வெளிநாட்டு கொள்கையும் அதனை தீர்மானிக்கும் பிரதான மூலங்களும்

வெளிநாட்டு கொள்கையானது சர்வதேச நடத்தைகளுக்கான மதிநுட்பமான முக்கிய திறவு கோலாகும். அதன்படி வெளியுறவு கொள்கை என்பது சர்வதேச சூழலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்பாட்டுக்கு தானாகவே இசைவடைந்து ஏனைய அரசுகளின் சமூக மாற்ற நடத்தைகளால் வெளிப்படுத்தப்படும் செயற்பாட்டு விதியாகும். அந்த வகையில் வெளிநாட்டு கொள்கை என்பதற்கு சரியானதொரு விளக்கம் காணுவது மிகவும் கடினமான விடயம் எனலாம். எனினும் வெளிநாட்டுக் கொள்கை என்பது வேறுபட்டதொன்று அல்ல. உண்மையில் தேசியக்கொள்கையின் ஒரு பகுதியே வெளிநாட்டுக் கொள்கை ஆகும். வெளிநாட்டுக் கொள்கை தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஏனைய அரசுகளுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்துவதற்கு உதவுகின்றது. ஏறக்குறைய எல்லா அரசுகளும் வெளிச்சூழலினுடைய யதார்த்தத்திற்கும் தங்களுடைய பயத்திற்கும் உட்பட்டு தேசிய நலனை முன்னேற்றுகின்ற செயற்பாட்டிற்காக வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கின்றனர். அண்மைக்காலங்களில் வெளிநாட்டுக் கொள்கை என்ற பதம் மிகவும் அகலமானதும் ஒரு அரசாங்கம் ஏனைய சர்வதேச அரசாங்கங்களுடன் வைத்திருக்கும் எல்லா விதமான உறவுகளையும் குறித்து நிற்கின்றது. மேலும் ஒரு அரசாங்கம் மேற்கொள்கின்ற அரசியல் சாரா உறவுகள் கூட வெளிநாட்டுக் கொள்கை என்ற வியாபகத்துக்குள்ளேயே உள்ளடக்கப்படுகின்றது.
வெளி நாட்டுக்கொள்கை என்பதற்கு சரியானதொரு கருத்து ஒருமைப்பாடு அறிஞர்களிடம் காணப்படவில்லை  உதாரணமாக ஜிப்சன் (புiடிளழn), மொடல்ஸ்கி (ஆழனயடளihi), நோகேட்ஸ் (ழேசவாநனபந) பிறங்கல் (குசயமெநட), பந்தோபாட்யாயா (டீயனெழியனலயலய) அப்பாதுரை போன்ற அறிஞ்களும் இதனை வரைவிலக்கணப்படுத்துவதிலும் அர்த்தம் கொடுப்பதிலும் வேறுப்படுகின்றனர்.
கியூ ஜிப்சன் :-“வெளிநாட்டுக் கொள்கை என்பது உலகின் மற்றைய பகுதிகளோடு ஓர் அரசாங்கத்தின் தொடர்புகளை இணைத்து நடாத்துவதற்கான திட்டவட்டமான அறிவு, அரசியல் அனுபவம், என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் விரிவான திட்டமே வெளிநாட்டு கொள்ளையாகும.; அது அந்நாட்டின் நலனை பேனுவதனையும், பாதுகாப்பதனையும் இலக்காக கொண்டிருத்தல் வேண்டும் என அவர் விளக்கியுள்ளார”;. இவர் ஏனைய நாடுகளுடன் இணைந்து தமது நாட்டின் தேசிய நலனை பேனுவதனை இலக்காக கொண்டு செயற்படுவதை குறிப்பிடுகினறார்.
எப்.எஸ்.நோர்ட்ஸ் :- “வெளிநாட்டுக் கொள்கை என்பது சம்பந்தப்பட்ட ஓர் அரசு அது விரும்பும் வகையில் மற்றைய அரசுகளின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை செயற்படுத்த தூண்டும் அரசியற் செல்வாக்கை பயன்படுத்துவதே வெளிநாட்டு கொள்கை எனப்படும். மேலும் நாட்டின் எல்லைக்குள் அப்பால் தோன்றும் சக்திகளும் அவற்றில் செயற்படும் உத்திகளும் ஒன்றோடு ஒன்று பாதிப்புகளை ஏற்படுத்துவதே வெளிநாட்டு கொள்ளை” என்று அவர் விபரிக்கின்றார.;
ஜோர்ஜ் மொடல்ஸ்கி (புநழசபந அழனநடளமi) என்பவர் “வெளிநாட்டுக் கொள்கை என்பது மற்றைய அரசுகளின் நடத்தையினை மாற்றும்  சர்வதேச சூழலிற்கு உகந்தவாறு தனது சொந்த நடவடிக்கைகளை  மாற்றுவதற்கு சமூதாயங்களால் உருவாக்கப்படும் நடவடிக்கைளை கொண்ட ஒருமுiயே ஆகும்”.
மொடல்ஸ்கி தனது  வரைவிலக்கணத்தில் கொள்கை என்றொரு விடயத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றார். கொள்கை என்பது அரசுகளின் நடத்தைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை இலக்காகக் கொண்டு வெளிநாட்டுக் கொள்கையின் முதன் நிலை நோக்கத்தினை உருவாக்குவதாகும். உண்மையில் வெளிநாட்டுக் கொள்கை அரசு தற்போது பின்பற்றுகின்ற நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வௌ;வேறு நேரங்களில் வெளிப்படுத்தப்படும் தொடர்ச்சியான நடத்தைகள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இது தேசிய நலனை கருத்திலெடுத்து உலக மாற்றங்களுக்கு ஏற்ப வகுக்கப்படுகின்றது.
ஹாட்மன்:- “வெளிநாட்டு கௌ;கை என்பது தெளிவாக தெரிவு செய்யப்பட்ட தேசிய நலன்களை ஒழுங்குமுறைப்படுத்தி கூறுவதே வெளியுறவு கொள்கை என்றும் இன்னுமோர் வகையில் கூறின் ஏனைய அரசுகளிலிருந்து தம்மை பாதுகாப்பதற்கான பேச்சு வார்த்தைகளின்போது  அல்லது இன்றியமையாத நலன்களுக்கான திடமான ஒருமித்த கொள்கைகளின் உருவாக்கம், அமுலாக்கங்களுடன் தொடர்பு பட்டதே வெளியுறவு கொள்கை” ஆகும் என்று கூறுகின்றார்.
பீலிக்ஸ் குறோஸ் (குநடனைள பசழளள):- நெகிழ்வான ஒரு விளக்கத்தினை  வெளிநாட்டுக் கொள்கைக்கு கொடுக்கின்றார் அதாவது “ஒரு அரசு சில அரசுகளுடன் உறவுகளை பேணுவதில்லை என தீர்மானித்தால் அதுவும் கூட வெளிநாட்டுக் கொள்கைதான்”  என்கின்றார். இதற்கு நேர் நிலையானதும் எதிர் நிலையானதும் ஆன இரு கருத்துக்கள் காணப்படுகின்றன. எதிர் நிலையான தன்மை யாதெனில் ஒரு அரசு தனது நலனிற்காக தனது நாட்டு நடத்தையை மாற்றுவதில்லை என்ற இலக்கு காணப்படுமாயின் அது எதிர் நிலையானதாகும். ஒரு அரசு தனது தேசிய நலனிற்காக தனது நடத்தையினை மாற்றிக்கொள்ளுமாக இருந்ததாhல் அது நேர் நிலைக் கொள்கையாகும்.
மோகன்தோ:- “வெளிநாட்டுக் கொள்கை என்பது போதிய அதிகாரத்தின் மூலம் தேசிய நலன்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தை கொண்ட சொற்றொடர் என்கிறார். பேராசிரியர் கருணாதாச “எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்காக பின்பற்றக்கூடிய கொள்கைகளின் செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கையாகும்” என்கிறார்.
எஸ்.யூ.கொடிக்கார அவர்களின் விளக்கமானது, “ஒரு அரசின் வளங்களை பொருளாதாரம், இராஜதந்திரம், பிரச்சாரம் என்பவற்றை பயன்படுத்தி பொதுவாக தேசிய நலன் என அழைக்கப்படுவதை முன்னேற்றுவதற்காக மற்றைய அரசுகளின் நடத்தைகளைத் தூண்டுவதே வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளடக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
புடல்போர்டும,;; லிங்கனும்; (Pயனனடந கழசன யனெ டுinஉழடn) என்பவர்கள் “வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களை பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல்நிலை மூலக்கூறு” எனக் கூறுகின்றார்கள்.  வெளிநாட்டுக் கொள்கையில் தேசிய நலன் என்பதே முதல்நிலை கூறாகும.; இவ் நலன்களே இறைமையுடைய அரசுகளின் இலக்குகளாகும். இவ் தேசிய நலன்கள் என்ற இலக்கினை அடைவதற்கு அரசுகள் வெளிநாட்டுக் கொள்கையுடாக உறுதியான வடிவத்தை கொடுக்கின்றன.
புடல்போர்டும்; லிங்கனும் வெளிநாட்டுக் கொள்கையின் இரண்டு தொழிற்பாடுகள் பற்றி தெளிவுபடுதிதுகிள்றார்கள். முதலாவது தொழிற்பாடு ஆழமான இலக்குகள் பற்றிய சிந்தனையாகும். இரண்டாவது தொழிற்பாடு தேசிய நலனை பாதுகாப்பதாகும்;.
சீ.சீ.ரொடி (ஊ.ஊ.சுழனநந) என்பவர் “வெளிநாட்டுக் கொள்கை என்பது கொள்கை தொகுப்பு எனக் கூறகின்றார”;. இக்கொள்கை தொகுப்புக்குள் ஏனைய அரசுகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு அரசு தனது தேசிய நலனை பாதுகாப்பதற்கு ஏற்ற விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவரின் வார்த்தையில் கூறுவதாயின் “வெளிநாட்டுக் கொள்கை கொள்கை தொகுப்புக்களின் உருவாக்கத்துடனும்இ அமுலாக்கத்துடனும் தொடர்புடையதாகும். இக்கொள்கை தொகுப்புக்கள் அரசுகள் தமது   ஆழமான  தேசிய நலனை பாதுகாப்பதற்காக ஏனைய அரசுகளுடன் நிகழ்த்தும் பேரம்;; பேசுதலின் போது ஒரு அரசின்  நடத்தை முறைமையை உருவாக்குகின்றன”. எனக் கூறுகின்றார். இவ்வரைவிலக்கணம் அரசுகளினால் தீர்மானிக்கப்பட்ட  கொள்கை தொகுப்புகளே  வெளிநாட்டுக் கொள்கை எனக்கூறுகின்றது. இக்கொள்கைகள் அரசுகளின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தி அரசின் தேசிய நலன்களுடன் தொடர்புபடுகின்றன. தேசிய நலனை மையமாக வைத்தே தமக்கிடையிலான உறவுகளை பேணிவருகின்றன. வெளிநாட்டுக் கொள்கையானது, பகுத்தறிவூ ரீதியான தரத்தை விட ஒரு நாட்டினுடைய இலக்குகளை எவ்வாறு அடைந்துக்கொள்ளுதல் என்பதனை எடுத்துரைக்கின்ற சொற்றொடரெனவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே அரசின் இலக்கு, தேசத்தின் நலன், தேசிய பாதுகாப்பு போன்றவற்றை அடித்தளமாக கொண்டும், உலக ஒருங்கிணைப்பினை மையமாக கொண்டும் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்படுவது யதார்தமானதாகக் காணப்படுகின்றது. தேசத்தின் இலக்கு மற்றும் அதன் அபிலாஷை எனும் போது நாட்டிற்கு நாடு பாரிய அளவு மாற்றம் பெறாத தன்மையானது, அந்நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளடக்கங்களில் இனங்காண முடிகின்றது. பிரதானமாக நாட்டின் அபிலாஷைகள் எனும் போது, ஒரு நாட்டினால் அல்லது அங்கு வாழும் மக்களால் அடைந்துக் கொள்வதற்காக அல்லது எதிர்பார்க்கப்படும்; உயர்தரமான எண்ணங்கள், விருப்புக்கள் எனலாம். அடிப்படை அபிலாஷை என்பதானது, காலத்தின் தேவை கருதி மாற்றமடையாது இஸ்தீரமான நிலையில் காணப்படும் அபிலாஷைகளாகும். மாறாக காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையக் கூடிய அபிலாஷைகளும் காணப்படுகின்றன. அதாவது, ஒரு நாட்டில் காணப்படக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரம் உட்பட நாட்டின் வெளிவாரியான காரணிகள், உள் நாட்டின் அரசியல் மாற்றங்கள் அரசியல் நிகழ்வூகள், அரசாங்க பிளவூகள் என்பவற்றினால் தேசிய அபிலாஷை என்பது மாற்றமடையக் கூடியதாக காணப்படுகின்றது. இஸ்தீரமான அபிலாஷையானது உயர் தரமானதாகவூம், பலம் பொருந்தியதாகவூம் காணப்படுவதுடன், இது ஒரு நாடு சர்வதேச அளவில் பிரசித்தம் பெறுவதற்கான ஏற்பாடாகவூம் அமையப்பெற்றுள்ளது.
இதில் தேசிய அபிவிருத்தி என்பது முதன்மையானதாகக் காணப்படும். பிரதானமாக காலனித்துவம் வீழ்ச்சியடைந்த அல்லது காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாடுகள் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதில் இத்தேசிய அபிவிருத்தியை அதிகளவில் கருத்திற் கொள்வதுடன் விசேடமாக நாட்டினை அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து பாதுகாப்பதில் அதி அக்கறை கொண்ட கொள்கைளை வகுக்கும் நிலையினையூம் காணலாம். இவ்வாறான தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு தேசிய அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டுக் கொள்கையில் தேசிய அதிகாரமானது, பாரியளவில் வெளிப்படுத்தப்படும் அதேவேளை, ஒரு நாடு இதன்மூலம் எவ்வளவு தூரம் பலம் பொருந்தியது அல்லது பலமற்றது என்பதனை அறிந்துக்கொள்ள முடியுமாகின்றது. மாறாக ஒரு நாடு பலம் பொருந்தியதா இல்லையா என்பதனை இக்குறிப்பிட்ட நாட்டின் மீது ஏற்படுத்தப்படும் அந்நிய நாட்டு அழுத்தங்கள் மூலமும் விளங்கிக்கொள்ள முடியுமாகின்றது.
வெளிநாட்டுக் கொள்கையினை கோட்பாட்டு அடிப்படையில் மொடல்ஸ்கி குறிப்பிடுகையில் “ஏனைய அரசுகளின் நடவடிக்கைகளை மாற்றுதல், மற்றும் சர்வதேச சூழலுக்கு அவர்களது செயற்பாட்டினை பொருந்தச் செய்வதற்காக சமூகத்தால் வெளிப்படுத்தப்படும் செயற்பாட்டு முறைமை” என்கிறார். எனவே, குறிப்பிட்ட நாட்டின் தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், சர்வதேச நாடுகளுடன் உறவுகளைப் பேணிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கொள்கையானது உபாய ரீதியான கருவியாக செயற்படுகின்றது என்று கூறலாம்.

பொதுவாக ஒரு அரசின் வெளியுறவு கொள்கைகளை உருவாக்கும் போது பின்வரும் நோக்கங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
1)    அரசின் ஒருமைப்பாட்டினை பேணுதல்
2)    பொருளாதார நலனை உயர்த்துதல்
3)    தேசிய பாதுகாப்பிற்கான முன்னேற்பாடுகள்
4)    தேசிய அதிகாரம், தேசிய அந்தஸ்தினை உயர்த்தலும், பாதுகாத்தலும்
5)    உலக ஒழுங்கினை பேணுதல்
எவ்வாறாயினும் வெளிநாட்டு கொள்கை உருவாக்கத்தில் தேசிய நலன் என்பது பிரதான எண்ணக்கருவாகும். அத்தோடு வெளிநாட்டு கொள்கை உருவாக்கத்தில் மையமாக அமைவது தேசிய நலன் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்’
ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கையானது பல விடயங்கள், ஆற்றல்களால் தீர்மானிக்கப்படுவதையும் அவதானிக்க முடியும் இவற்றில் சில நிரந்தரமாவைகளாகவும் அவதானிக்க முடியும் இவற்றில் சில நிரந்தரமானவைகளாகவும், சில தற்காலிக மானவைகளாகவும், சில தெளிவானவைகளாகவும். ஏனையவைகள் தெளிவில்லாதவைகள் ஆகும் இவைகள் ஒன்றின் மீது ஒன்று செல்வாக்கு செலுத்துபவைகளாகும். ஒரு நாடு வெளியறவு கொள்கையை உருவாக்கும் போது சில அடிப்படை விடயங்களை பயன்படுத்த வேண்டும். அவைகளாவன புவிசார் தந்திரோபாய நிலை, மக்களின் செயற்திறன், பொருளாதார மேன் நிலை , சித்தாந்தம் போன்றவைகளாகும்.
பிறேச்சர் (டீசநஉhநச) என்பவர் வெளியுறவு கொள்கையினை தீர்மானிக்கும் விடயங்களாக “ புவியில் வெளிவாரியானதும், பூகோளமையமான சுற்றுசூழல் , ஆளுமை, பொருளாதாரம், இராணுவ பலம், பொது அபிப்பிரயாயம் போன்றவையை கூறுகின்றார்.
ஜேம்ஸ் றோசினோ:-  புவியியல் அளவு, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரம், வரலாறு, உயர்வு அதிகார அமைப்பு, கூட்டுக்கள், தொழினுட்பம், கமூகக் கட்டமைப்பு, கருத்து கூறும் மனப்பாங்கு, அரசியல் உறுதித்ன்மை, அரசாங்க அமைப்பு உள்ளார்ந்த, வெளிவாரியான சூழ்நிலை, அடையாளங்கள் போன்றன வெளியுறவு கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றார்.
ஆயினும் அடிப்படையில் வெளியுறவு கொள்கையின் மூலமானதுஒன்றுப்பட்ட வரலாற்று பின்னணி, அரசியல் நிறுவனங்கள், விருப்பம், தனித்தன்மையான புவிசார் சூழ்நிலைகள், அடிப்படை விழுமியங்கள் ஊடாக செயற்படுகின்றன. ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை  என்பது ஏற்கனவே கூறியதுபோன்று தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக்கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும் அதன் நெறியாழ்கையையும் அரசுகளின் இறைமை அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய சர்வதேச சூழ்நிலைகள் என்பவை பெருமளவிற்கு தீர்மானிக்கின்றன. ஒரு அரசினுடைய அரசிற்கு இருக்கக்கூடிய பிரதேச ஒருமைப்பாட்டினை பாதுகாக்கும் தத்துவத்திலேயே தங்கியுள்ளது. அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்பது எல்லா  சூழ்நிலைகளிலும் அரசுகள் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகளவு நன்மைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாக பெற்றுக்கொள்ளுதலை குறிக்கின்றது. சர்வதேச சூழல் என்பது யதார்த்தத்தின் வெளிபாட்டினால் உருவாக்கப்பட்டதாகும்.

வெளிநாட்டு கொள்கையை தீர்மானிக்கும் பிரதான மூலகங்கள்

01.    புவிசார் தந்திரோபாய விடயம்

புவியியல் தேசிய இலக்கினையும் விருப்பத்தினையும் நேரடியாக தீர்மானிக்கின்ற ஒரு விடயமாகும். வெளிநாட்டுக்கொள்கை உருவாக்கத்தில் புவியியல் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. வெளிநாட்டுக்கொள்கையின் இலக்கில் புவியியல் செல்வாக்கில் வழி அரசுக்கு அரசு வேறுபடுகின்றது. புவிசார் தந்திரோபாயத்தின பொருத்தவரையில் நாட்டின் அளவு குறிப்பிட்ட நாட்டின் அமைவிடம், வடிவம், காலநிலை, என்பன முதன்மையானவைகளாகும். நாட்டின் அளவு போதியளவு சனத்தொகையினை கொண்டிருப்பதற்கும் இராணுவத்தினை உருவாக்குவதற்கும் வாய்ப்பானது ஆகும். நாட்டின் அமைவிடம், மலைத்தொடர்கள், காடுகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள், பாலைவனம், சமுத்திரம், போன்ற இயற்கை பாதுகாப்பு எல்லைகளை வழங்குகின்றன. வடிவம் என்பது ஒரு நாடு தொடர்ச்சியான தரை தொடர்பினை கொண்டிருக்கின்றதா? என்பதனை கருத்தில் கொள்கின்றன. ஒரு நாட்டின் புவியியல் அமைவிடம் தேசிய பாதுகாப்பினை பேணுவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

02.    சனத்தொகை 

ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கையில் அரசியல், பொருளாதார இராணுவ விடயங்கள், சனத்தொகையின் அளவு, இயல்பு, விநியோகம் என்பவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆயினும் ஒரு நாட்டின் சனத்தொகையின் அளவு அந்நாட்டின் பொருளாதார இராணுவ உயர்நிலைத்தன்மையினை குறித்து காட்டுவனவல்ல. சமூக ஒருமைப்பாடு அரசியல் கட்டுபாட்டின் போதிய தன்மை, கைத்தொழில் மையவாக்கத்தின் இயல்புசார் போன்றவற்றின் இயல்புகள் முதன்மையானவைகளாகும்.
03.    பொருளாதாரம்
வெளியுறவின் அடிப்படை ஓர் அரசின் பொருளாதார நிலைமையினால் தீர்மானிக்கப்படுகின்றது. உலகில் எந்தவொரு நாடும் தன்னிறவை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய அமெரிக்கா கூட தனது பொருளாதார செழிப்புற்காக சர்வதேச வர்த்தகத்தில் தங்கியுள்ளது. விவசாய நாடுகள் தமது உற்பத்தினை கைத்தொழில் நாடுகளுக்கும், கைத்தொழில் நாடுள் தமது உற்பத்தியை விவசாய நாடுகளுக்கும் விற்பனை செய்கின்றது. இத்தங்கியிருக்கும் நிலமைகள் சர்வதேச பொருளாதார செயற்பாடுகளையும் அதன் வாயிலான வரி ஏற்றுமதி, பங்கு விகிதம், வர்த்தக ஒப்பந்தங்கள், நிதி ஏற்பாடுகள், போன்றன நாடுகளுக்கடையில் ஏற்படவும் காரணமாகின்றன.
ஒவ்வொரு நாடும் பொருளாதார சுய தன்னிறைவை பெறுவதனையே நடைமுறையாக கொண்டுள்ளன. இதனால் நெறி பிறழ்வான சர்வதேச பொருளாதார உறவுகள் ஏற்பட்டு உலகத்தில் பொருளாதார பதற்றம் ஏற்பட்டு வருகின்றது அரசுகள் தமது பொருளாதார பிரச்சினைகளை தீர்த்;து கொள்வதற்கான மாற்றங்கள் வெளியுறவு கொள்கையின் ஊடாகவே பிரதிபலிக்கம் ஓர் அரசு தனது அதிகாரம், அந்தஸ்தினை பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாக அடைந்து கொள்கின்றது.

04.    சித்தாந்தம்

வெளியுறவு கொள்கை சில மனிதர்களின் எண்ணங்களால் உருவமைக்கப்படுகின்றன.  இம்மனிதர்கள் அடிப்படையிலான சில நம்பிக்கைகள்  அதிகாரத்தினை சமூதாயத்தில் நிலை நிறுத்துவதற்கான வழி வகைகளுடன் உடன்படுகின்றவர்களாகும். அதிகாரம் என்பது அரசாங்கத்துடன் முறையான செயற்பாட்டிற்கும் , சமூகத்தின் குறிப்பிட்ட வாழ்கைக்கும் அவசிமானது என இவர்கள் நம்புகிறார்கள். நம்பிக்ககைள், நடத்தைகள், வழக்காறு, மரபுகள், என்பவற்றின் ஒன்று பட்ட திரட்சியே வெளியுறவு கொள்ளையாகும். ஆனால் அறிவு பூர்வமான உண்மை யாதெனில் வெளியுறவு கொள்கையினை தீர்மானிப்பதில் சித்தாந்தம் ஆதிக்கம் செழுத்துவதில்லை சில நாடுகளில் கம்யூனிசத்தினை எதிர்க்கும் கொள்கையினை கொண்டிருக்க சில நாடுகள் முதலாளித்துவ ஜனநாயகத்தினை எதிர்க்கும் வெளியுறவு கொள்கையினை வகுத்து கொள்கின்றன.

05.    பொது அபிப்பிராயம்
பொது அபிப்பிராயம் வெளியுறவு கொள்கையினை தீர்மானிப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயக நிறுவனங்களின் தோற்றம் வாழ்க்கைத்தர உயர்வு உலகப்போர்கள் பெற்றுத்தந்த கசப்பான அனுபவங்கள் கல்வியின் துரித வளர்ச்சி போன்றன வெளிநாட்டுக்கொள்கை உருவாக்கத்தில் பொது அபிப்பிராயத்தின் முக்கியத்துவத்தினை அதிகரிக்க செய்திருந்தன. பெருமளவில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் கடந்த காலங்களில் செல்வாக்கு செழுத்தியுள்ளதாக கூறப்படுகினறது தென் வியட்நாமிலிருந்து ஐக்கிய அமெரிக்கா துருப்புகள் வெளியேறுவதற்கு ஐக்கிய அமெரிக்கா மக்களின் அபிப்பிரயாயம் பெரும் பலமாக இருந்தது. 1962 இல் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது கிருஸ்ணமேனன் பதவி விலகுவதற்கு பொது சன அபிப்பிரயாயம் பெரும் பலமாக இருந்தது இலங்கை விடயத்திலும் 1987 இந்தியா தலையீடு செய்வதற்து தமிழ் நாட்டு மக்களின் பொது அபிப்பிரயாயம் காரணமாக அமைந்தமையை சுட்டி காட்டலாம்.  அத்துடன் உலக அபிப்பிராயத்தின்படி ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்களை ஒரு அரசு தனது நலன்களாக வெளியுறவுக்கொள்கையில் உள்ளடக்க முடியாது. எனவே ஒரு நாட்டினுடைய வெளியுறவுக்கொள்கையை வடிவமைப்பதில் பொது அபிப்பிராயம் முக்கியம் பெறுகிறது. இது அபிவிருத்தியடைந்த நாட்டிற்கு மட்டுமன்றி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிற்கும் பொருந்தக்கூடியரதாகும்.

06.    உள்நாட்டு விவகாரம் 

வெளிநாட்டு கொள்iயை உருவாக்கும் போது தமது நாட்டிலிருக்கும் உள்விவகாரங்களை கருத்திலெடுக்கவேண்டியிருக்கின்றது. ஒவ்வொரு நாடும் சில பிரச்சினைகளையும் உள்நாட்டு மட்டத்தில் எதிர் கொள்கின்றன. இவை சில இயல்பான பிரச்சினைகளாகும். அவை அரசின் பொது நலன், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளாகும். இவை நாட்டுக்கு நாடு வேறுப்படலாம். ஒரு நாட்டின் பொருளாதார தேவைகள் சனத்தொகை, மக்களிடைளே காணப்படும் வேப்பட்ட இன, மத, கலாசார தன்மைகள், புவியியல் அளவு என்பன பொறுத்து வேறுப்படலாம்
இத்தோடு தீர்மானம் எடுப்பவரின் ஆற்றல், ஆளுமை, அரசியல் நிறுவனங்கள் என்பன வெளியுறவு கொளள்கையினை தீர்மானிக்கும் அடிப்படை விடயங்களுடன் இணைந்த பரஸ்பரம் செல்வாக்கு செழுத்துகின்றன.

07.    பிரதேச ஒருமைப்பாட்டினை பாதுகாத்தல்

ஒரு அரசின் முதல் நிலை கடமை தனது பிரஜைகளையும் அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாத்தலே ஆகும். இதற்காக ஒரு அரசு தனது பிரதேசங்களையும் பாதுகாக்க வேண்டும். தேவைப்பட்டால் ஏனைய அரசுகளின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கலாம். அரசுகளின் பிரதான நோக்கம் நோக்கம் தங்களுடைய அரசின் எல்லை பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும்.


08.    பேரம் பேசுதல்

சர்வதேச அரசியலில் அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். எல்லா அரசுகளும் அவை சிறியதோ, பெரியதோ ஒன்று அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியுள்ளது. தங்கியிருத்தல் என்பது மோதலை அல்லது கூட்டுறவினை ஏற்படுத்தலாம். ஆகவே அரசுகளுக்கு இருக்கக்கூடிய இவ்வாறான அழுத்தங்கள் அரசுகளின் சர்வதேச நடத்தைக்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன. இதிலிருந்து எந்த ஒரு அரசும் விலகிச் செல்ல முடியாது. வெளிநாட்டுக் கொள்கை இத்தங்கியிருத்தலில் சமநிலையை உருவாக்கக்கூடிய வகையில் பேரம் பேசுதலினை ஏற்றுக்கொள்கின்றது.

09.    தேசிய நலன்;

வெளிநாட்டுக் கொள்கையுடாக இறைமையுடைய அரசுகள் தமது தேசிய நலன்களை பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும். காலம், இடம், சூழல் என்பவற்றைப் பொருத்து தேசிய அரசுகளுக்கிடையில் தேசிய நலனை பேணுவதில் சிறிய வேறுபாடுகள் காணப்படலாம். ஆனாலும் சுயபாதுகாப்புஇ பாதுகாப்பு, பிரஜைகளுடைய நலன்கள், தேசிய நலன்கள்,பொருளாதார முன்னேற்றம் போன்றன  வெளிநாட்டுக்கொள்கையாக  கொள்ளப்பட வேண்டம். 
10.    வரலாறும் தேசியவிழுமியங்களும்

வெளிநாட்டுக்கொள்கை ஒரு அரசினுடைய வரலாற்றினால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. ஒரு அரசினுடைய கலாசாரம் நாகரிகம் என்பன வரலாற்றுக்காலத்திலிருந்து ஏனைய அரசுகளுடன் வைத்திருக்கும் உறவின் மீது செல்வாக்கு செலுத்துகின்றது. வரலாறு ஒரு அரசின் வெற்றி, தோல்வி சமுதாயத்திற்கு எது செய்யப்பட்டது என்பதைப் பற்றிக் கூறும் ஆவணமாகும். இவ்வெற்றிகள் தோல்விகள் என்பன ஒரு அசினுடைய வெளிநாட்டுக்கொள்கையை வழிப்படுத்துகின்றது. சமூக அங்கத்தவர்கள் குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு கட்டுண்டு வளர்ந்தார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது. அவர்களுடைய நாகரிகம் மனநிலை பண்பு எவ்வாறு ஒன்றாக இருந்தது என்பதை வரலாறு கூறுகின்றது. இவ்வுறவு மக்களினுடைய விருப்பத்தினூடாக பிரதிபலிக்கப்பட்டதுடன் வெளிநாட்டுக்கொள்கையூடாக பூர்த்தி செய்யப்பட்டது.
          

11.    தேசியத் திறன்

தேசியத்திறன் என்பது ஒரு நாடு கொன்டிருக்கின்ற இராணுவதயார் நிலை தொழில்நுட்ப முன்னேற்றம் அதிநவீன தொடர்பாடல் வசதிகள் கொருளாதார அபிவிருத்தி தெளிவான அரசியல் நிறுவனங்கள் போன்றவற்றை குறித்து நிற்கின்றது. தேசியத்திறன் வெளிநாட்டுக்கொள்கையின் மையமாகும். தேசிய ;திறன் வெளிநாட்டுக்கொள்ளையினை உருவாக்கி அதனை நடைமுறையும்படுத்துகின்றது. உண்மையில் வெளிநாட்டுக்கொள்கை வஅதிகரிக்குமாக  இருந்தால் அவ்வரசு வெளிநாட்டுக்கொள்கையிலும் பாரிய மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். ஒரு அரசின் தேசிய திறன் அதன் தேசிய திறன் அதன் தேசிய உறவில் அதற்குரிய அந்தஸ்தினை தேடி n;காடுக்கின்றது. தேசியத்திறன் குறைவடைந்தால் அதனுடைய அந்தஸ்து குறைவடைந்து ஏனைய அரசுகளுடன் பேரம் பேச வேண்டியிருக்கும் உதாரணமாக 2ம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் அதிகார அந்தஸ்து ஐரோப்பாவிலும் உலகத்திலும் வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவினுடைய தேசியத்திறனுக்கேற்றவகையில் வெளியுறவுக்கொள்கையும மாற்றமடைந்திருந்தது.

12.    வெளிநாட்டுக்காரணங்கள்

n;வளிட்டுகொள்கையை தீர்மானிக்கின்ற வெளிவாரியான விடயங்களில் நெகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியற்றதுமான 2 வகைகள் காணப்படுகின்றன நெகிழ்ச்சியான விடயங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் உலக அபிப்ராயங்கள் என்பன உள்ளடக்கப்படுகின்றன சர்வதேச நிறுவனங்கள் சர்வதேச சட்டம் ஒப்பந்தங்கள் சர்வதேசஇச் சர்வதேச சூழல் உலக பொது அபிப்ராயத்தில் செல்வாக்கும் செலுத்துகின்றன அரசுகள் வெளிநாட்டுக்கொள்கையை உருவாக்குகின்ற பொழுது மாறும் தன்மை கொண்ட சர்வதேச அரசியலை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். நெகிழ்ச்சியற்ற விடயங்களை பொறுத்தவரையில் அரசுகள் வெளிநாட்டுக்கொள்கைக்குள் உடன்பாடபானவை உடன்பாடற்றவை என்ற விடயங்களை கொண்டிருக்கின்றன. அரசுகள் சில நிரந்தரமான அயலவர்களை சில நிரந்தரமான எதிரிகளை வைத்திருக்கின்றன.

13.    சர்வதேச நிறுவனங்கள்

n;வளிநாட்டுகொள்கையை உருவாக்குவதில் சர்வதேச நிறுவனங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                      முக்கிய வகிபாகத்தினை வகிக்க தொடங்கிவிட்டன. அரசுகள் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் செய்துள்ளன. இவைகளை அவ் அரசுகள் மீறி ஆபத்திற்;கு உள்ளாக முடியாது.
14.    உலக பொது அபிப்பிராயம்
உலக பொது அபிப்பிராயம் என்பது மாறும் தன்மை கொண்டதாகும்;. மின்னல் போல வெளியுறவுக்கொள்கையில் அடிக்கடி செல்வாக்கு செலுத்தும். ஆயினும் உள்நாட்டு மட்டத்திலான பொது அபிப்பிராயத்தின் ஆதரவு அருந்தால்தூன் உலக பொது அபிப்பிராயம் n;வளிட்டுகொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய வகிபாகத்தினை எடுக்க முடியும்  அபிப்பிராயம் என்பது பல்வேறு மக்களின் பல்வேறு கருத்துக்களை கொண்டதாக அமைந்திருக்கும். உலகத்தில் காணப்படுகின்ற சித்தாந்த பிரிவுகள் உலகத்தின் ஒரு பகுதியில் சரியானதாகவும் மறு பகுதியில் தவறதனதாகவும் காணப்படுகின்றது. பிரசாரம் வெகுசனதொடர்புசாதனங்களின் சுதந்திரமின்மை பொருளாதார பின்னடைவு உண்மையான பொது அபிப்பிராயத்தினை தடை செய்கின்றன.

15.    உடன் பாடுகளும் ஒப்பந்தங்களும்

இன்று எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை , ஒப்பந்தம், செய்து தனது நலன்களை நிறைவேற்றுகின்றது.  குறிப்பாக அன்று நாடுகள் தமது பொருளாதார தேவைகளுக்கும் நிதியுதவி, கடன,; நன்கொடை, அனர்த்தங்கின் போது எனைய நாடுகளின் உதவி மற்றும் உள்நாட்டு அபிவிருத்தியை மேற்கொள்ள பண்னாட்டு உடன்படிக்கைகளை பல நாடுகளுகளுக்கு இடையில் மேற்கொள்ள வெளிநாட்டு கொள்கை என்பது செல்வாக்கு செழுத்துகின்றது.

16.    படைத்துறை

தேசிய பாதுகாப்பு எனும் போது இது இக்குறிப்பிட்ட நாட்டின் பாதுகாப்பு மாத்திரமன்றி மக்கள் பாதுகாப்பும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதுடன், உலகில் காணப்படும் சிறிய நாடாயினும் சரி பெரிய நாடாயினும் சரி இத்தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை கொள்வதனை காணலாம். அத்துடன் ஒரு நாடு தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏனைய நாடுகளிடமிருந்து அச்சம் ஏற்படுமாயின் அந்நாடுகளுடன் யூத்தத்தில் ஈடுபடவூம் உடன்படிக்கை செய்யவூம் முயற்சிக்கும். இச் செயன்முறையை வரலாற்று ரீதியான அனுபவத்தில் காண முடிகின்றது. தமது உள்நாட்டு பாதுகாப்பை தரை, வான், கடல் மார்க்கங்கள் மூலமாக பாதுகாக்கும் நிலைமையானது, உள்நாட்டு அரசியல் நிலவரங்களினால் மாத்திரமன்றி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, அனாவசிய அந்நிய நாட்டு தலையீடுகளை தடுத்து, தேசிய பாதுகாப்பினை இஸ்தீரப்படுத்துவதற்கான ஏற்பாடாகவூம் காணப்படும். இது இவ்வாறு இருக்க, உலக ஒழுங்கானது மாற்றமடைகின்ற போது வெளிநாட்டுக் கொள்கையூம் மாற்றமடைகின்றது என்றே கூறலாம்.
குறிப்பாக தேசிய பாதுகாப்புக் கொள்கையானது சர்வதேச முறைமைகளினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது,பிராந்திய உபாய சூழலினையூம் கருத்திற் கொண்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டுக் கொள்கை இவ் உலக ஒழுங்கினை கருத்திற்கொண்டு முக்கியத்துவம் பெற்று விளங்கியதுடன், பல நாடுகள் இராஜதந்திர ரீதியிலான உறவூகளை அடைந்து கொள்வதற்கு பல முயற்சிகளை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியூம் கொண்டன. இவ்வாறான நிலைக்குக் காரணம், காலத்தின் தேவை கருதிய செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கையினை வகுப்பதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றமையே ஆகும். இதனை குளிர் யூத்த காலப்பகுதியில் அதிகளவில் காண முடிந்ததுடன், தற்போது நாடுகளுக்குள் காணப்படும் மோதல்களும் இவ் வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே தொகுத்து நோக்கும் போது வெளிநாட்டு கொள்கை என்பது தொடர்பாக ஒருமித்த கருத்து என்பது அனைவரிடமும் காணப்படவில்லை. ஆயினும் பொதுவாக ஒரு நாடு மற்றைய நாடுடன் கொள்ளும் எவ்வகையான உறவுகளை பேணவேண்டும் என்பதனை கொள்கைகளாக உருவாக்கி அமுல்படுத்தும் ஒரு செயற்பாடு எனலாம். இக்கருத்தை இன்னும் இலகுவாக நோக்கினால் ஒரு அரசு மற்றைய அரசுகளை நோக்கிய நடத்தை என்று கூறமுடியும். மறைந்த இந்திய தலைவர் ஜவகரலால் நேரு குறிப்பிடுவதன் படி “எத்தகைய கொள்கைளை நாம் தீர்மானித்தல் என்பது ஒரு நாட்டின் எந்த வெளி நாட்டு கொள்கை அந்நாட்டுக்கு உச்ச வாய்ப்பினை தர மூடியது என்று கண்டு பிடிப்பதிலேயே தங்கியுள்ளது ஒரு நாடு ஏகாதிப்பத்தியம் சார்பானதோ, சோசலிசம் சார்பானதோ, கம்யூனிசம் சார்பானதோ அதன் வெளிநாட்டு அமைச்சர் அந்நாட்டின் அடிப்படையிலேயே சிந்திக்கிறார்” என்று அவர் ஒரு உரையில் வெளிநாட்டு கொள்கை என்பதற்கு கருத்தை கூறியுள்ளார். அக்கொள்கைகளை தீர்மானிப்பதில் மேற்கண்ட பல காரணிகள் செல்வாக்கு செழுத்துவதை காணமுடியும்