முரண்பாடு CONFLICT

முரண்பாடு என்பதன் பொருள் விளக்கமும் அறிமுகமும்

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE




முரண்பாட்டை குறிக்கும் ஆங்கில பதமான  CONFLICT என்பது  CONFLIGEVE எனும் இலத்தீன் சொல் மூலத்திலிருந்து உருவானது அதன் அர்த்தம் ஒன்றாக போராடு என்பதாகும். பேராசிரியர்  Kristoper Michell என்பவர் தனது STRUTURE OF INTERTNATIONAL  CONFLICT என்ற நூலில் “ஓது;துவராத இலக்ககளை கொண்டிருக்கின்ற இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புக்களுக்கிடையே கானப்படும் உறவே முரண்பாடு என்றார் இக்கருத்தின் படி அது போட்டி பிரச்சினையுடன்’ தொடர்புடையதாக உள்ளது
QUENCY WRIGHT  என்பவரின் கருத்தின் படி முரண்பாடு என்பது “ஒன்றுக்கொன்று எதிராக வழி நடத்தப்படுகின்ற சமூக உள்ளடக்கங்களின் எதிர்ப்புதன்மையாகும்” என்றார்
N.ACOSER என்பவரின் கருத்தின்படி “தமக்கு எதிரானவர்களை மட்டுமடுத்துவதை அல்லது அழிப்பதை நோக்கமாக கொண்ட விழுமியங்கள் மற்றும் குறைவாக உள்ள அந்தஸ்து, அதிகாரம் , வளங்கனளுக்கான போராட்டமே முரண்பாடாகும்” என்றார்.

PETER WALLENSTEEN என்வர் முரன்பாடு தொடர்பாக கூறும் போது “இரு பிரிவினர் அல்லது இரு தரப்பினர் ஒரே சூழ்நிலையில் பற்றாகுறையாக உள்ள வளங்களை கைப்பற்றுவதில் முயற்சிக்கும்  போது ஏற்படும் நிலையே முரண்பாடாகும்” என்று கூறினார். 

S.FISHER என்பவரின் கருத்தின் படி தமக்கிடையே ஒத்து போகாத இலக்குகளை கொண்டிருக்கின்ற  அல்லது கொண்டிருப்பதாக கருதுகின்ற இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பகுதியினருக்கிடையேயான தொடர்பே முரண்பாடாகும் என்றார்.

எனவே நாம் பொதுவாக முரண்பாடு என்றால் என்ன என்பது தொடர்பாக நோக்கும் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் அல்லது மக்கள் குழுக்களுக்கிடையேயான எதிர்ப்பு அல்லது உடன்பாடின்மை அல்லது பொருந்தாமை ஆகியவற்றின் ஒரு நிலையாகும் இது சில வேளைகளில் பௌதீக ரீதியான வண்முறைகளால் அடையாளப்படுத்தபடும் அரசுகளுக்கிடையிலான இரானுவ முரண்பாடானது யுத்தத்தை உருவாக்கும். அரசியற் பதங்களில் முரண்பாடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் குழுக்களுக்கிடையிலான நிலவும் பகைமையின் ஒரு நடைமுறையின் நிலைமையைக் குறிக்கின்றது.



முரண்பாடு தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

முரண்பாடு தொடர்பான கோட்பாடுகளை முன்வைத்தவர்களுள் மக்ஸ் வெபர் முக்கியமானவர் ஆவார் இவர் ழேர்மனியில் மத்தியதர குடும்பமொன்றில் 1864 ஏப்பிரல் 21ம் திகதி பிறந்தார் இவர் கல்வினின் சமயப் பிரிவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். மிகச் சிறந்த சட்ட பொருளியல் கல்வியை பெற்றுக் கொண்டதுடன் தம் குடும்ப தொடர்புகளுக்கூடாக முன்னிலை அரசியல் வாதிகள் அறிஞர்களுடனான உறவின் வழி அசாதாரன ஆழ்ந்த ஒரு வாசகராகவும் திகழ்ந்தார். தனது பதினான்காவது வயதிலேயே கோமர், லிவி போன்றோர் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார் பல்கலைகழகம் போகும் முன்னரே ளுpழைணயஇ முயவெ போன்றோரை பற்றிய அறிவையம நிறைய பெற்றிருக்கிறார்.
எனவே இவ்வாறு பிரபல்யமடைந்து கானப்பட்ட மக்ஸ் வெபர் பல்வேறு துறைகபளிலும் தனது ஆர்வத்தினை செலுத்தியிருந்தார் அவ்வாறான துறைகளில் ஒன்றே இவ் முரன்பாடு பற்றிய கருத்தாகும் இவருடைய முரண்பாடு பற்றிய கருத்தினை நாம் பின்வருமாறு விமர்சன ரீதியாக பரிசீலிக்கலாம்.

  சமூகத்த தொடர்பு நிலை என்பது பல தன்மை வாய்ந்த நடிகர்களின் நடத்தை ஒரு பொருள் பொதிந்த முறையில் இடம் பெறுவதற்காக பயன்னடுத்தபடுகிறது ஒவ்வொருவரினதும் நடவடிக்கiயும் மற்றவர்களது நடவடிக்கையை கவனத்திற் கொண்டே இடம்பெறுகிறது. இத்தகைய தொடர்பு முறை ஒன்று முரண்பாடு என விபரிக்கபடுகின்றது அதனுள் மற்றையதொரு கட்சி அல்லது கட்சிக்குள் எதிர்pப்புகளுக்கு மத்தியில் வேண்டுமென்றே ஒரு நபர் தனது விருப்பத்தின் பிரகாரம் முடிவு எடுப்பவையே முரண்பாடு எனலாம் சமாதான முரண்பாடு எனப்படுவது உண்மையான உடல் ரீதியான வண்முறையை பயன்படுத்தாத உதாரணங்களுக்கும் பயன்படுத்தலாம் சந்தர்பங்களையும் வாய்ப்புக்களையும் முன் வாய்ப்புக்களையும் கட்டுபடுத்த சமாதான முறையில் முயற்சிக்கும் போட்டியே ஒரு சமாதான முரண்பாடு எனலாம்.

ஒரு போட்டி வழிமுறை ஒழுங்குகளுக்குட்பட்ட Nhபட்டியாகும் அதன் வழியும் முடிவும்  ஒரு  ஒழுங்கில் அமையும் எனில் வாய்ப்புகளுக்கும் தப்பியிருத்pதலுக்குமாக தனிப்பட்ட மனிதர்களுக்கும் அல்லது சமூக அந்தஸ்துக்குமாக இடம்பெறும் போராட்டம் உள்ளார்ந்தவையாகும் இவை முரண்பாடு என்ற வகையில் பரஸ்பரம் இடம்பெறாவிட்டால் அதனை தெரிவு என அழைக்கலாம்.

சுமூகத்ததெரிவின் ஒவ்வொரு வழிமுறையும் ஒரு முரண்பாடாகவிருக்க முடியாது மாறாக சமூகத் தெரிவு முதற் படியில் சில வகைகளான நடத்தைகளாக அதனால் அதற்கு ஒப்பான தனிப்பட்ட இயல்புகள் சில வகையான சமூக உறவுகளை பெற வாய்ப்பாக இருக்கின்றகன அன்புக்குரியவர,; கணவர,; பாராளுமன்ற அங்கத்தவர,; உத்தியோகத்தர், ஒப்பந்தகாரர், முகாமைத்டதுவ பணிப்பாளர,; வெற்றநிகரமான வர்த்தகர,; ஆனால் இந்த எண்ணக்கரு இத்தகைய வேறுபடும் சமூக வெற்றிக்கான வாய்ப்புகளுக்குமான  தெரிவு முரண்பாட்டினூடாக கொண்டுவரப்பட்டாத என்பதை குறிப்பிடவில்லை. எங்கு உண்மையான முரண்பாடு போட்டி வழிமுறை உள்ளதோ அங்கு மட்டுமே முரன்பாடு என்பது பயன்படுத்தபடும்.

எமது அனுபவத்தின்படி தெரிவு செய்தல் என்ற மனப்பான்மையில் மட்டுமே முரண்பாடு அனுபவரீதியில் தவிர்க்க முடியாததாக உள்ளது அத்தோடு உடன் ரீதியான தெரிவு என்ற பொருளிலேயே தத்துவ ரீதியில் தவிர்க்க முடியாததாகின்றது தெரிதல் தவிர்க்க முடியாது ஏனெனில் அதனை முழுமையாக இல்லாது செய்ய எந்த வழியையும் உருவாக்க முடியாது எனத்த தெரிகின்றது.

தனிப்பட்டவர்களது ஒவ்வொரு மாதிரியோடும் ஈடுபடும் போதுதான் முரண்பாட்டின் வழிகளை தீர்க்கலாம் என்பது சாத்வீக இயலுமானதாகலாம் ஆனால் அது வெளிவாரியான போட்;டி வழிமுறையில் மற்றைய மாதிரியான முரண்பாடுகள் முன்வரும் என்றும் இது பொருள்படும் ஆனால் கற்பனாவாதா எடுகோளின் படியும் எல்லா போட்டிகளும் முழுமையாக நீக்கப்பட்டாலும் சூழ்நிலை அல்லது சுற்றாடல் ஒரு உள்ளார்ந்த தெரிவுக்கு உடல் ரீதியிலோ சமூக ரீதியிலோ அதன் சூழிநிலைக்கு சிறப்பானதாக அமையலாம் அவற்றின் பெறுமதிகள் பிரதானமாக பரம்பரையினாலோ அல்லது சூழ்நிலையினாலோ தீர்மானிக்கபட்டதாயினும் அனுபவ மட்டத்தில் முரண்பாபட்டினை இல்லாமாக்குதல் ஒரு கட்டத்துக்கு மேற்செல்ல முடியாது அது சில சமூக தெரிவுகளுக்கு இடமளிக்கின்றது தத்துவ ரீதியில் ஒரு உடல் ரீதியான தெரிவு கட்டாயமாக தொடர்ந்திருக்கும் தனிப்பட்ட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து உயிர் வாழ்வதற்காக தனிப்பட்டவர்களிடையேயான போராட்டம் ஆகும். ஏன மக்ஸ் வெபர் விபரிக்கின்றார்.

இயல்பாகவும் கட்டாயமாகவும் முரண்பாட்டிற்கும் உறவு நிலைகளுக்குமிடையில் வேறுபாடுகளை காட்ட வேண்டும். வேளிக்கொனரப்படாத பொருளிளேயே இந்தக் எண்ணக்கருக்களை இரண்டாவதிற்கு உபயோகிக்கலாம் உறவு நிலைகள் மனித நடத்தையிள் முறைகளாக அமைவதோடு கற்பனா அர்த்தங்களில் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் ஆகவே அவர்களுக்கிடையிலான தெரிவு செய்யும் வழிமுறை அல்லது முரண்பாடு ஒரு மாதிரி நடத்தை காலக்கிரமத்தில் இன்னொன்றினால் அதன் இடத்தை பெறுகிறது இந்த நடத்தைகள் அதே ஆட்களாளோ மற்றவர்களாளோ இடம்பெற்றாலும் இது பல வழிகளில் இடம்பெறலாம் முதலாவது படியில் மனித நடத்தை சில வகையான சமூக தொடர்பு நிலையை மாற்றுவதை இலக்காக கொண்டவை அவை அபிவிருத்தியடைவதை தடுக்கவோ வழிப்படுத்தபடலாம்.

ஆகவே ஒரு அரசு போரினால் அல்லது புரட்சியினால் சூழ்ச்சிகளினால் அழிக்கபடலாம் அவை ஈவு இரக்கமற்ற மிருகத்தனமான அடக்குமுறைகளால் உடைக்கபடலாம். 

சமூக அடுக்கமைவு தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

சமூக முரன்பாட்டிலே சமூக அடுக்கமைவு தொடர்பாக கூறிய அறிஞர்களில் மக்ஸ் வெபர் பிரதான இடத்தை பெறுகிறார் கார்ல் மாக்சினால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாத மத்திய தர வகுப்பில் வெபர் அக்கரை கொண்டிருந்தார் அடுக்கமைவின் பொருளியல் அடிப்படைகளின் முக்கியத்துவத்தை வெபர் ஏற்றுக் கொண்டார் வகுப்பு பற்றிய தமது வரையறையில் பொது பண்புகளை கொண்ட மண்pதரை ஒரு வகுப்பினுள் அடக்குகிறார் அதாவது வாழ்க்கை வாய்ப்புகளில் குறித்த தற்காலிக கூறுகளை பொதுவாக கொண்டவர்கள் இந்தக் கூறுகள் பெரும்பாலும் பொருட்களை உடைமையாக கொள்ளுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் ஆகியன பொருளியல் ஆர்வங்கள் தொடர்பானவை பண்டங்கள் அல்லது ஊழியர் சந்தையினால் வகுப்பு நிலைமைகளை பிரதிபலிப்பவர்களை உள்ளடக்கியவை என கூறுகின்றார் வகுப்பு நிலைமை தொடர்பான காரணங்களுக்கும் நிலைமைகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படையாக உணரப்படும் பொழுதே கூட்டு வகுப்பு செயல் எழும் என்கிறார்.
வகுப்பு நிலையானது பொருட்களின் நிரம்பல் புற வாழ்க்கை நிலைமைகள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றின் வாய்ப்புக்களின் வழியே வெளிப்படுத்தபடுவது இந்த வாய்ப்பானது குறித்த ஒரு பொருளாதார ஒழுங்கில் பொருட்களை அல்லது திறன்களை பெறக் கூடிய சக்தியின் பாற்பட்டது என கூறுகின்றார்.
சோத்துடைமை சொத்துடைமையில் குறைபாட்டு நிலை அனைத்து வகுப்பு பிரிவுகளினதும் அடிப்படையாகும் இந்த வகைகளுக்கு உள்ளேயும் மீள் வருமானம் தரக் கூடிய பயன் தரக் கூடிய சொத்துக்கள் சேவைகள் என மேலும் வேறுபாடுகளை கானலாம் வதிவிடக் கட்டடங்கள உற்பத்தி நிறுவமைப்புக்கள் களஞ்சியங்கள் விவசாய நிலங்கள் சுரங்கங்கள்;  கால் நடை அடிமைகள் என உடமைகள் வேறுபடலாம். சோத்துடைமை அற்ற மக்களை அவர்கள் வழங்கும் சேவைகளின் அடிப்படையிலும் தொடர்ந்தோ அன்றி தொடர்பற்றோ அவர் சேவையை பெறுபவர்களிடம் அவர் கொண்டுள்ள உறவின் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம்.
மேலதிக அடுக்கமைவு வகையாக அந்தஸ்து குழு ஒன்றை வெபர் கூறினார் சந்தை உற்பத்தி முறைகளினால் அன்றி ஒருவரின் நுகர்வு கோலங்களின் படியாக இந்த வகுப்பை வெபர் வரையறுக்கின்றார் முழுக்க முழுக்க உற்பத்தி பரப்பினுள்ளேயே தமது சிந்தனையை செலுத்தியமையால் மேற்கண்ட வகைப்பாட்டை மாக்ஸ் மறந்துவிட்டார் என வெபர் கூறுகின்றார்
தனியே பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி ஏனைய காரனங்களையும் உள்ளடக்கிய வெபரின் பார்வை அந்தஸ்து பரினாமங்களின் அடிப்படையில்  வகுப்புக்களை வகைப்படுத்த இடமளித்தது வேறுபடும் அந்தஸ்து குழுக்களுக்கிடையிலான இடைவினைகளிடை கட்டுப்பாடுகள் சமூகத் தூரம் என்பவற்றை இனம் காட்டிய வெபர் ஒரு குழு அங்கத்தினருக்கு ஏனைய குழுவினர் கௌரவத்தை தருகின்ற வரை அவர் அதே அந்தஸ்து குழுவில் அங்கத்துவம் பெற முடியும் அவ மதிப்பை தருகின்ற பொழுது அதனின்றும் விளக்கப்படுவார் இதன்படி குழுக்களுக்கிடையிலான சமூகத் தூரம் பேனப்படும்.
ஒரு குழுவில் ஒருவர் பெறும் இடத்திற்கும் அந்தஸ்து ஒழுங்கில் பெறும் நிலைக்கும் உயர்ந்த இனைவு கானப்படுவதை ஆய்வு அனுபவமாக கூறலாம் எடுத்து காட்டாக முதலாழித்துவ சமூகங்களில் பொருளாதார ரீதியில் செல்வாக்கு பெறும் வகுப்பு காலப் போக்கில் உயர் அந்தஸ்தையும் பெறக்கானலாம் அதே வேளையில் சொத்துடைமை அற்ற மக்களும் கூட அதே அந்தஸ்து குழுவில் இடம் பெறக் கூடும் தமது முன்னைய அந்தஸ்தின் வழி கனிசமானளவு செல்வாக்கை பலவீனமான பொருளாதார நிலையிலும் இவர்கள் கொண்டிருக்க காணலாம்.
வேபரின் பார்வையில் ஒவ்வொரு சமூகமும் வேறுபடும் வாழ்க்கை பாங்குகள் உலகம் பற்றிய பார்வைகளின் வழி குழுக்களாகவும் அடுக்குகளாகவும் பிரிக்கபட்டுள்ளன இவை குறிப்பான வகுப்புகள் எனப்படுகின்றன அந்தஸ்து வகுப்புக் குழுக்களிடை முரண்பாடு:கள் இருந்த போதிலும் இக் குழுக்களின் அங்கத்தவர் ஓரளவிற்கு மேலாதிக்கத்தை பெற்றுக் கொள்கின்ற நிலைமையினையும் கானலாம்.
  • அடுக்கமைவு மற்றொரு பிரதான பரினாம அரசியல் அதிகாரத்தையும் வெபர் குறிப்பிடுகின்றார் வகுப்பு அந்தஸது என்பவற்றிற்கு சமாந்தரமாகவே அரசியல் அதிகாரத்தை வெபர் குறிப்பிடுகின்றார் ஒட்டு மொத்தமாக நோக்குகையில் சமூக அடுக்கமைவின் பின்வரும் மூன்று பரினாமங்களும் முழுமையான பகுப்பாய்விற்கு அவசியம் என்கிறார் வெபர்.   வகுப்பு 
  • பொருளாதார ரீதியானது)
  • அந்தஸ்து (சமூக கௌரவம் சார்ந்தது)
  • அதிகாரம் (அரசியல் ரீதியானது)

முரண்பாட்டில் அதிகாரம் தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

ஆதிகாரம் தொடர்பான வெபரின் பகுப்பாய்வில் கால் மாக்சின் கருத்துடன் உடன்பட்ட போதும் அதனை மேலும் மீளமைப்பு செய்தமையினை கானலாம் மாக்சை பொருத்தவரை அதிகாரம் என்பது எப்பொழுதும் பொருளாதார உறவுகளின் அடிப்படையானது உற்பத்தி சாதனங்களை கொண்டவரகளே நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள் நவீன சமூகங்களில் பொருளாதார அதிகாரங்களே மேலாதிக்கம் செலுத்தும் என்ற மாக்சின் கருத்துடன் வெபர் உடன்படுபவராக கானப்படுகிறார் எனினும் பொருளாதார அடிப்படைகளற்ற ஏனைய நிலைமைகளனாலும் அதிகாரம் வாய்க்க பெறலாம் என்பதையும் எடுத்து காட்டினர்.
             எடுத்து காட்டாக ஒரு பாரிய பணிக்குழுவாட்சி அமைப்பில் உயர் நிலை மேலதிகாரி வெறுமனே சம்பளத்திற்கு பனியாற்றுபவராக இருந்த போதும் நிறைந்த அதிகாரத்தை கொண்டவராக இருந்தார் ஒரு செயலில் பங்கு கொள்ளும் போது ஏனையோர் எதிர்த்தாலும் கூட ஒருவர் அல்லது ஒரு குழு தமது சொந்த சக்திகளினால் பெறக் கூடிய வாய்ப்பாக அதிகாரத்தை வெபர் கூறுகின்றார.; 
சமூக நிலைமைகளுக் கேற்ப அதிகார அடிப்படைகளும் வேறுபடுவன எனற் கருத்தையும் வெபர் கொண்டிருந்தார் மனிதர்கள் எப்பொழுதும் பொருளாதார ரீதியாக மட்டுமே தான் தம்மை உயர்ந்த உழைப்பவர்கள் அல்ல அதிகாரத்திற்கான முயற்சி என்பது சமூக மத்தியின் பாற்பட்டதாகும் தனியே பொருளாதார அதிகாரம் மட்டும் சமூக மதிப்பிற்கான வழியாகாது அவ்வாறே அதிகாரம் தான் சமூக மதிப்பிற்கான அடிப்படையுமாகாது சமூக மதிப்பானது பொருளாதார அரசியல் அதிகாரங்களுக்கான அடிப்படையாக அமையலாம் அதிகாரமும் மதிப்பும் சட்ட ஒழுங்கால் அங்கீகரிக்கபடலாம் இதனால் சட்ட ஒழுங்கானது அதிகாரத்தை அல்லது மதிப்பை கொண்டிருப்பதற்கான ஒரு மேலதிக காரணியாகும் ஒரு சமூகத்தில் குழுக்களிடை சமூக மதிப்பு எவ்வாறு பிரித்து தரப்பட்டுள்ளது என்பதனையே சமூக ஒழுங்கு என்பது குறிக்கின்றது இந்நிலையில் வகுப்பு அந்தஸ்து குழுக்கள் கட்சிகள் என்பவற்றிடை ஒரு சமூகத்தின் அதிகாரங்கள் வகுத்து தரப்பட்டுள்ளன எனலாம். 
 
ஆதிகார உறவுகள் தொடர்பான தமது விளக்கத்தில் வல்லமையை வறையறுப்பதுடன் அதனை அதிகாரத்தினின்றும் வேறுபடுத்தியும் காட்டுகின்றார் ஒரு சமூக உருவமைப்புக்குள் ஒருவர் தம் என்னப்படி செய்வதற்காண நிகழ்தகவே வல்லமை எனும் வெபர் அந்தக் கட்டளைகளை ஏற்றுக் கொள்ள கூடிய நிகழ்தகவு என்ற கருத்தாக்கத்தையும் கூடவே முன்வைக்கின்றார் சட்ட பூர்வ தன்மை தான் தனியன்கள் தாமாகவே தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கட்டளையை ஏற்குமாறு செய்வது கூடவே வல்லமையை அதிகாரமாக மாற்றுவது சட்டபூர்வ தன்மைகளின் அடிப்படையில் மூண்று தூயவகை அதிகாரங்களை வேறுபடுத்தி காட்டுகின்றார் வெபர்.
    தர்க்க ரீதியான சட்பூர்வ அதிகாரம்
    மரபு வழி அதிகாரம்
    தனித்துவ ஆளுமை வழி அதிகாரம் (ஊhயசளைஅயவiஉ)
இந்த அதிகார வகைகள் அதிகாரத்தினதும் மேலை புலத்தின் ஆற்றலில் வரலாற்றினையும் பிரதிபலிப்பன முதலிரண்டு சமூகவியல் முக்கியத்துவம் கொண்டவை இவ் அதிகார வகைகள் அனைத்தினையும் பொறுத்த வரையிலும் வல்லமை தொடர்பான தனியன்களின் நம்பிக்கையும் முக்கிய இடம் பெறுகிறது.



நடுநிலை தொடர்பான வெபரின் கருத்துக்கள்

சமூக அறிவியல்களின் மெய்யியல் தொடர்பான வெபரின் மற்றொரு கருத்தாக நடுநிலை தன்மையை குறிப்பிடலாம் இம் முறையியலின் வழி ஆய்வாளரின் வருப்பார்வ சிந்தனைக்குள் கட்டுபடாத நிலையில் உண்மைகளைக் காண்பதே அவரது நோக்கமாக இருந்தது ஒரு பிரச்சினையை தேர்கையில் ஆய்வாரள் நடு நிலையாக இருக்க வேண்டும் விஞ்ஞானிகள் எப்பொழுதும் உண்மையை வழுவாது ஆய்வின் உயர் கோட்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும்;.
      இதனை முரண்பாடு தொடர்பான கருத்தில் ஒப்பிட்டு நோக்கும் போது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்பினரிடையே முரண்பாடு தோன்றினால் அதனை நடு நலை கொண்டு தீர்க்க வேண்டும் என்பதை வெபர் எடுத்துரைக்கிறார்.
உண்மையை திரிபு படுத்தும் தம் உணர்வுகளை மறுப்பதுடன் புறத்திருந்து வரக் கூடிய அழுத்தங்களை தடுப்பவராகவும் ஆய்வாரள் அமைய வேண்டும் என்பார் இங்கு எந்தவொரு விடயமும் விஞ்ஞான நடுநிலை விமுமியத்துடன் விளங்க வேண்டும் என கூறுகின்றார் இங்கு அரசு, நண்பர் என்ற செல்வாக்குகளுக்கப்பால் தம் புறவயதன்மையில் வழுவாது விளங்க வேண்டும் தாம் பெற்ற தரவுகளில் தாம் பெற்ற விழுமியங்களை நுழைக்க கூடாது தம் விருப்பார்வங்களுக்கு பனியாது ஆய்வு தரும் முடிவுகளை அவ்வாறே வெளியிட ணே;டும்.
இதன் வழி விழுமிய நடுநிலை என்பது விஞ்ஞானிகளுக்கான நியம கட்டளை ஆகும் விஞ்ஞானி என்ற தம் பாத்திரத்தை விஞ்ஞானத்தின்; வழி நின்றே நாம் நிறைவு செய்ய வேண்டும் இது தான் சரியான விழுமியம் என்று தீர்ப்பு சொல்லவல்ல பாத்திரமாக விஞ்ஞானிகள் தம்மை கருதுவதும் சரி அல்ல உண்மைகள் மதிப்பீடுகளின் மீது செல்வாக்கு செலுத்துதல் கூடாது உண்மைகளும் விழுமியங்களும் தர்க்க ரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திரமானவை தொடர்பான உண்மைகளின் துனையுடன் விழுமியங்களை மதிப்பிட முடிந்தாலும் அவை ஒன்றில் ஒன்று தங்கியவை அல்ல என்பது வெபரின் உறுதியான கருத்தாகும்.







பணிக்குழுவாட்சியும் முரன்பாடும்

முக்ஸ் வெபரின் கருத்துக்களிலே பணிக்குழுவாட்சி தொடர்பான கருத்தானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது ஒரு நாட்டிலே நிர்வாக துறையிலே பணிக்குழுவாட்சி என்பது பல்வேறு முரண்பாடுகளுக்குட்பட்டு காணப்படுகின்றது என்றும் எனவே ஒரு பணிக்குழுவாட்சியானது சிறந்த முறையில் இடம்பெற பின்வரும் விடயங்கள் சிறப்பாக காணப்பட வேண்டும்.
ஒரு அலுவலகத் தொழிலில் ஈடுபடும் ஒருவர் அக் குறித்த தொழில் தொழில் தொடர்பான பூரன அறிவையும் பயிற்சியினையும் பெற்றிருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு நாட்டில் நிர்வாகமானது சிறந்த முறையில் நடைபெறும் அத்துடன் தகுதியற்றவர்களுக்கு தொழில் வழங்கும் போது அங்கு தகுதியானவர்களுக்கும் அரசுக்கும் இடையே முரன்பாடு எழக் கூடிய நிலை கானப்படலாம் எனவே ஒரு துறை சார்பான வேலைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறும் போது பக்கசார்பு அல்லது நடு நிலை தவரும் போது அங்கு முரண்பாடு எழுகின்றது என கூறுகின்றார்.

மேலும் பணியகவமைப்பாளர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் இவர்கள் தாம் விரும்பியவர்களுக்கு மாத்திரம் சேவையினை வழங்கும் போது அங்கு சேவையினை பெறாதவர்கள் முரன்படுகின்ற நிலை தோன்றும் எனவே பணியகவமைப்பு முறையிலே அகவயத் தன்மை காணப்படும் போது அங்கு கட்டாயம் முரண்பாடு தோன்றும் என கூறுகின்றார்.
புணிக்குழுவாட்சியின் நலன்களை அழுத்திய அதே வேளை அதன் எதிர் தொழிற்பாடுகளையும் வெபர் குறிப்பிடுகிறார் முடிவுகளை திட்டமிட்டு கணிக்க கூடிய நிலையே இவ்வமைப்பின் பிரதான அநுகூலமாகும் எனினும் தனிப்பட்டவர்களுக்குரிய விடயங்களை அணுகுவதில் நவீன தர்க்க ரீதியான பணிக்குழு அமைப்பின் சட்டங்கள் போதுமானவையாக இல்லாமையை வெபர் கூறுகிறார் நடைமுறையில் கானப்படும் தளர்வினை சரி செய்யக் கூடிய ஆளுமை மிக்க தலைவர்களின் தோற்றத்தில் வெபர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஒருவர் பாரிய அளவிலான அமைப்பில் இனைந்து தன் தனிப்பட்ட விருப்பார்வங்களை தியாகம் செய்து தன் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுதலின் வழிதான் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செயலில் ஈடுபட முடியும் என்றார்.
எனவே இவரது கருத்தில் இருந்து நோக்கும் போது ஒரு நாட்டிலே நிர்வாகமானது சிறந்த முறையில் அமையபெற முக்கிய உறுதுனையாக அமைவதுடன் அதிலே முரன்பாடு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாததாக அமைகின்றது என கூறுகின்றார்.    

No comments:

Post a Comment