின் அடிப்படைகளை வடிவமைக்கின்றதாக கருத்தியலை கொண்டு காணப்படும். இவை வழமையாக சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் கண்ணுக்கெட்டாதவையாக காணப்படும்.

v  Hyppolyte Taine

தனது“Origin of Contemporary France” என்ற நூலில் பொதுவாக வாசிப்பாளனுக்கு ஏற்கனவே உள்ள அல்லது காணப்படும் அருஞ்சொற்பதங்கள் தொடர்பான அறிவை நீடிக்காது, நடைமுறை விஞ்ஞானத்திற்கு தேவைப்படும் அவதானிப்பு மூலமான உதாரணங்கள் இல்லாது மெய்யியலை சோக்ரடிஸ் முறையில் கற்பிப்பது போன்றதே கருத்தியல் என விளக்கமளிக்கின்றார்.

ஆங்கில அகராதி:-

மனித வாழ்வு தொடர்பான அல்லது கலாசாரம் தொடர்பான ஒரு முறையான திட்டம் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட கருத்துக்களின் பகுதியாக காணப்படுகின்றது.

ஜேர்மனிய மெய்யியலாளரான Christian Dunker:-

தனது '“Critical Reflection of the ideology concept” (2006) என்ற நூலில் 'கருத்தியல் என்ற சொல்லானது முன்வைத்தல் முறைமையாக (System of presentation) காணப்படுவதுடன் அது உண்மை தொடர்பான வெளிப்படையான (Implicitly) (explicitlyஅல்லது  கோரிக்கைகளாகவும் காணப்படுகின்றது.

அரசியல் கற்கைக்கான சஞ்சிகை:-

கருத்தியல் என்பது முறைமையில் உள்ள உறுப்பினர்களுக்கு இறந்த காலம் தொடர்பில் விளக்கம் கொடுப்பதாக இருப்பதுடன் நிகழ்காலத்தினை விளக்குவதுடன் எதிர்காலத்திற்கான ஒரு நோக்கினையும் வழங்குகிறது. அதன்படி முறைமைக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு அரசியல் அதிகாரம் தொடர்பான நோக்கத்தை விளக்குவதுடன் அதன் வரையரைகளையும் விளக்குகின்றது.

சமகால அரசியல் கோட்பாடு :-

கருத்துக்கள் சில வேளைகளில் சில தகவல்களுக்கான விளக்கம் என்ற வகையிலும் அல்லது சில கோரிக்கைகளுக்கான நியாயப்படுத்தல்களாகவும், சில உண்மைகளின் தேடுதலாகவும் இருக்கின்றது. இதனடிப்படையில் கருத்தியலானது இயற்கை, சமூகம், வரலாறு என்பவற்றில் மனிதனின் நிலை, இடம் தொடர்பாக குறைவாக அல்லது கூடுதலாக முறைப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களின் தொகுதியாக காணப்படுகின்றது.

v  S.P.Huntington:-

கருத்தியல் என்பது அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்.

கருத்தியல் என்ற சொற்பதமானது நிகழ்காலத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு சொல்லாக காணப்படுகின்றது. அத்தோடு அபிப்பிராயங்கள், மனபாங்குகள் பெறுமதிகளின் ஒழுங்கமைப்பாகவும் காணப்படுகின்றது. மேலும் மனிதன், சமூகம் தொடர்பில் எவ்வகையில் நோக்குகின்றோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. கருத்தியல் என்பது சில குழுக்களால் உண்மையாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்கள் அல்லது நம்பிக்கையான முறைமையாகும். எனவே கருத்தியல் என்ற சொற்பதமானது மேற்கூறப்பட்டவாறு பலதரப்பட்ட விளக்கங்கள் மூலம் தெளிவுப்படுத்தப்படுகிறது.


அரசும் இறைமையும் (Sovereignty)

 அரசும் இறைமையும்




அரசறிவியலில் இறைமை என்ற எண்ணக்கருவானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். அரசொன்றின் மூலக்கூறுகளுள் அடிப்படையானதாக இறைமை என்ற அம்சம் காணப்படுகின்றது. இறைமையே அரசை வேறுப்பட்ட தாபனங்களிலிருந்து பிரித்துகாட்டுகின்றது.


இறைமை என்னும் பதம் பிரான்சிய பதமாகிய Soveinete என்பதிலிருந்து மத்திய காலத்து இலத்தீன் பதமாகிய '“Superemitas அவையள' அல்லது “Superemapotestas” என்பதிலிருந்தும் தோற்றம் பெற்றதாகும். இதன் படி இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme power) அல்லது மேலான அதிகாரம் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. 


இறைமை என்பது அரசொன்றின் மிகவும் அடிப்படையான மூலக்கூறாகும். இச்சொல்லினை முதன்முதலில் அரசறிவியலில் பயன்படுத்தியவர் ஜீன் போடின் (Jean Bodin) ஆவார். அத்துடன் அரசு கொண்டிருக்க வேண்டிய அதிகாரங்களை வெளிப்படுத்தும் பதமுமாகும். மிகவும் நேரடியான கருத்தில் ஒரு அரசு கொண்டிருக்க வேண்டிய மிக உயர்ந்த அதிகாரம் (Supreme power) ) அல்லது மேலான அதிகாரம் என இறைமைக்கு விளக்கம் கூறலாம். இங்கு இறைமை என்பது அரசினுடைய மேலான அதிகாரம் என்பதும், அரசின் அடிப்படையான மூலக்கூறு என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 

வரைவிலக்கணங்கள் 


வில்லோபி (Willoughby)  என்பவர் 'ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

வூட்றோ வில்சன்  (Woodrow Wilson)  என்பவர் 'ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

பேகஸ் (Burgess)  என்பவர் 'ஓர் அரசு தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

ஜீன் போடின் (Jean Bodin)  இவர் இறைமையை 'சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத பிரசைகள் மற்றும் குடிகள் மீது செலுத்தப்படும் அரசுக்குரிய உயர்வான அதிகாரம'; என்றே வரைவிலக்கணப்படுத்தினார்.

டியூகிட்:- 'இறைமை என்பது அரசின் ஆணையிடுதல் ஆற்றல், இது ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கம் இடும் நிபந்தனையில்லாத ஆணை' என்று கூறுகின்றார்  

இவ்வரைவிலக்கணங்கள் யாவும் இறைமை என்ற பதம் ஒரு அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம், அமுலாக்கம், நீதிபரிபாலனம் ஆகிய அதிகாரங்கள் அவற்றின் மேலாண்மை போன்றவற்றையே கருத்தில் கொள்கின்றன. 


இறைமையின் வேறுபட்ட தன்மைகள் 


இறைமை என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் உள் இறைமை (Internal Sovereignty) வெளி இறைமை(External Sovereignty) பெயரளவு இறைமை (Titular Sovereignty)  சட்ட இறைமை (Legal Sovereignty)அரசியல் இறைமை (Political Sovereignty) மக்கள் இறைமை பன்மை இறைமை (Pluralistic Sovereignty) என்பன முதன்மையானவைகளாகும். 


  உள் இறைமை Internal Sovereignty

உள் இறைமை என்பது ஒரு அரசு தனது மக்கள் மீதும், பிரதேசத்தின் மீதும் செலுத்தும் அதிஉயர் அதிகாரமாகும். அரசு ஒன்றின் எல்லைக்குள் உள்ள தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்கள் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மீது அரசு முழு நிறைவான (Absolute) அதிகாரத்தினைச் செலுத்துவதை குறித்து நிற்கின்றது. அரசு முழுநிறைவானதாக இருப்பதுடன் அதன் எல்லைக்குள் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் கட்டளைகளை பெற்றுக் கொள்ளாததுமாக இருக்க வேண்டும். அரசை எதிர்க்கக் கூடிய மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் அரசின் எல்லைக்குள் தோன்றாததுடன் அவ்வாறு தோன்றின் அவற்றை அழிப்பதற்கான உயர் அதிகாரம் அரசிடம் இருப்பதை உள்இறைமை குறித்து நிற்கின்றது. 


  வெளி இறைமை 

வெளி இறைமை என்பது ஒரு அரசு உலகத்திலுள்ள வேறு எந்த ஒரு அரசின் தலையீடோ அல்லது கட்டாயப்படுத்தலோ இன்றி சுதந்திரமாகச் செயற்படுதலைக் குறித்து நிற்கின்றது. ஒரு அரசு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி சர்வதேச ஒப்பந்தங்கள் கூட்டுக்கள் அல்லது சர்வதேச சட்டங்களுக்கு உட்படுகின்ற போது அதன் இறைமை பறிக்கப்படக் கூடாது. இவைகள் அரசு ஒன்றிற்குரிய சுய வரையறைகள் என விபரிக்கப்படுகின்றன. மக்களைக் கட்டாயப்படுத்துகின்ற அதிகாரம் அரசிற்கு வெளியே யாரிடமும் இருக்கக் கூடாது. மக்கள் தமது மகிழ்ச்சிக்காக தாம் வாழும் அரசிற்கு மட்டுமே கீழ்ப்படிவார்கள். 

அரசு தனது சொந்த விருப்பத்திற்கு இணங்க செயற்படும். ஏனைய வெளி அதிகாரத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டியதில்லை. ஒரு அரசின் இறைமையினை பிற அதிகார சக்திகள் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், பிரிக்கவும் முடியாது. இறைமையை பிரிக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சித்தால் இறைமையானது அழிக்கப்பட்டுவிடும். இறைமை அரசின் ஒரு பகுதி என்பதுடன் ஒவ்வொரு அரசும் இறைமையினை இழந்து விடாமல் இருக்க வேண்டும். கெட்டல் (புநவவநடட) என்பவர் இது தொடர்பாகக் கூறும் போது 'இறைமை முழு மையானதாக இல்லாவிட்டால் அரசு நீடித்து வாழ முடியாது. இறைமை பிரிக்கப்பட்டால் ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் தோற்றம்பெறும். அரசிற்கு சட்ட ரீதியான அதிகாரம் இங்கு இல்லாமல் போய்விடும்.இதனால் அரசின் இறைமை பின்னடைவினை சந்திக்கும். இறைமையின் வியாபகத்திற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இருக்கக் கூடாது' என்கின்றார். 


மக்கள் இறைமை 

மக்கள் இறைமை என்பது மக்களுக்குரிய அடிப்படையானதும் பிரிக்க முடியாததுமான இறைமையாகும். மக்கள் இறைமையானது 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் அரசனின் கொடுங்கோண்மை அதிகாரத்திற்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பொழுது எழுச்சியடைந்ததாகும். ரூசோ (சுழரளளநயர) மக்கள் இறைமையின் பரப்புரையாளராக கருதப்படுபவராகும். இவருடைய கோசம் பிரான்சியப் புரட்சிக்கு காரணமாகியிருந்ததுடன் அமெரிக்கப் புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. பிறைஸ் (டீசலஉந) என்பவர் இது தொடர்பாக கூறும் போது மக்கள் இறைமை ஜனநாயகத்தின் காவல் மதமும் அடிப்படை மதமுமாகும் என்கின்றார். 

மக்கள் இறைமையானது தேர்தல் தொகுதி அல்லது வாக்காளர் இறைமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தேர்தல் தொகுதி இறைமையானது அரசியலமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்படாதவரை இது சட்ட ரீதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாக்காளர்கள் இறைமை அதிகாரத்தை தாங்களாக அனுபவிப்பதில்லை. பதிலாக அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள். பிரதிநிதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கட்சி சட்டசபை பொறுப்பினை ஏற்றுக் கொள்வதுடன் சட்ட சபை ஊடாக இறைமை அதிகாரத்தினைப் பிரயோகிக்கும் மக்கள் இறைமை என்பது பெரும்பான்மை வாக்காளாகளின் அதிகாரத்தினால் வெளிப்படுத்தப்படுவதாக இருக்கும். இதற்காக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகின்றது. 

ஆனால் மக்கள் தமது இறைமையினைப் பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தும் வாக்குரிமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


இறைமையின் சிறப்பு பண்புகள்

1. வரம்பில்லாதது:-  இறைமையானது அரசினுள்ளும் வெளியிலும் தனக்கு மேலான எந்தவொரு அதிகாரத்தையும் அங்கிகரிப்பதில்லை. அதிகாரமும் அதனை கட்டுப்படுத்த முடியாது. எந்த அரசும் உள்நாட்டு விவகாரங்களில் பிற அரசுகள் தலையிடுவதை ஒப்புகொள்வதில்லை. பன்னாட்டு அமைப்புகளும் உடன்படிக்கைகளும் அரசை கட்டாயபப்படுத்த முடியாது. இறைமையின் இந்த பண்பு அரசின் அதிகாரத்தை பொருள் படைப்பதாகவும் சட்டபூர்வமானதாக ஆக்குகின்றது.

2. அனைவருக்கும் பொருந்த கூடியது:- ஓர் அரசின் அதன் எல்லையினுள்ளும் வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்ததக்கதாகும். அரசை விட உயர்வான அல்லது அதற்கு நிகரான அதிகாரம் யாருக்கும் கிடையாது. அரசு தனது அதிகாரத்தினின்றும் யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை. ஆயினும் பண்பாட்டு நாகரிகத்தை ஒட்டி அயல் நாட்டு தூதர்கள், பிரதிநிதிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு தலைச்சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது. அவை தத்தமது நாடுகளில் சட்டங்களை பின்பற்ற அனுமதிக்கின்றன. இவை ஒரு மரியாதையின் பொருட்டேயாயினும் எச்சந்தர்ப்பத்திலும் அரசு இவ்சலுகைகளை இரத்து செய்யலாம்.


3. நிiயானது:- இறைமையை உடைய நபரோ குழுவோ மாறலாம். ஆனால் இறைமை மாறாது. அதாவது ஒரு நாட்டின் மன்னர் அல்லது அரசாங்க தலைவர் மாறும் போது அல்லது இறக்கும் போதோ இறைமையையும் மறைத்து விடுவதில்லை. மாறாக அடுத்த ஆட்சி பீடம் ஏறுபவரிடம் அது உறைந்து விடுகின்றது. எனவே அது காலத்திற்கு காலம் அதிகாரத்தை பிரயோகிப்பவர் மாறலாம் ஆனால் இறைமை என்னும் அதிகாரம் மாறாது எப்போதும் நிலையானதாக இருக்கும்.


4. பிரிக்க முடியாததது:- இறைமை என்பது பகுக்க முடியாத அதிகாரமாகும்;. அதனை பிரிப்பதென்பது அதனை அழிப்பதற்கு சமமாகும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.  சில அரசியல் சிந்தனையாளர்கள் அரசினுள் இருக்கும் சில சங்கங்கள், அமைப்புகளிற்கு இடையே பகிர்ந்து அளிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். மேலும்; ஹமில்டன், மெடிசன் போன்றோர் சமஸ்டி அமைப்பில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இறைமை பிரிக்கப்படுகின்றது என குறிப்பிடுகின்றனர்.


5. மாற்றமுடியாதது:- இறைமை பிறருக்கு மாற்றப்பட்டால் அரசு தனது மேலாண்மையை இழந்து விடுகின்றது. அவ்வாறு மாற்றப்பட்டால் அரசே மறைந்து விடும் இறைமை உடையோர் இறக்கும் போதோ பதவி விலகும் போதோ இறைமையை மாற்றி கொடுப்பதில்லை அப்பொழுது நிகழ்வது இறைமையின் மாற்று ஒப்படைப்பே ஆகும்.


6. தனியுரிமைமிக்கது:- தனியுரிமை என்பது இறைமையின் அரசில் ஒரே இடத்தில் மட்டும் இருப்பதை குறிக்கும் தலையாய அதிகாரத்தை பங்கிட இயலாது. அனைவரும் அந்த அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அது மட்டுமே தலையாய அதிகாரமாகும்.


இறைமை பற்றிய கோட்பாடுகள் 

இறைமை பற்றிய கோட்பாடுகளைக் காலத்திற்குக் காலம் பல அரசியல் விஞ்ஞானிகள் முன் வைத்துள்ளார்கள். இவர்களின் இறைமை பற்றிய கோட்பாடுகளுக்குள் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையின் தாக்கம் பிரதிபலித்திருந்தன. இவ்வகையில் ஜீன் போடின் (துநயn டீழயனin)இ ஹோப்ஸ் (ர்ழடிடிநள), லொக் (டுழஉமந), ரூசோ (சுழரளளநயர), ஒஸ்ரின் (யுரளவin), குருடியஸ் (புசழவரைள), ஹெகல் (ர்நபநட), ஜோன் மில்டன் (துழாn ஆடைவழn), லஸ்கி (டுயளமi), மக்ஐவர் (ஆயஉஐஎநச), மெயின் (ஆயiநெ) என இவர்களைப் பட்டியல்படுத்த முடியும். 



ஜீன் போடினின் இறைமை பற்றிய கோட்பாடு 

ஜீன் போடின் 1530 - 1596 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த அரசியலறிஞராகும். இறைமை பற்றிய கோட்பாட்டாளர்களுள் காலத்தால் முந்தியவராக இவர் கருதப்படுகின்றார். 1576ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசு (சுநிரடிடiஉ) என்ற நூலில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை இவர் முன்வைக்கின்றார். போடினின் கருத்துப்படி இறைமை என்பது மக்கள் மீதும், குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்றார். 

இறைமையின் உறைவிடமாக தனிமனிதனையே ஜீன் போடின் குறிப்பிடுகின்றார். ஜீன் போடின் பலரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ இறைமை உறைவதை நிராகரிக்கின்றார். அரசு என்பது மக்கள் குடும்பங்களினதும், மக்கள் சொத்துக்களினதும் இணைப்பாகும். இவ் அரசு இறைமை அதிகாரத்தினடிப்படையில் ஆட்சி புரியப்பட வேண்டும். ஒரு அரசில் சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமுலாக்குவதும் அரசின் இறைமையே ஆகும். இதனால் சட்டங்களின் உற்பத்தி மையம் இறைமையேயாகும். இதனால் சட்டத்தினை விட இறைமை உயர்வானதாகும். ஆயினும் சமுதாயக் கடமை, சமூகம் பொறுப்பு சமுதாய நீதி, சர்வதேசச் சட்டம் என்பவற்றினை விட இறைமை உயர்ந்ததல்ல என்ற கருத்தினை ஜீன் போடின் முன்வைக்கின்றார். ஜீன் போடின் இறைமையின் பிரயோகத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார். 


1. சில அடிப்படையான சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இறைமையாளனுக்கு அதிகாரமில்லை.உ-ம் பிரான்சின் சாலிக் சட்டம் (ளுயடiஉ டயற ழக குசயnஉந)

2. தனியார் சொத்துடைமை என்பது சட்டத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டதாகும். இதனால் பலாத்காரமான முறையில் மக்களின் சம்மதமின்றி மன்னன் வரி விதிக்கவோ அல்லது அவற்றை அழிக்கவோ முடியாது.

இறைமை என்பது மக்களின் மீதும் குடிகளின் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்வித சட்டங்களுக்கும் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என்று ஜீன் போடின் முன் வைக்கும் இறைமை பற்றிய கருத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுப்பாடுகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது ஜீன் போடின் இற்குள் காணப்பட்ட முரண்பாட்டினை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள். 

ஜீன் போடின் இறைமை பற்றிய கோட்பாட்டினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இவர் வாழ்ந்த காலப்பகுதியில் பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனை விரும்பாத ஜீன் போடின் அதிகாரம் மிக்க மன்னன் ஒருவனாலேயே இக்குழப்பம் மிகுந்த சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பியிருந்தார். உறுதி ஐக்கியம் அமைதி என்பன ஒரு சமுதாயத்தில் பலம் வாய்ந்த மன்னனொருவனின் மூலமே அடையப்படுவது சாத்தியமானதாகும். இதனால் இறைமையின் உறைவிடமாகத் தனிமனிதனான மன்னன் விளங்க வேண்டும் என்பது ஜீன் போடின் வாதமாகும். உண்மையில் பிரான்சில் இடம் பெற்றிருந்த சிவில் யுத்தத்தின் வெளிப்பாடே ஜீன் போடின் இறைமை பற்றிய சிந்தனையாகும். இந்நிலையில் சிவில் யுத்தங்களுக்குத் தீர்வினையும் சமுதாய மீட்சியையும் வேண்டி நின்ற ஜீன் போடின் தனிமனித இறைமை பற்றி சிந்தித்திருந்தார். இதனாலேயே ஜீன் போடின் முழுநிறை முடியாட்சியை வலியுறுத்தியிருந்தார். 

ஜீன் போடின் இறைமை என்பது எவ்வித சட்டங்களுக்குக் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என வாதிட்டாலும் இறைமையானது தெய்வீகச் சட்டம், இயற்கைச் சட்டம், சர்வதேசச் சட்டம் போன்றவற்றிற்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றார். இது இறைமை தொடர்பாக அவரிடம் காணப்பட்ட அக முரண்பாட்டினை வெளிப்படுத்தியது. ஜீன் போடின் காலத்தில் தெய்வீகச் சட்டம் இயற்கைச் சட்டம் சர்வதேசச் சட்டம் போன்ற யாவும் பெருமளவிற்கு ஒன்றிலிருந்து வேறுபடுத்தப்படாமலிருந்துடன் சாராம்சத்தில் தெய்வீக நீதி என்ற மதச் சிந்தனையுடன் பிணைக்கப்பட்டதாகவேயிருந்தது. இக்காலத்தில் முதன்மை பெற்றிருந்த கிறிஸ்தவ மதம் சார்ந்த சிந்தனைகளாகவே தெய்வீக நீதியும் விளங்கியிருந்தமையால் பாப்பரசரின் கட்டளைகளுக்கு இறைமை கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்தது. இச்சூழ்நிலையின் தாக்கமே இறைமை தொடர்பான இவரின் அகமுரண்பாட்டிற்கு காரணமானதால் தனிமனித இறைமை அவனது பூரணத்துவம் தொடர்பாக ஜீன் போடின் சிந்திக்கின்றார். 

இதன்படி இறைமைமிகு அரசு தமது வெளிநாட்டு கொள்கைகளை அழுத்தங்கள் இன்றி வைத்துக்கொள்வதற்கான திறனாகும். 

இறைமை அதிகாரம் நிலையான, அனைத்தாண்மைவாய்ந்த, பிரிக்கப்பட முடியாத, கைமாற்ற முடியாத, கையளிக்க முடியாத ஒன்றாக கருதப்படுகின்றது.


இறைமைப் பற்றிய எண்ணக்கரு சமஸ்டிவாதம் மற்றும் உலகமயமாக்கலோடு பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தேசிய அரசொன்றினுள் வாழும் பல்வேறு இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்காக இறைமை அதிகாரத்தினை பகிர்ந்தளிக்கும் போக்கொன்று விருத்தியடைந்து வருகின்றது. 


மறுபுறம், இறைமை அதிகாரமானது உலகமயமாக்கலினால் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகின் பொதுக்கொள்கைகள் தேசிய மட்ட இறைமை அலகுகள் மூலம் தீர்மானிக்கப்படுவதிலும் பார்க்க பெரும்பாலும் உயர் தேசிய அமைப்புகளினால் (ளுரிநச – யேவழையெட ழுசபயnணையவழைளெ) தீர்மானிக்கப்படுகின்றது. 


தேசிய அரசுகளுக்கு தேசிய வரிக் கொள்கை மற்றும் குற்றங்கள் யாது என தனித்து தீர்மானிக்கக்கூடிய நிலை இருப்பதினால் இது உள்ளிறைமை நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்கின்றது. எனினும் தற்போதைய மூலதன பாய்ச்சலுடன் (ஊயிவையட குடழற) ஏற்பட்ட சந்தையினை மையப்படுத்தும் உலக வர்த்தக அமைப்புகள் போன்ற நிறுவனங்கள் சர்வதேச மனித உரிமைகள், சட்டங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் குற்றங்கள் என்றால் என்ன என்பதை தீர்மானிப்பதாலும் இறைமை சவாலுக்குட்படுத்தப்பபட்டுள்ளது.


இதனால் தற்கால தேசிய அரசுகள் என்பது உலக உயர் தேசிய நிறுவனங்களில் எடுக்கப்படும் கொள்கைகளை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முகவர்களாக மாறியுள்ளதாக வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பின்புலத்தினுள் பிரபல்யமான அரசுகளின் இறைமை விருத்தியடைந்துள்ளதோடு நலிவான அரசுகளின் இறைமை அடித்துச் சென்றுள்ளமை தெளிவாகின்றது


அரசுகள் காலத்திற்கு காலம் எதிர்நோக்கும் பிரச்சினை நடைமுறைரீதியான மட்டுப்படுத்தல்களை ஏற்படுத்திகொள்வதாகும்.


புதிய அரசுகளில் சட்டரீதியான இறைமைக்கு பதிலாக அவ்வபோது எழுச்சியடையும் பலவந்த சக்திகள் கட்டுப்படுத்துவதை காணலாம்.


ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுதந்திரம் அடைந்திருந்தாலும் 'நவகாலணித்துவம்' என்ற முறைமையின் கீழ் திட்டமிட்ட பொருளாதார சுரண்டல்கள் இறைமை மீதான கட்டுப்பாட்டை கூறலாம்.


சோசலிச தத்துவங்கள் சமத்துவ சிந்தனையை வலியுறுத்தியதுடன் அரசுகளுக்கிடையிலான மேலாண்மை, மேலதிகாரம், இறைமை என்பவற்றுடன் தொடர்புடைய வேறுபாடுகள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.


எனினும் இச்சமத்துவம் கைத்தொழில், பொருளாதாரம், இராணுவ அதிகாரம், என்பவற்றில் வளர்ந்து வரும் ஒன்று குவிப்புகள் அரசுகள் மட்டத்தில் சமத்துவ உணர்வினை தடைசெய்கின்றது.


அதிகார மேண்மையை நாடும் அரசுகள் இறைமையை நிலைநாட்டிக்கொள்ள குளிர்யுத்தம், நட்சத்திரயுத்தங்களில் விருப்பம் காட்டுவதால் அவை இயல்பாக ஏனைய அரசுகளின் இறைமையை கட்டுப்படுத்த முற்படுகின்றது.

 


அரசு மற்றும் அரசாங்கம்( STATE AND GOVERMENT)

 அரசு, அரசாங்கம்; மற்றும் ஆட்சிமுறை என்பவற்றுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்




D.JEGATHEESWARAN 
B.A(HONS), M.A(PERA), PGDE, M.ED(RED), DIP.IN HR, SPECIAL IN POLITICAL SCIENCE
அரசு மற்றும் அரசாங்கம்

எல்லா சமூகத்திலும் காணப்படும் அடிப்படை மற்றும் மையமான அரசியல் நிறுவனம் அரசும் அரசாங்கமும் ஆகும் அரசு என்பது பிரிக்க முடியாத உணர்வு வெளிப்படாத, கட்புலனாகாத இலச்சிய மாதிரியாகும். ஆனால் அரசாங்கம் என்பது சட்டத்துறை நிருவாகத்துறை, நீதித்துறை என்பனவற்றைக் கொண்டமைந்த நிறுவனமாகும். அத்துடன் கட்புலனாகும் நிறுவனமாகும். அத்துடன் கட்புலனாகும் நிறுவனமும் நடைமுறைச் செயற்பாட்டை உடையனவாகும். சமூகத்தில் காணப்படும் ஏனைய அரசியல் நிறுவனங்களின் தோற்றமும் அரசு மற்றும் அரசாங்கத்தால் நடைபெற்றுள்ளது. 
உதாரணம் : பாராளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறை, உள்ளுராட்சி அமைப்புகள், ஆயுதப்படைகள், பொலிஸ், சிறைச்சாலை, பாடசாலை, பல்கலைக்கழகம், திணைக்களங்கள் போன்றன.
அரசாங்கம் என்பது அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவராகும். அதேவேளை, அரசின் விருப்பையும், நோக்கங்களையும், நடைமுறைப்படுத்துகின்றது. இதன் படி அரசு எஜமானும், அரசாங்கம் சேவகனுமாகும். இங்கு அரசின் செயற்பாட்டை அரசாங்கத்தின் வாயிலாகவே காணலாம்.. 
சாதாரண மக்களுக்கு அரசும், அரசாங்கமும் ஒன்றாகும். ஆனால் அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு வௌ;வேறுதான் எனும் கருத்தினை 'லஸ்கி' எனும் அறிஞர் வலியுறுத்துகின்றார்.
ஓர் அரசினுடைய நிலைப்பேற்றிக்கு அரசாங்கம் அவசியமானதாகும். அரசு நிலையானது ஆனால் அரசாங்கம் மாறக்கூடியது. ஆரம்பகால ஜனநாயக அரசுகளில் இவ்வேறுபாடு காணப்படவில்லை. உதாரணம் :- மன்னராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாதிருந் ததோடு அரசு மற்றும் அரசாங்கத்திற்கிடையில் வேறுபாடும் காணப்படவில்லை. அரசனே அரசு மற்றும் அரசாங்கமானான்.
தோமஸ் கொப்ஸ் என்பவர் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளார். 
பேராசிரியர் கார்ணர் அரசாங்கத்தினைப் பற்றி கூறுகின்ற போது அரசின் அல்லது மக்களின் விருப்பங்களை, கொள்கைகளாக மாற்றுவதன் மூலம் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் பிரதிநிதி  அரசாங்கமாகும் என்று கூறினார்.
அரசும் அரசாங்கமும் ஒன்றோடொன்று .தொடர்புடையன. எனினும் இவை இரண்டும் ஒன்றல்ல. அரசும் அரசாங்கமும் ஒன்றல்ல என்பதனை ஜோன்லொக் என்பவர் முதன் முதலாக வேறுப்படுத்தினார்.

வேறுபாடுகள்
01. அரசு என்பது ஆள்புலம், மக்கட்தொகை, அரசாங்கம், இறைமை, என்ற காரணிகளின் சேர்மானமாகும். அரசாங்கம் அரசின் ஒர் அங்கம் மட்டுமே.

02. அரசில் வாழும் சகல பிரஜைகளும் அரசின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் உறுப்புரிமை கட்டாயமானதல்ல.

03. மக்கள் அரசுக்கு கட்டாயம்அடிப்பணிய வேண்டும். ஆனால்அரசாங்கத்திற்கான அடிப்பணிவு கட்டாயமாதல்ல.

04. அரசுக்கு இறைமைஅதிகாரம் உண்டு.அரசு ஒப்படைக்கும் அதிகாரத்தையே அரசாங்கம் பெறுகின்றது.

05. அரசின் இருப்புக்கு ஒரு நிச்சயமான ஆல்புலப் பிரதெசம் தேவைப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு அது அவசியமானதல்ல.

06. அரசு மாற்றமுறாது நிலையானதாய் இருக்கும். ஆனால் அரசாங்கம் காலத்திற்கு காலம் மாறும் உதாரணம்:- காலத்திற்கு காலம் நடக்கும் தேர்தல் மூலம் இன்றைய ஜனநாயக அரசாங்கங்கள் மாறுகின்றன.

07. அரசு என்பது சீரானது ஆனால் அரசாங்கம் பல வகையினை சேர்ந்தது. உதாரணம்:- இங்கிலாந்து,இந்தியா, இத்தாலி போன்ற நாடுகளில் மந்திரிசபை அரசாங்கம்உள்ளது. அமெரிக்கா அரசாங்கம் ஜனாதிபதி அரசாங்கமாக காணப்படுகின்றது.சீனா, கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் பொதுவுடமை அரசாங்கம் நிலவுகின்றது. சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் முடியாட்சி அரசாங்கம் நிலவுகின்றது. 

08. மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடியாது. அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் உரிமை மக்களுக்குண்டு.

09. ஓர் அரசின் எல்லைக்குள் ஓர் அரசு மட்டுமே செயற்பட முடியும். ஆனால் ஒரு அரசுக்குள் பல அரசாங்கங்கள் இருக்கலாம்.உதாரணம்:- சமஷ்டியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் காணப்படுகின்றன.

10. அரசு கட்புலனாகாத இலட்சிய மாதிரி ஆகும்.ஆனால் அரசாங்கம் கட்புலனாகும் நிறுவனமாகும் அத்துடன் நடைமுறை செயற்பாடுடையது.

11. அரசு எஜமான் அரசாங்கம் சேவகன்


குடியுரிமை (CITIZENSHIP)

அரசும் குடியுரிமையும்


D.JEGATHEESWARAN.

B.A(HONS), M.A(PERA), PGDE, M.ED(RED), DIP.H.R, SPE.IN.POLITICAL SCIENCE.

குடியுரிமை என்பது தற்காலத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு  சொற்பதமாக உள்ளது. அன்றாட அரசியல் சொல்லாடலின் ஒரு மைய எண்ணக்கருவாகவும் உள்ளது. குடியுரிமை என்பது நபரொருவருக்கும் அரசொன்றுக்குமிடையிலான தொடர்பை குறித்து நிற்கின்றது. இது சாதாரணமாக தேசியத்துவம் எனும் சொற்பதத்தின் ஒத்த சொல்லாகவும் உள்ளது. குடியுரிமையை கொண்டிருத்தல் என்பது பொதுவாக ஒரு நாட்டில் வாழ்வதற்கான மற்றும் தொழில் புரிவதற்கான உரிமை அரசியல் வாழ்வில் பங்கு பற்றுவதற்கான உரிமையுடன் தொடர்புபடுகின. எந்தவொரு அரசினதும் குடியுரிமையை கொண்டிராத ஒருவர் நாடற்றவர் ஆவார்.

குடியுரிமை (CITIZENSHIP) என்றால் என்ன என்பது தொடர்பில் பொதுவாக தெளிவான நிலைப்பாடு நிலவுவதில்லை. வேறு வார்த்ததையில் கூறின் குடியுரிமை பற்றிய கருத்தொருமைப்பாட்டினைக் காண்பதரிது.

குடியுரிமை என்பது சிவிஸ் (Civisஅல்லது சிவிடாஸ் (Civitasஎனும் இலத்தீன் சொல்லிருந்து தோற்றம் பெற்றது. இதன் அர்த்தம் புராதன ரோமக்குடியரசு நகர அரசின் ஒரு அங்கத்தவர் எனும் அர்த்தத்தை கொடுக்கின்றது. இருப்பினும் சிவிடாஸ் என்பது கிரேக்க நகர அரசின் ஒரு அங்கத்தவர் என்ற அர்த்தத்தை தரும் பொலிடிஸ் அல்லது குடிமகன் என்பவன் நகரில் வாழ்வதன் மூலம் விவசாய செயன்முறையில் பங்குபற்றிய ஆட்சி புரிகின்ற மற்றும் பதிலுக்கு ஆளப்படுகின்ற ஒருவனாவான்.

எனவே வரலாற்று ரீதியாக குடியுரிமை என்பது சமமானவர்களை கொண்ட நகர்புற சமூகப்பிரிவாக கருதப்படுகின்றது. பிரஜை என்பதன் சரளமான கருத்து 'நகரத்தில் வாழ்பவர்' என்பதாகும் இதன் தற்போதைய அர்த்தம் 'அரசின் உறுப்பினன்' என்பதாகும். அரிஸ்டோட்டிலின் கருத்திற்கு எற்ப பிரஜை என்பவர் 'அரசின் செயற்பாடுகளுக்கு நேரடியாக பங்குபற்றும் நபராவார்.' என்கின்றார். இவர் இக்கருத்தினை கிரேக்க நகர அரசுமுறையின் பின்னணியிலிருந்தே கூறினார் எனலாம்.

மேலும் குடியுரிமை என்பது இருவழி தொடர்பினை கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வகையில் உரிமைகள் மற்றும் கடமைகளினால் பரஸ்பரம் கட்டுப்படுத்தப்படும் வகையில் பிரஜைகளுக்கும் அரசுக்கும் இடையிலான ஓர் உறவுமுறையாக உள்ளது. ஒரு அரசுக்குள் இருக்கின்ற ஒரு மனிதன் எவ்வளவு உரிகைளை அனுபவிக்கின்றானோ அதே அளவு கடமைகளைiயும் மேற்கொள்ள வேண்டும். அதே போல அரசும் பிரஜைகள் மீதான கட்டுப்பாட்டினை கொண்டிருக்க வேண்டும். இதுவே தற்கால ஜனநாயகத்தின் அடிநாதமாக உள்ளது.

குடியுரிமை பற்றிய வரைவிலக்கணம்

முறையான அர்த்தத்தில் குடியுரிமை என்பது தனிமனிதன் அரசுக்கு விசுவாசத்தையும், அரசு தனிமனிதனுக்கு பாதுகாப்பையும் வழங்கும் கடப்பாடினை கொண்ட தனிமனிதனுக்கும் அரசுக்குமிடையிலான உறவு முறையாகவுள்ளது. 

அரிஸ்டோட்டில்:- 'குடிமகன் என்பவன் ஆளுதல் மற்றும் ஆளப்படுதல் ஆகிய இரண்டிலும் பங்கெடுத்து கொள்ளும் ஒருவனாவான்.

T.H.மார்ஷல்:- குடியுரிமை என்பது ஒரு சமூகத்தின் முழுமையான அங்கத்தவர்களாகவுள்ள அத்தகைய அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு அந்தஸ்தாகவுள்ளதுடன் அத்தகைய அந்தஸ்தை உடையவர்கள் அதனோடு இணைந்த உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் சமமானவர்களாகும்.

டேவிட் மில்லர்:- குடியுரிமை என்பது வெறுமனே உரிமைகளைக் கொண்டிருத்தல் என்பதல்ல கூடவே அது நம்பிக்கை மற்றும் அதன் பொதுநலனை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள சமூகத்தின் உறுப்பினரின் நடத்தையும் ஆகும்.

ஜெக் பார்பலற்:- குடியுரிமை என்பது அரசியல் பிணைப்பின் தன்மையில் தங்கியுள்ளது. அப்பினைப்பினைப் பொறுத்துதான் அது எவ்வளவு வேகமானது என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

(அரசியல் நிறுவனங்கள் அகராதி) பிளேக்வெல்:- குடியுரிமை என்பது 'முழுமையானதும் பொறுப்புமிக்கதுமான அரசின் உறுப்புரிமையை குறித்து நிற்கின்றது'

குடியுரிமையின் மையக்கரு அரசியல் சமூகத்தில் பங்கேற்பு செய்தலாகும். அதனடிப்படையில் குடியுரிமையின் வரலாற்று அபிவிருத்தியில் கிரேக்ககாலம், உரோம காலம், பிந்திய மத்தியகாலம், 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டு என்ற வகையில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. 

கிரேக்ககாலம்

கிரேக்ககாலத்தில் அரசில் உறுப்புரிமை பெறுவதே குடியுரிமை என்ற வகையில் நோக்கப்பட்டது.

அங்கு குடியுரிமை பெற்ற பிரஜைககளுக்கு அரசியல், நிர்வாகம், நீதி போன்றவற்றில் பதவி வகிக்கவும். பங்கு பற்றவும் தீர்மானம் எடுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இங்கு அடிமைகள், வெளிநாட்டவர்கள், பெண்கள், சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. 

சுருங்கக்கூறின் கிரேக்கத்தில் குடியுரிமை என்பது பொறுப்புகளை வழங்குகின்ற ஒன்றாகவும் வரையறுக்கப்பட்டாதாகவும் அமைந்தது.

எஜமானுக்கு அடிமையாக வாழ்ந்த காலத்தில் பொது வாழ்வில் பங்குகொள்வதற்கு இக்குடியுரிமை உதவியது. 

கிரேக்க மக்களிடத்தில் குடியுரிமை என்பது அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய ஆழமான கடமைகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றது.

உண்மையில் வெளிநாட்டவரான அரிஸ்டோட்டில் உள்ளிட்ட எதேன்சின் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் குடியுரிமையில் பங்கேற்க தகுதியற்றிருந்தனர்.


உரோமானிய குடியுரிமை

ரோமானிய காலத்தில்குடியுரிமை வழங்கும் முறையானது வளர்ச்சி கண்டது.

உரோம பேரரசில் குடியுரிமை சட்டரீதியான அந்தஸ்தாக நோக்கப்பட்டது. உரோம பிரஜைகளுக்கு 

 

இராணுவத்தில் சேவை புரிதல்

சட்ட மன்றத்தில் வாக்களித்தல்

பொது பதவிகளுக்கு தகுதிப்பெறல்

மேன்முறையீடு செய்ய முடிதல்

பரஸ்பர திருமணம்

ஏனைய உரோமானிய குடிகளுடன் வர்த்தகம் செய்தல் ஆகிய 06 சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.

உரோமத்தில் எண்ணிக்கையில் அதிகமானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டமையே விசேட அம்சமாகும்.

இக்காலத்தில் சட்டவாட்சி சமத்துவம் பற்றி பேசப்பட்டது.

இங்கு சிற்றரசு, நகர அரசு என்ற வகையில் இரட்டை குடியுரிமை காணப்பட்டது.

நவீன குடியுரிமை

மத்திய கால அரசுகளிலும், மறுமலர்ச்சி கால அரசுகளிலும் என்ற அம்சம் கிரேக்க, உரோம கால அளவிற்கு பெரிதளவிற்கு செல்வாக்கு பெறவில்லை.

நவீன காலத்தில் செல்வாக்கு பெற்றதாக காணப்பட்டது.

நவீன குடியுரிமையினை நிர்ணயிக்கும் காரணிகளானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை அடிப்படைகளாக கொண்டுள்ளது.

தங்கள் பெற்றோர்களின் ஒருவர் அல்லது இருவரும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் குடியுரிமையினை பெற்றவராயின்  பிறக்கும் குழந்தையும் இயல்பாகவே அந்நாட்டின் குடியுரிமையினை பெற்று கொள்ளும் இதனை ஆங்கிலத்தில் "Right of Blood" (இரத்த உரிமை) என்பர்.

ஒரு நாட்டில் பிறத்தல். இக்குடியுரிமை 'மண் உரிமை' என அழைக்கப்படும் லத்தீன் மொழியில்  “Jus Soil” என்றும் ஆங்கிலத்தில் '“Right to Soil” என்பர்

ஒரு குடிமகன் திருமணத்தின் மூலமான குடியுரிமையை பெற்றுக்கொள்கின்றான்.

நவீன அரசுகளில் குடியுரிமையினை பின்வரும் இரண்டு முறைகளில் காணலாம்

1. செயலூக்கமான குடியுரிமை:- உரிமைகளை அனுபவிப்பது மாத்திரமன்றி கடமைகளையும் நிறைவேற்றுவது ஆகும்.

2. செயலூக்கமற்ற குடியுரிமை:- கடமைகளை பற்றி சிந்திக்காது தம் உரிமைகளை மாத்திரம் அனுபவிக்கும் நிலை.

எனவே ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு செயலூக்கமான குடியுரிமையே தேவையானது. தற்போது அரசு மற்றும் பிரசைகளுக்கிடையிலான தொடர்பில் மிகமுக்கியமான பண்புகள் இரண்டு காணப்படுகின்றன.

  • பிரசைகள் அனுபவிக்கும் அரசியல் உரிமைகள்
  • பிரசைகளின் அரசியல் கடமைகள்

இதன்படி பிரசை என்பவர் அரச நலன்புரி மற்றும் உரிமைகளை அனுபவிப்பவரும் அதற்காக அரசுக்கு அடிபணிவை காட்டுபவருமாவார். அரசொன்றில் ஆள்புலத்தில் வாழ்கின்றவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்கக்கூடியதும், இல்லாதொழிக்கக்கூடியதுமான ஒரே நிறுவனம் அரசாகும். எனினும் உண்மையான நடைமுறையாக அமைவது அரசை நிருவகிப்பவர்களால் அதனை தீர்மானிக்க முடியும் என்பதாகும்.

T.H மார்ஷலின் குடியுரிமை

1940 களில் சமூகத்தில் காணப்பட்ட குடியுரிமை பற்றி குறிப்பிடும் போது மதிப்பு மற்றும் சமூகத்தில் காணப்படும் சமமின்மையால் கட்டியெழுப்பப்பட்டதாக  கூறுகிறார். அதனை கருத்தில் கொண்டு 04 வினாக்களை எழுப்புகிறார்.

1. போட்டி நிறைந்த சந்தையில்  சுதந்திரமில்லாமல் அடிப்படை சமத்துவம் கட்டியெழுப்பப்படுமா?

2. சமூகமயம் மற்றும் சந்தையினுடைய துணை விளைவுகளால் என்ன தாக்கம் ஏற்பட்டது.

3. ஒருவரின் கடமையிலிருந்து உரிமைக்கு மாற்றப்படும் போது எவ்வாறான தாக்கம் ஏற்படும்?

4. சமூக சமநிலையை ஏற்படுத்த நவீன வரையறை ஏதும் இருக்கிறதா?

மார்சல் Citizenship and Social Classes எனும் தன் நூலில் குடியுரிமை என்பது 'முழுமையாக உறுப்புரிமை பெற்றவர்களிடையே பகிரப்படுகின்ற அந்தஸ்தாகும் அவ்வந்தஸ்துக்கு உட்படுபவர்கள் கிடைக்கப்பெறும் உரிமைகள், கடமைகள் தொடர்பில் சமமானவர்கள்' என்கின்றார். மேற்கூறிய வினாக்களை அடிப்படையாக கொண்டு மார்ஷல் குடியுரிமை தொடர்பாக 03 விதமான முறையில் வரையறை செய்கிறார்.

சிவில் குடியுரிமை

சட்டவாட்சி கோட்பாட்டை வைத்து உருவாக்கப்பட்டது.

இது தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகளோடு சம்பந்தப்பட்ட விடயமாகும்

பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சொத்து வைத்திருத்தல், ஏனையவருடன் தொடர்பு கொள்ளல்,  நீதி பெறல் ஆகும்.


2.அரசியல் குடியுரிமை

வாக்களித்தல், அரசியல் விடயங்களில் பங்கு பற்றல், அரசியல் மூலகத்திலிருந்து அதிகாரம் பெறல், சமூக பொருளாதார பாதுகாப்பு,

பின்பு சர்வசன வாக்குரிமை பெறவும், பெண்களுக்கான அரசியல் உரிமை பெறவும் வாய்ப்பாக உள்ளது.

3.சமூகக்குடியுரிமை

மார்சல் சமூக குடியுரிமையிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

'எனது விசேட விருப்பமானது சமூகக்குடியுரிமையிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் குடியுரிமை சமூகத்தினுடைய சமநிலையில் செல்வாக்கு செலுத்துகின்றது.' என்றார்.

சமூகக்குடியுரிமை 3 காரணிகளை கொண்டுள்ளது.

1. பொருளாதார ஏற்றத்தாழ்வு

2. சமூகத்தில் காணப்படும் கலாசாரம், பழக்கவழக்கங்கள்

3. குடியுரிமை விஷ்தரிப்பால் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை

வு.ர்.ஆயசளாயடட போன்றோர் இந்த எண்ணக்கருவுக்கு 'சமூக பிரசாவுரிமை' என்பதை இணைத்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி 'தொழிலொன்றை செய்வதற்கு, வீடொன்றை உரிமையாக்கிக்கொள்வதற்கான உரிமை போன்றன சமூக பிரசை என்பதன் கருத்தாகும். மார்சலின் இச் 'சமூக பிரசாவுரிமை' என்ற கருத்து 'லிபரல் பிரசாவுரிமை' என்பதற்கான மாற்றீடாகும்.

குடியுரிமையின் கூறுகள்/ அம்சங்கள்

பிறையன் டியூனர் குறிப்பிடுவது போன்று நவீன குடியுரிமை எண்ணக்கரு மூன்று முக்கிய கூறுகள் அல்லது பரிமாணங்களை கொண்டுள்ளது. 

1. சிவில் குடியுரிமை- பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம்

2. அரசியல் குடியுரிமை- அரசியல் சார்ந்த குடியுரிமை

3. சமூகக்குடியுரிமை- சமூக பொருளாதார நல்வாழ்க்கைக்கு உரித்தானவை.


குடியுரிமையின் கூறுகள்/அம்சங்கள்

குடியுரிமை என்பது சட்ட ரீதியான அந்தஸ்து (இது சிவில்,அரசியல், சமூக உரிமைகளினால் ஆனது.

இங்கு குடிமகன் என்பவன் சட்டத்தின் பிரகாரம் சுதந்திமாக செயற்படும் சட்ட அந்தஸ்து கொண்ட நபராவார் என்பதுடன் சட்டத்தின் பாதுகாப்பினை கோரவும் முடியும்

குடியுரிமை என்பது அரசியல் மற்றும் சமூகசெயற்பாடு

இது மனிதனின் உரிமைகள் மற்றும் கடமைகளோடு தொடர்புபட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

இது அரசுக்கான பிரஜைகளின் விசுவாசமாக உள்ளது


அரசுக்கு பிரசை ஏன் அடிபணிவை காட்டவேண்டும் என்ற வினாவிற்கு அரசறிவியலாளர்கள் பல்வேறு பதில்களை முன்வைத்துள்ளனர். 

அரிஸ்டோட்டலின் கருத்துக்கு அமைவாக, அரசின் இறுதி நோக்கம் அனைத்து பிரசைகளுக்கும் நலன்புரி மற்றும் நல்வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். பிரசைக்கு ஒழுக்கரீதியாக உயர்தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் கூடிய உயர்வான வாழ்க்கை என்பன அரசினால் வழங்கப்படுகின்றது.

சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஏற்ப, பிரசைகள் அரசை உருவாக்கிக்கொண்டதோடு அரசுக்கு அடிபணிவை காட்டுவதற்கான உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்காக அரசு பிரசைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக அரவணைப்பினையும் வழங்குகின்றது.

லிபரல்வாத கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஏற்ப, பிரசைகளின் இயற்கை உரிமைகளை பாதுகாத்துக்கொடுப்பது அரசு என்பதால்  பிரசைகள் அரசுக்கு அடிபணிய வேண்டும். 

ரூசோவின் கருத்துக்கு ஏற்ப, அரசு பொது விருப்பத்தினை பிரதிபலிப்பதோடு, அதன்மூலம் பொது சித்தமே பிரதிநிதித்துவம் செய ;யப்படுகின்றது. இதனால் பிரசை அரசுக்கு அடிபணிய வேண்டும்.

மாக்சீயவாதிகளின் கருத்துப்படி சமூகத்தில் சொத்துடைய வர்கத்தின் நலன்களை பாதுகாத்து சொத்தில்லாத வர்க்கத்தை அடக்கி ஆளும் கருவியாக அரசு செயற்படுகின்றது.

அரசியல் சமூதாயத்தில் குடிமக்களுக்கிடையிலும், மனித குழுக்களுக்கிடையிலும் எழும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் உயர்தீர்வாளன் அரசாகும்.

அரசு சட்டத்தையும், ஒழுங்கையும் தமக்காக நிலைநாட்ட வேண்டும் என குடிமகன் எதிர்பார்கின்றனர்.

அரசு பிறப்பிக்கும் சட்டங்களுக்கு குடிமக்கள் கீழ்படிகின்றனர்.


பாசிசம் FASCISM


பாசிசம் (FASCISM)

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE







  • பாசிசம் என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே தான் கோட்பாடுகள் அற்ற ஆட்சி முறையே பாசிசம் எனப்படுகின்றது. தாராண்மைவாதம் என்பன போன்றவற்றிக்கு அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதைப் போன்று பாசிசம் என்பதற்கு இத்தகைய   வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படவில்லை. பாசிசம்  தெளிவற்றதும், குழப்பகரமானதுமான  ஒரு ஆட்சி முறையாகும் எனவே தான் இதனை 'மயக்கும் சக்தியை தருகின்ற போதை' என்கின்றனர்.

பாஸிஸவாதம் என்பது அரசின் உயரியத்தன்மை (Glorification of the State) சிரேஷ்டத்தன்மை மற்றும் எதேட்சையதிகாரம், இனவாதம், இராணுவவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கருத்தியலாகும். 

பாசிசம் இத்தாலியிலும், ஜேர்மனியிலுமே முதலில் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பிரான்சிலும் இலத்தின் அமெரிக்காவிலும் தோற்றம் பெற்றது. இந்நாடுகளில் தோற்றம் பெற்றாலும் 1922 அம் ஆண்டு இத்தாலிலும் 1933 ஆம் ஆண்டு ஜேர்மனியிலும்  பாசிசம் என்பதற்கு முழுவடிவம் கற்பிக்கப்பட்;டது. 

எனவே தான் முசோலினி  ஜேர்மனிய கிட்லர் போன்றவர்களின் ஆட்சி முறைகளும், நடைமுறைகளிலுமே பாசிசம் எனப்படுகின்றது. இத்தாலியில் பெணிட்டோ முசோலினியும், ஜேர்மனியில் எடோல்ப் ஹிட்லரும் ஐரோப்பிய பாஸிஸவாத்தின் பிரதான தலைவர்கள் இருவராவர்.

பாசிசம் (கயளஉழை)என்னும் இலத்தின் மொழி சொல்லிருந்தே தோற்றம் பெற்றது. பாசிசம் என்னும் சொல்லுக்கு இருவகையான அர்த்தங்கள் கற்பிக்கப்படகின்றது.  ஒரு நிலையில் குழு அல்லது கூட்டம் எனவும்; மற்றொரு நிலையில்  உறுதியான மரக்கட்டு என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. 

இதனை தெளிவுப்படுத்தும் முகமாகவே 1922ஆம் ஆண்டில் இத்தாலிய பாசிச ஆட்சியினை ஸ்தாபித்த முசோலினி தமது இரானுவத்தின் அடையாள சின்னமான மரக்கட்டையில் வேயப்பட்ட கோடாரி சின்னத்தை பயன்படுத்தினர்.  பின்னர் அதனையே தமது அரசின் சின்னமாகவும் அடையாளப்படுத்தினர். 

பாசிசம்  என்பதற்கு ஆதரவாக கருத்து முன்வைத்தவர்களுள் மெகைன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஆவர். 'தாராண்மை வாதம் என்பது ஜனநாயகம்  தனிமனித வாதம் என்பவறறின் கூட்டு என்பதை போல பாசிசமானது எதேச்சியதிகாரம், சர்வாதிகாரம், தேச வழிபாடு என்பவற்றின் கூட்டு என்கின்றனர்.' பாசிசத்தை வலதுசாரி சர்வாதிகாரம், இடதுசாரி தீவிர வாதம் எனவும் அழைக்கின்றனர். 

தாராண்மைவாதம், மாக்ஸிஸ வாதம் என்பவற்றோடு ஒப்பிடும் போது பாசிசமானது திடிரென தோன்றிய ஒரு ஆட்சி முறையாக காணப்படுகின்றது.  எல்லா அதிகாரங்களையும் கொண்டே அரசே பாசிசம் என்கின்றனர்.  பாசிச அரசில் அதிகாரமானது வரம்பு அற்றதாகவும்,  சர்வாதிகாரம் மிக்கதுமான காணப்படுகின்றது. இவர்களின் கருத்துப்படி அனைத்தும் அரசிற்கு உள்ளேயே அரசிற்கு வெளியேயும், வேறானதும் எதுவுமில்லை. என்கின்றனர். 

பாசிசவாதிகள் ஒருவரன கிட்லர்  'மக்கள் வேண்டுகோள் விடுபவர்களை  விட  கட்டளை இடுபவரையே அதிகம் விரும்புவார்கள் என்கின்றார';. நடைமுறையில் பாசிசமானது பலமிக்க ஒரு ஆட்சி முறையாக காணப்படுகின்;றது.


பாஸிஸவாத அரசு

இது முதலில் 1920, 1930 தசாப்தங்களில் இத்தாலி மற்றும் ஜேர்மனி போன்றவற்றில் தோற்றம் பெற்றது. 

இத்தாலியில் பெணிட்டோ முசோலினியும், ஜேர்மனியில் எடோல்ப் ஹிட்லரும் ஐரோப்பிய பாஸிஸவாத்தின் பிரதான தலைவர்கள் இருவராவர்.

பாஸிஸவாத்தின் பிரதான கருத்தியலாக இருப்பது இனவாத பார்வையில் அரசு தொடர்பாக விபரிக்கும் ஹிட்லர் குறிப்பிடுவதாவது, 'இனத்தின் சிருஸ்டியே அரசாகும்' என்றார். 

பாஸிஸத்தால் அரசு மற்றும் இனம் என்பது சமமானவையாக கருதப்பட்டுள்ளமையை இதன  மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பாஸிஸவாத்திற்கு ஏற்ப அரசு என்பது 'இனத்தின் சிருஷ்டியாகும்' அரசிhல் இனத்தின் தேவையே பிரதிநிதித்துவப்படுத்தப்படும். இதனால் அரசும் இனமும் ஒன்றாகும். 

அரசு தொடர்பில் காணப்படும் பாஸிஸவாத வரைவிலக்கணங்களில் மிகவும் பிரபல்யமான இரு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. அதாவது, 

'அரசு நிரகற்ற தாபனமாகும்'  

'அரசு சர்வவல்லமை பொருந்திய தாபனமாகும்' என்பனவே அவையாகும்.

நீட்சே முன்வைத்த 'சூப்பர்மேன்' (அதிசிறப்பு மனிதன்) (Superman) என்ற எண்ணக்கரு அரசு தொடர்பான பாஸிஸவாத கருத்தியல் தொடர்பில் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் அரசின் உயரியத்தன்மை, உயர்ந்தது, நிகரற்றது போன்றவற்றின் மூலம் அரசுக்கு நிகராக்கக்கூடிய வேறு எந்த நிறுவனங்களும் இல்லை என்பது விளங்குகின்றது.

அதிகாரம் எல்லையற்ற நிலையே 'அரசு சர்வ வல்லமை பொருந்தியது' என்பதன் அர்த்தமாகும். அதிகாரம் உயரியதும் நிகரற்றதுமாக இருத்தல் வேண்டும் என்பதாகும். 

பாஸிஸ அரசு சமூக நிறுவனமாகவல்லாமல் அது சமூகத்திற்கு மேலுள்ளதாகும். அரசு அதிசயத்தக்கதும், மர்மமானதுமான இயல்பினைக் கொண்டிருப்பதோடு இதன் உண்மையான இயல்பினை சாதாரண மக்களால் விளக்கிக்கொள்ள முடியாது. 

அத்தோடு அரசின் தோற்றம் அதன் தற்போதைய நிலை மற்றும் அரசின் எதிர்காலம் தொடர்பில் முறையான விபரிப்பு ஒன்று பாஸிஸவாத்ததில் முன்வைக்கப்படுவதில்லை. 'அரசு நிலையானது' என்பதில் அவதானம் செலுத்துகின்றது. அரசுக்கு ஆரம்பமோ அல்லது முடிவோ கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும். 

'அரசும் சமூகமும் சர்வசமமானது' என்பதன் மூலம் பாஸிஸவாதிகள் சமூகம் மற்றும் தனிநபர்களை கவனத்தில் கொள்ளாது அரசின் முக்கியத்துவத்தை மட்டும் முன்னிலைப்படுத்தினர் என்பதே அர்த்தப்படுத்தப்படுகின்றது. அரசுக்கும் அரசின் அதிகாரத்திற்கும் தனிநபர்கள் எல்லாவகையிலும் கட்டுப்படும்போதே தனிநபர் விடுதலை சாத்தியப ;படுகின்றது. 

சமூகத்தில் மக்கள் முக்கியமற்றதோடு, அரசு மட்டுமே முக்கியமானது என்று குறிப்பிடும் பாஸிஸவாதிகள் 'அரசே ஆட்சியாளன் ஆகும்'. அதாவது அரசும் ஆட்சியாளனும் சர்வசமமானவையாகும். இதனால் அரசின் படைப்பே ஆட்சியாளனாவான் என்பதை சுட்டிக்காட்டியது.

இதன்படி பாஸிஸ அரசில் ஆட்சியாளர் சர்வதிகாரியாவான். அதாவது அறிவுடைய, பண்புடைய, மனிதமாண்புடைய, யுத்தப்பலம் கொண்ட, வீரமுடைய, இராஜதந்திரமுடைய, தேசஅபிமானமுடைய குணாம்சங்களில் பாஸிஸ ஆட்சியாளன் பரிபூரணமானவன். இதனாலேயே பிரசைகளிடமிருந்து தலைவனுக்கு எல்லாவகையிலும் அடிபணிவு எதிர்ப்பார்க்கின்றது. 

நாயகர் வழிபாட்டை வெளிகாட்டுவது முக்கியமானது. 

பாஸிஸ அரசில் எல்லா ஊடகங்களும் நாயகர் வழிபாட்டினை வெளிப்படுத்த வேண்டும். அரசியல் கட்சி, அமுக்கக்குழுக்கள் முழுமையாக தடைசெய்யப்படும்.

மக்களின் அரசியல் பங்குப்பற்றலை பாஸிஸவாதம் எதிர்க்கின்றது. 

அரச நிருவாக செயற்பாடுகள் முழுமையாக ஆட்சியாளனின் எதேட்சை அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதோடு அரசின் சட்டம் என்பது ஆட்சியாளனின் விருப்பங்களாகும்.

ஆயுதபலம் பாஸிஸவாதத்தின் அடிப்படையாகும். 

பாஸிஸ அரசுக்கு தாங்களைத் தவிர்த்த வேறு எந்த சமூக நோக்கமும் இல்லை. 'அரசு அரசுக்காகவே' என்ற நோக்கில் காணப்படும். அதாவது 'அரசு அரசுக்காகவே உள்ளது' என்பதாகும்.

பாசிசமும் ஜனநாயகமும்

பாசிசம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ஆட்சி முறையாகும். ஜனநாயகம் பெருபான்மையோர் ஆட்சி என்ற தத்துவத்தை நிலைநிறுத்த பாசிமானது அதனை நிராகரிக்கின்றது. 

ஒரு சமூகம் முழவதையும் கொண்டு நடாத்தப்படும் அதிகாரத்தினை சமூகத்திடமே வழங்க முடியாது என்கின்றனர்.  அப்படியே பெரும்பான்மையினரால் முடிவு எடுக்கப்பட்டாலும்  அது சரியானதாக  இருக்கும் என கூறமுடியாது. 

ஜனநாயக  நடைமுறையில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் அதற்குரிய அறிவினை பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்.

பாசிசவாதிகள் ஜனநாயக நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எழத்து உரிமை, பேச்சுரிமை கண்டன உரிமை போன்றவற்றை நிராகரிக்கின்றது. இத்தகைய  உரிமைகளை மக்கள் அரசுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்கின்றனர். 

அரசை விமர்சிக்கவோ, கண்டனங்களை  தெரிவிக்கவோ மக்களுக்கு உரிமை கிடையாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும். 


ஜனநாயக நாட்டில் முக்கிய அம்சமான பாராளுமன்றத்தினை பின்வருமாறு விமர்சிக்கின்றனர். 'பாராளுமன்றம் பொழுது போக்குக்காக கட்டப்பட்ட ஒரு பேச்சு கூட்டமாகும்.' 

உண்மையான சுதந்திரம் ஜனநாயக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்ல. அது செல்வந்தர்களின்  சொகுசு வாழ்க்கை. உண்மையான சுதந்திரம் எனப்படுவது சிறந்த பொருளாதாரம், நல்ல ஊதியம், கௌரவமான வாழ்க்கை, கூடிவாழ உற்றார் உறவினர்  என்பன போன்றவற்றில் பாசிச வாதிகள் சுதந்திரம் என்கின்றனர்.

பாசிசமும் சோசலிசமும்

பாசிச ஆட்சி முறையானது ஜனநாயகத்திற்கு போன்று சோசலிசத்திற்கும் எதிரானதுமானதாகவும் காணப்படுகின்றது. 

பாசிசவாதி சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளாக காணப்படுகின்றனர். சோசலிசவாதிகள் பொதுவுடைமையை வலியுறுத்துகின்ற பாசிசவாதிகள் நிராகரிக்கின்றனர். தனியார் சொத்துரிமையும் தனியார் நிறுவனங்களும் குடும்ப உறவை உறுதியாக வளர்க்ககூடியது என்பதால் இவை சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படுமாயின்  சமுக நலனை  தூண்டியதாக இருக்கும் என்கின்றனர். 

பாசிச வாதிகள் சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளான கருதுகின்றனர். 

1922 ஆம் ஆண்டு இத்தாலிய பாசிசத்தை கைப்பற்றிய முசோலினி மாக்ஸிய தலைவர்களுள் ஒருவரான  மடோடி என்பவரை கொலை செய்தான்.  அத்துடன் கிராம்சி என்பவரை சிறைப்படுகின்றார். 

1933 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் கிட்லர் தமது ஆட்சிகாலத்தில் ரஷ்யாவில் நிலவிக்கிடக்கும்  சோசலிச ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என சுளுறைக்கின்றான். பாசிசவாத ஆட்சிமுறையை பற்றி சோசலிச வாதிகள் குறிப்பிடுகையில் இரத்த பசி கொண்ட பயங்கரவாதமும், சர்வாதிகாரமும் கொண்ட அரசே என்கின்றார். 

பாசிசத்தின் பொதுவான பண்புகள்

அரசியல் அனைத்தாண்மைவாதம் (Totalrianism)

பாசிசவாதமானது ஒரு வகையில் சர்வாதிகார ஆட்சி முறையொன்றினை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டிருந்ததோடு இது அரசியல் கோட்பாட்டில் அனைத்தாண்மைவாதம் எனும் எண்ணக்கருவாக அடையாளப்படுத்தப்பட்டது.

அதன் பொருளாவது அரசு அடிப்படையிலேயே சர்வாதிகாரமானதும், சர்வாதிகார ஆட்சி கட்டமைப்பின் மூலம் முழு சமூகத்தையும், அரசியல் முறைமையையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்கும், ஆதிக்கத்திற்கும் உட்படுத்திக் கொள்வதாகும்.

அரசுக்கு அடிபணிதல் (Cult of the state)

முசோலினியின் பாசிசவாத எண்ணக்கருவிலிருந்து ஆரம்பமான அரசின் அதிகாரத்துவத்தை முழு சமூகமும், சகல பிரசைகளும் நிபந்தனைகள் மற்றும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளலும், அதன் அதிகாரதிற்கு தனது சுய விருப்பின்படியே அடி பணிவதுமே இதன் விளக்கமாகும்.

ஏனெனில் அரசானது முழு இனத்தினதும் உயர்வு, கௌரவம் மற்றும் விதி ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதாலாகும்.

பாசிச அரசியல் முறைமையினுள் அரசிலிருந்து விலகிய அல்லது சுயாதீனமான தனியாள் சுதந்திரம் ஒன்று இல்லை.

அதிகாரத்திற்கும், அதிகார நிறுவனங்களுக்கும் மற்றும் தலைவருக்கும் அடிபணிவதனூடாகவே சுதந்திரம் கிடைக்கப்பெறுகிறது.

தனியாள் சுதந்திரம் இல்லை

தாராண்iமைவாதத்தின் அடிப்படை கரு, அரசினால் பாதுகாக்கப்படும் தனியாள் சுதந்திரம் என்றால் பாசிசவாதத்தின் கீழ் 'தனியாள் சுதந்திரம்' என்ற எண்ணக்கரு மறுக்கப்படுதலே குறிக்கும்.

பாசிசவாதத்தில் தனியாள் சுதந்திரம் என்பது, அரசிற்கும், இனத்திற்கும் தலைவனுக்கும் நிபந்தனையின்றி காட்டும் அடிபணிவின் தன்மையைப் பொறுத்தே காணப்படுகின்றது.


நாயகர் வழிபாடு (தலைவருக்கு அடிபணிதல்)



தலைவனின் அதிகாரம் மற்றும் ஆதிபத்தியத்திற்கு சகல பிரசைகளும், முழு சமூகமும் நிபந்தனையின்றியும் சுய விருப்பத்துடன் அடிபணிதல் பாசிசவாதத்தின் விசேட பண்பாகும்.

ஜேர்மனியின் நாசிசவாத்தின் கீழ் முன்னிலைப்பட்ட புருரர் (Fuhrer) என்ற எண்ணக்கரு இந்த நாயகர் வழிபாட்டின் மூலம் வெளிப்பட்ட பாசிச வாதத்தின் படைப்பாகும்.

தீவிர வர்க்கவாதம் / இனவாதம்

ஜேர்மனிய நாசிசவாதத்தின் மூலம் வளர்க்கப்பட்ட இந்த பண்பின் மூலம் ஜேர்மன் இனம் உலகின் உயர்ந்த இனம் என வெளிப்படுத்தப்பட்டதுடன் உலகின் தலைவிதி ஜேர்மனிய இனத்தின் தலைவிதியின் படியே தீர்மானிக்கப்படும் எனவும் அதனால் முழு உலகத்தின் மீதும் தனது ஆதிபத்தியத்தை நிலைநிறுத்துவதற்கு இனத்திற்கு பூரண உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டது.

'ஜேர்மன் இனம் ஆரிய இனமாகும்' என்ற கருத்து இதன் மூலம் வெளிப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலலேயே இலட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்படுவதை ஜேர்மனிய நாசிச வாதிகள் நியாயப்படுத்தினர்

ஜேர்மனிய இனமான ஆரிய இனமே உலகில் தலைசிறந்த இனம் என்கின்றனர்.  இனவாதம் பாசிசத்தின் முக்கியமானது என்பதோடு அதுவே வரலாற்றில் திறவுக்கோள் என்கின்றனர். கி

கிட்லர் தான் எழுதிய 'மெயின் கேம்ப்ட்' என்ற நூலில் முதலாம் உலக மகாயுத்ததில ஜேர்மனி படுதோல்வியடைந்ததுக்கு இங்குள்ள யூதர்களும் சோசலிட்டுக்குமே காரணம் என்கின்றார். பாசிச வாதிகள் தமத இனத்தை மேம்படுத்தி காட்டுவதற்காக உலக மக்களை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.

    01 கலாசாரத்தை தோற்றுவித்தார்

    02. கலாசாரத்தை ஏற்றுக்கொள்வோர்

  03. கலாசாரத்தை அழிப்போர்.

  இம்மூன்று பகுதிகளும் ஜேர்மனிய இனத்தை கலாசாரத்தை தோற்றுவிக்கும் பிரிவிலும் உலகில் யூதர்கள் தவிர்ந்த ஏனையோரை கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளும் பிரிவிலும் வகைப்படுத்தினார். யூதர்களை அழிப்போர் பிரிவிலும் வகைப்படுத்துகின்றார். எனவே கலாசாரத்தை அழிக்கும் யூதர்களை கொலை செய்ய வேண்டும் என கருதி தனது ஆட்சிகாலத்தில்  பல இலட்சம் யூதர்களை நச்சுவாய்யூட்டி கொலை செய்கின்றார் கிட்லர்.

தீவிர இராணுவவாதம் (Extreme Militarism)

தீவிர இராணுவவாதம் இரண்டு மூலங்களிலிருந்து வெளிப்பட்டுள்ளது. 



1. ஜேர்மனியரே உலகின் உயர்ந்த இனம் என்பதால் முழு உலகமும் தங்களது ஆதிபத்தியத்தின் கீழ் கொண்டு வரும் என்ற பரந்துபட்ட சிந்தனை. 

2. ஜேர்மனிய 'ஆரிய' இனத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக கருதுகின்ற ஏனைய இனங்களிலிருந்து 'சுதந்திரம்' அடைவதாகும். இச்சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு ஜேர்மனிய நாசிசவாதிகள் முற்பட்டனர்.


வன்முறையும் தீவிரவாத்ததையும்  (Terror)

அரசியல் அதிகார ஊடகமாக பயன்படுத்துதல்

பாசிச அரசின் அடிப்படைப் பண்பாக முழு சமூகத்தையும் தங்களது ஆதிபத்தியத்தின் கீழ் பலவந்தமாக உட்படுத்திக் கொள்வதாக இருந்தது.

தனது அதிகாரத்திற்கு உடன்படாத சகல சமூக / இனப் பிரிவினரையும் அடிமைப்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் உடலியல் ரீதியாக அழிவை ஏற்படுத்துவதற்கும் பாசிச வாதிகள் ஒழுங்கமைந்திருந்தனர்.


இன சுத்திகரிப்பு  (Genocide)

பாசிச அரசின் கடமை ஆக்கப்பட்டது.

பாசிசவாதத்துடன் உடனபடாத மக்களுக்கு இரு மாற்றுவழிகளே காணப்பட்டன. ஒன்று நாட்டை விட்டுச் செல்லுதல் அல்லது இன சுத்திகரிப்புக்கு உட்படுதல் என்பனவையே அவை.


யுத்தம் (War)

ஜனநாயக ஆட்சி முறையில் சகல சந்தர்ப்பங்களில் யுத்தமானது நிராகரிக்கப்பட்டிருந்தாலும் சோசலிச ஆட்சி முறையில் ஒரு கட்டத்தில் சகல சந்தர்ப்பங்களிலும் யுத்தமானது அனுமதிக்கப்பட்டிருக்கும் எனவே தான் இதனை பின்வருமாறு கூறுகின்றார்கள். 'யுத்ததினால் தோன்றி யுத்ததினால் வளர்ந்து யுத்ததினால் மறையும் அரசு'

பாசிசவாதிகள் 'சமாதானம் என்பது கோழைகளின் கனவு' என்கின்றனர். 

அத்துடன் இறைமை படைத்த எந்தவொரு நாடும் கட்டாயம் யுத்தம் செய்ய வேண்டும் என்கின்றார்கள். இறைமைப் படைத்த எந்தவொரு நபரும் எந்த ஒரு அரசும் யாருவருக்கும் கட்டுப்பட கூடாது என்கின்றனர். 

பாசிச அரசை ஒரு மரமாக உடுத்து கொண்டால் அதற்கு நீராக ஊற்றப்படுவது மனித இரத்தமாகும். பசளைகளாக இடப்படுவது எழும்புகளாகும். இவ்வாறு பாசிசத்தில் யுத்தமானது மேம்படுத்தி காட்டபடும்.

பாசிச தலைவர்களுள் முசொலினி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். எனக்கு கலை என்னும் சொல்லை கேட்டவுடன் துப்பாக்கியை எடுத்து சுழற்றும் எண்ணமும் தான் நினைவுக்கு வருகிறது.  யுத்தங்களே ஒரு மனிதனது ஆளுமையை வெளிப்படுத்துவதற்கு சிறந்த இடம் என்கின்றார்.

யுத்தம் செய்ய முடியாத நாடுகள் அனைத்தும் தேங்கி நிற்கும் நீருக்கும் சமம் என்கின்றார். இவ்வாறு பாசிசத்தில் யுத்தம் முதல் நிலைத்திருக்கும். யுத்ததினால் வளர்ந்து யுத்ததினால் மடியும் அரசு எனப்படுகின்றது. 

தாராள, சோசலிஸ்ட் தத்துவங்களுக்கு முரணானது.

பாசிசவாதி சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளாக காணப்படுகின்றனர். சோசலிசவாதிகள் பொதுவுடைமையை வலியுறுத்துகின்ற பாசிசவாதிகள் நிராகரிக்கின்றனர்.

பாசிசம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ஆட்சி முறையாகும். ஜனநாயகம் பெருபான்மையோர் ஆட்சி என்ற தத்துவத்தை நிலைநிறுத்த பாசிமானது அதனை நிராகரிக்கின்றது. 

பாஸிஸ அரசில் எல்லா ஊடகங்களும் நாயகர் வழிபாட்டினை வெளிப்படுத்த வேண்டும். 

அரசியல் கட்சி, அமுக்கக்குழுக்கள் முழுமையாக தடைசெய்யப்படும்.

மக்களின் அரசியல் பங்குப்பற்றலை பாஸிஸவாதம் எதிர்க்கின்றது. 

அரச நிருவாக செயற்பாடுகள் முழுமையாக ஆட்சியாளனின் எதேட்சை அதிகாரத்தின் கீழ் நடைபெறும் 

அரசின் சட்டம் என்பது ஆட்சியாளனின் விருப்பங்களாகும்


இத்தாலிய பாசிசம்

முதலாம் உலகமகா யுத்ததில் இத்தாலி வெற்றி பெற்ற அணியில் காணப்பட்ட போதிலும் யுத்ததின் பின் செய்த கொள்ளப்பட்ட வேர்சாய் உடன்படிக்கையானத இத்தாலிய மக்கள் எதிர்ப்பார்த்தளவு நன்மைகளை பெற்றுத்தர தவறிவிட்டது. ஆத்துடன் இக்காலப்பகுதியில் இத்தாலியில் நிலவிய பொருளாதார மந்தம் சமுக சீர்கேடுகள் போர்களத்தில் இருந்து நாடு திரும்பிய இராணுவ வீரர்கள்pன் விரத்தியுற்ற மனநிலை என்பன போன்ற காரணிகளை இத்தாலியை மேலும் பல சிக்கலுக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் இத்தாலிய மக்கள் தமது நாட்டை புத்துயிர் பெற செய்ய புதியதொரு தலைவரை எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் 1882அம் ஆண்டு ஜீலை மாதம் 29ஆம் திகதி பிறந்த பெனிற்றே முசோலினி என்பவர் முன்னிலைக்கு வருகிறார.;

     இவர் ஒரு சாதாரண பத்திரிக்கையாளர். புhசிசவாதியான முசொலினி தமது முதலாவது கருத்தினை 1919 ஆம் ஆண்டு திலான் நகரில் வெளியிடுகின்றார். 1921ஆம் ஆண்டு பாசிச கட்சியை நிறுவினார். 1922ஆம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வேண்டும் எனவும் அடுத்த தேர்தலுக்காக திகதி குறிப்பிடப்பட வேண்டும் எனவுமு; அவ்வாறு இல்லாத பட்சத்தில் தான் இத்தாலிய அரசிற்கு எதிரான இத்தாலியின் புனித நகரான உரோம் நகரை நோக்கி ஊர்வலம் ஒன்றை செல்ல இருப்பதால் உச்சரிக்கின்றார். 

   இரரின் எச்சரிக்கையை அத்தாலிய அரசு பொருட்படுத்தாமையால் 1922 ஆம் ஆண்டு பிற்காலப்பகுதியில் தாம் திட்டப்படி சுமார் 2500 இராணுவ வீரர்களை தம்மொட அணைத்துக்கொண்டு இத்தாலிய அரசக்கு எதிரான ஊர்வலம் செல்கின்றார். முசொலினியின்  அச்செயற்பாடு  இத்தாலிய அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு  என  கருதிய அப்போதைய ஜனாதிபதி 3ம் விக்டர் இமானுவேல் பாராளுமன்றத்தை கலைத்து முசொலினியை ஆட்சியமைக்க பணிக்கின்றார். 

   இவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய முசொலியனி முதலில்  தன்னை ஒரு ஜனநாயக்வாதியாக  காட்டிகொண்டு பின்னர் தமது சர்வதிகாரம் பாசிச ஆட்சியை நிறுவினார். ஆவ்வாட்சியானது 1922ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி வரை நீடித்தது. அதனால் முசொலினி கொலை செய்யப்பட்டதனை தொடர்ந்து அவ்வாட்சி முடிவுற்றது. 

ஜேர்மனிய பாசிசமும்

ஜேர்மனிய நாசிசவாத ஆட்சியாளரான அடொல்ப் கிட்லர் (யுனனழடிh ர்வைடநச) 1925 - 26 களில் அரசியல் சிறைக்கைதியாக இருந்தபோது வெளியிட்ட 'எனது போராட்டம்' (ஆநin முயஅpக) என்ற நூலில் பாசிசவாதத்தின் அடிப்படை மற்றும் நோக்கங்களை மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். முதலாம் உலகபோரில் ஜேர்மனி படுத்தோல்வி அடைந்தது அத்துடன் வெற்றியீட்டிய நாடுகளின் தலையீட்டினால் வெர்சல்ஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டிய தேவை ஏந்பட்டது.இக்கால பகுதியில் ஜேர்மனியில் வைமார் எனப்படும் கூட்டாட்சி முறை நிலவியது. இது ஜேர்மனியின் வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. வெர்சல்ஸ் உடன்படிக்கை மூலம் ஜேர்மனி பெரும்பாலான பணத்தை வெற்றியீட்டிய நாடுகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் ஜேர்மனியின் பொருளதாரமானது பாதுகாப்புக்குள்ளானது. 

    வைமார் எனப்படும் கூட்டாட்சி;யை நீடிக்க முடியாது என மக்கள் கருதினார்கள். இந்நிலையில்  இத்தாலிய மக்களை போன்று ஜேர்மனிய மக்களும் புதியோர் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிறந்த இட்லர். முண்ணனிக்கு வருகின்றது. 

கிட்லர் ஒரு இரும்பு உருக்குப்பட்றையில் சாதாரண தொழிலாளி. ஜேர்மனிய கட்டடாய இராணுவ பயிற்சியில் சேர்கப்பட்டார் பயிற்சிகாலத்திலும், யுத்தகாலத்திலும் இவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக ஜேர்மனிய அரசு இரும்பு சிலுவை என்ற விருதை வழங்கி கௌரவித்தது. தமது நாவன்மையை பயன்படுத்தி இவர் மக்களை தம் பக்கம் ஈர்த்து எடுக்கிறார் ஜேர்மனியில் தற்போது நிலவும் வைமார் ஆட்சி ஜேர்மனிக்கு இலுக்கை ஏற்படுத்த கூடியது. ஏனவெ அது உடனடியாக தகர்த்து எறியபட வேண்டும். ஆத்துடன் 1ம் உலக மகா யுத்தின் போது ஜேர்மனி இழந்த இழப்பீடுகளை உடனடியாக ஈடு செய்ய வேண்டும். என்று மக்கள் மத்தியில் தேசப்பற்றை தூண்டிவிட்டார்.

1ம் உலகமகா யுத்ததின் பொழுது ஜேர்மனி தோல்வி அடைந்;தமைக்கு யூ10தர்களும்,  சோசலிஸ்டுகளும் காரணம் என கருதி அவர்களை நாட்டிலிருந்து அழிக்க வேண்டும் என கூறினார். தமது கொள்கையை பரப்புவதற்காக 1920 ஆம் ஆண்டு ஆண்டு ஜேர்மனிய தொழி;ற்கட்சியை நிறுவினார். பின்னர் அதனை தேசிய சோசலிச ஜேர்மனிய தொழிற்கட்சி என பொயர் மாற்றினார். 

1933ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கிட்லரின் நாசிச கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய கிட்லர் ஜேர்மனிய அதிமுக்கியமான பதவியான சான்சலர் பதவியை பெற்றுக்கொண்டார். 1934ஆம் ஆண்டு ஜனாதிபதியான கிடன்பேர்க் இறந்ததை தொடர்ந்து ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொண்டார். 

ஆட்சி அதிகாரத்தை பெற்றக்கொண்ட இட்லர் 1933ஆம் ஆண்டு தொடக்கம 1944ஆம் ஆண்டு வரை தமது ஆட்சி காலத்தில் ஜேர்மனிய பொருளாதார இரானுவ ரதீயான சக்திமிக்க நாடாக கட்டியெழுப்பினார். புல நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகின்றார். 2ஆம் உலக மகா யுத்ததிலும் ஜேர்மனியை பங்கேற்க செய்தார். அதிலும் ஜேர்மனி படுதோல்வியடைந்தது. முசொலினி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தற்கொலை செய்து கொள்கிறார். அத்துடன் ஜேர்மனிய பாசிசம் முற்று பெறுகிறது. 

   1922ஆம் ஆண்டு இத்தாலியில் நிலவிய சூழ்நிலையையும் 1933அம் ஆண்டு: ஜேர்மனியில் நிலவிய சூழ்நிலையும் தமக்கு சார்பாக பயன்படுத்தி ஆரம்பத்தில் தம்மை ஜனநாயக வாதயாக காட்டி கொண்டு பின்னர் தமது  பாசிச ஆட்சியை  நிறுவியதால் பாசிச அட்சிமுறை 'ஒரு சந்தர்ப்பவாத ஆட்சி முறை' என்கின்றார். 

   






மதசார்பற்றவாதம் (Secularism)

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE

• மதசார்பின்மைவாதம் என்பது சமயத்தையும் அரசியலையும் ஒன்று கலக்காமலிருப்பதாகும். 

• அரச துறைக்கு சமயத்தின் அழுத்தமோ, சமய துறைக்கு அரசின் அழுத்தங்களோ இல்லாமல் இவை இரண்டும் ஒன்றிற்கொன்று வேறுபட்ட மற்றும் சுயாதீனமான இரண்டு துறைகளாக கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் கருத்தியலாகும். 

• சமயம் அரசியலுக்குள் பிரவேசித்தல், அரசியலுக்காக சமயத்தை ஊடகமாக பயன்படுத்திக் கொள்ளும் பின்னணியில் சமய முரண்பாடுகள் பிரதான அரசியல் கருத்தியலாக காணப்படுகின்ற தற்காலத்தில் மதசார்பற்றவாதம் தொடர்பான இந்திய அரசியலமைப்பிலும் அரசியல் முறைமையிலும் அடிப்படையான கோட்பாடாவும் உள்ளது. தோற்றம் 

இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலொன்று இந்தியாவில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதோடு அரசு மதசார்பற்றதாக இருக்க வேண்டும் என 1975இல் அரசியலமைப்பிற்கு சேர்க்கப்பட்ட சீர்திருத்தத்திலும் குறிப்பிடப்படுகிறது. இது ஜனநாயகத்தைப் போன்றே முக்கியத்துவம் பெறுவதோடு, இந்திய அரசியலமைப்பிலும் அரசியல் முறைமையிலும் அடிப்படையான கோட்பாடாவும் உள்ளது.




தோற்றம்

• 18 - 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. 

• ஐரோப்பிய ஞானிகளின் (Enlightement) சிந்தனையின் ஒரு பகுதியாகும். 

• அதனால் மதசார்பின்மைவாதமானது பழைமை தாராண்மைவாதத்தோடும் சமவுடைமைவாத சிந்தனையுடனும் தொடர்புபட்டது. 

• ஐரோப்பிய மதசார்பின்மைவாதம், மத்திய காலத்தின் இறுதி காலத்தில் பிரதான அங்கமாக அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட நிறுவன இணைப்பின்மீது அரசாட்சியின் காவலனாக திருச்சபை இருந்தமைக்கு எதிராக வளர்ச்சியுற்றதாகும். 

• அரசாட்சி முறைமைக்கு எதிரான இயக்கங்கள் அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட இந்த 'தூய்மையற்ற கூட்டிற்கு' எதிரானதன் மூலம் அந்த போராட்டத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விளைவாகவாவே மதசார்பின்மைவாதமானது தோன்றியது. 

• மதசார்பின்மை வாதம் தோற்றம்பெறுவதற்கான மற்றுமொரு காரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் தோன்றிய தர்க்க அறிவுக்கு முதலிடம் கொடுத்தமையை சுட்டிக் காட்ட முடியும். இது திருச்சபை முன்னெடுத்துச்சென்ற அஞ்ஞான ரீதியான ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். 

• மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய மதசார்பின்மைவாதம், பழைமை தாராண்மை வாதத்தினதும், சமவுடைமை வாதத்தினதும் சிந்தனை ரீதியிலான மூலமாகும். 

• தாராண்மை வாதம், மதச்சார்பின்மையில் தனியாள் சுதந்திரம், சிந்தனை மற்றும் மனசாட்சியை பின்பற்றும் சுதந்திரம் ஆகிய மூலத்தத்துவங்களை அரசின் தன்மை, அரசின் கொள்கை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமயம் தலையிடக் கூடாது என்பதோடு சமய விடயங்களில் அரசு தலையிடக் கூடாது என கருதப்படுகிறது.

இதன்படி 'திருச்சபையும் அரசையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்துவது' (Separation of church and the state) ஐரோப்பிய தாராண்மைவாத மற்றும் சமவுடைமை வாத சம்பிரதாயத்தினுள் தோற்றம் பெற்ற பிரதான அம்சமாகும்.

தாராண்மைவாத மதச்சார்பின்மையின் அடிப்படைகள் 

1. அரசும் மற்றும் திருச்சபை ஆகியவற்றை நிறுவன ரீதியாக வேறாக்குதல் : இதனால், அரசின் தன்மை, அரசின் கொள்கை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமயம் தலையிடக் கூடாது என்பதோடு சமய விடயங்களில் அரசு தலையிடக் கூடாது என கருதப்படுகிறது. 

2. அரசு சமயத்துடன் அன்யோன்யமாக இருக்கக் கூடாது மற்றும் சமய கற்கைக்கும் பிரசாரத்திற்கும் அரசு தொடர்புபடாதிருத்தல். 

3. அரசு எந்தவொரு சமயத்திற்கும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாது. சமயம் மனிதர்களின் தனிப்பட்ட விடயமானவதோடு அதை அரசியலுக்கு கொண்டு வர வேண்டியதில்லை. 

4. மதத்தை புறக்கணிக்க வேண்டும் என தாராண்மை மதச்சார்பின்மைவாதம் குறிப்பிடவில்லை. சமய சுதந்திரம் பிரசைகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதோடு சமயத்தின் பெயரால் எந்தவொரு பிரசைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதிலேயே இது கவனம் கொள்கின்றது.

சமவுடைமைவாத மதச்சார்பின்மை 

• மாக்சியவாதிகள் சமயம் சமூகத்தை துன்பத்திற்கு உள்ளாக்கும் நிறுவனம் ஒன்றெனவும் உலகம் பற்றிய தவறான விளக்கம் ஒன்றை துன்பத்திற்குள்ளான மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் கருத்து தொகுதி ஒன்றெனவும் அறிமுகம் செய்தனர். மாக்சியவாதிகளின் கருத்துப்படி சமூதாய வரலாற்றில் அடித்தளமாக இருப்பது சமயமே. இச்சமய வடிவங்களே வரலாற்றுக்காலக்கட்டங்களின் புறத்தோற்றப்பாடுகளை நிர்ணயிப்பதாகவும் கருதினர். ஒரு நல்ல சமூதாயம் நல்லதாக இருப்பதற்கு நல்ல சமயமே காரணம். மோசமான சமூதாயத்தை இல்லாமல் செய்தல் அல்லது மாற்றுவதன் மூலம் சமூதாயத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்கின்றனர். 1917 ஆம் ஆண்டுசோசலிச அரசினை தாபித்த ரஸ்யா அரசுக்கு மதம் இல்லை என்ற கோட்பாட்டினை முன்வைத்தது.

• சமவுடைமைவாத மதச்சார்பின்மையின் அடிப்படைகள் 

1. சமவுடைமைவாத அரசு முழுமையாக சமயத்திலிருந்து வேறுபடுத்தப்பட்டிக்க வேண்டும். மதமானது அரசின் அனுமதியுடனேயே நிலவ முடியும். 

2. சமவுடைமைவாத முறையினுள் சமயம்சார், அரசியல்சார் நிறுவனங்களுக்கு இருப்பு கிடையாது. 

3. அரசின் தீவிர மேற்பார்வையின் கீழ் சமவுடைமைவாத அரசுக்கு அதனால் அச்சுறுத்தல் இல்லாத வரையில் மட்டுமே மாக்சியவாத முறைமையினுள் சமய நிறுவனங்களுக்கு இடம் கிடைக்கும். 

4. சமய அடையாளத்துடன் அரசியல் மற்றும் சிவில் சமூக இயக்கங்களை நிறுவுவதற்கு வாய்ப்பு இல்லை.


இந்திய மதசார்பின்மைவாதம் 







• தாராண்மைவாத சிந்தனையின் அடிப்படையில் இந்திய மதசார்பின்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

 • இந்திய மதசார்பின்மையின் பிரதான பண்புகள் : 

1. இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 

(அ). தாராண்மை மதசார்பின்மை வாதத்தின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை அனைத்து மதங்களையும் பக்கசார்பின்றி (Impartical) பார்ப்பதாகும். இந்தி மொழியில் அது 'அறநெறி சார்பின்மை' என குறிப்பிடப்படுகிறது. 

(ஆ). சகல மதங்களையும் சமமாக மதித்தல். அதாவது சகல மதங்களும் சமமானவை என ஏற்றுக் கொள்வதாகும். இது 'சர்வ அறநெறிகளினதும் சேர்க்கை' என்ற எண்ணக்கருவினால் வெளிப்படுத்தப்பட்டது.

 1. தனிநபர்களின் சமய அடையாளங்களை கவனத்தில் கொள்ளாது அரசானது சகல பிரசைகளையும் ஒரே சமமாக மதிப்பளித்தல் 

2. பிரசைகளின் உரிமைகளை பெற்றுக் கொள்ளும்போது எந்தவொரு பிரசைக்கும் தனது சமய அடையாளங்கள் தடையாக இருக்க மாட்டாது.

மதசார்பின்மையும் அரசியலும் 

• மதசார்பின்மையின் மூலம் மேற்கொள்ளப்படுவது அரசு மற்றும் சமயங்களுக்கிடையிலான தொடர்பு, அரச கொள்கை மற்றும் பிரசைகளின் உரிமைகளை மதச்சார்பின்றி நிர்ணயிப்பதாகும். 

•எனினும், அரசியலில் மதம் தொடர்புபடாதிருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. 

• மதசார்பின்மை காணப்படும் நாடுகளில் மதவாத அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் காணப்படுவதோடு இந்தியா அதற்கு சிறந்த உதாரணமாகும். 

• மதசார்பின்மையின் தற்கால முக்கியத்துவம் 

• மதசார்பின்மைவாதம் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற இரு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. 

1. சமய அடிப்படைவாதத்தை துணையாகக் கொண்ட மதம்சார் அரசுகள் (Theocratise State) தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படல்.  

2. பன்மைக்கலாசாரவாதத்தினை மையப்படுத்தி சமய அடையாளங்களை உடைய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.