அரசும் இறைமையும் (Sovereignty)

 அரசும் இறைமையும்




அரசறிவியலில் இறைமை என்ற எண்ணக்கருவானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். அரசொன்றின் மூலக்கூறுகளுள் அடிப்படையானதாக இறைமை என்ற அம்சம் காணப்படுகின்றது. இறைமையே அரசை வேறுப்பட்ட தாபனங்களிலிருந்து பிரித்துகாட்டுகின்றது.


இறைமை என்னும் பதம் பிரான்சிய பதமாகிய Soveinete என்பதிலிருந்து மத்திய காலத்து இலத்தீன் பதமாகிய '“Superemitas அவையள' அல்லது “Superemapotestas” என்பதிலிருந்தும் தோற்றம் பெற்றதாகும். இதன் படி இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme power) அல்லது மேலான அதிகாரம் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. 


இறைமை என்பது அரசொன்றின் மிகவும் அடிப்படையான மூலக்கூறாகும். இச்சொல்லினை முதன்முதலில் அரசறிவியலில் பயன்படுத்தியவர் ஜீன் போடின் (Jean Bodin) ஆவார். அத்துடன் அரசு கொண்டிருக்க வேண்டிய அதிகாரங்களை வெளிப்படுத்தும் பதமுமாகும். மிகவும் நேரடியான கருத்தில் ஒரு அரசு கொண்டிருக்க வேண்டிய மிக உயர்ந்த அதிகாரம் (Supreme power) ) அல்லது மேலான அதிகாரம் என இறைமைக்கு விளக்கம் கூறலாம். இங்கு இறைமை என்பது அரசினுடைய மேலான அதிகாரம் என்பதும், அரசின் அடிப்படையான மூலக்கூறு என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 

வரைவிலக்கணங்கள் 


வில்லோபி (Willoughby)  என்பவர் 'ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

வூட்றோ வில்சன்  (Woodrow Wilson)  என்பவர் 'ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

பேகஸ் (Burgess)  என்பவர் 'ஓர் அரசு தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை' என வரையறை செய்கின்றார். 

ஜீன் போடின் (Jean Bodin)  இவர் இறைமையை 'சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத பிரசைகள் மற்றும் குடிகள் மீது செலுத்தப்படும் அரசுக்குரிய உயர்வான அதிகாரம'; என்றே வரைவிலக்கணப்படுத்தினார்.

டியூகிட்:- 'இறைமை என்பது அரசின் ஆணையிடுதல் ஆற்றல், இது ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கம் இடும் நிபந்தனையில்லாத ஆணை' என்று கூறுகின்றார்  

இவ்வரைவிலக்கணங்கள் யாவும் இறைமை என்ற பதம் ஒரு அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம், அமுலாக்கம், நீதிபரிபாலனம் ஆகிய அதிகாரங்கள் அவற்றின் மேலாண்மை போன்றவற்றையே கருத்தில் கொள்கின்றன. 


இறைமையின் வேறுபட்ட தன்மைகள் 


இறைமை என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் உள் இறைமை (Internal Sovereignty) வெளி இறைமை(External Sovereignty) பெயரளவு இறைமை (Titular Sovereignty)  சட்ட இறைமை (Legal Sovereignty)அரசியல் இறைமை (Political Sovereignty) மக்கள் இறைமை பன்மை இறைமை (Pluralistic Sovereignty) என்பன முதன்மையானவைகளாகும். 


  உள் இறைமை Internal Sovereignty

உள் இறைமை என்பது ஒரு அரசு தனது மக்கள் மீதும், பிரதேசத்தின் மீதும் செலுத்தும் அதிஉயர் அதிகாரமாகும். அரசு ஒன்றின் எல்லைக்குள் உள்ள தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்கள் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மீது அரசு முழு நிறைவான (Absolute) அதிகாரத்தினைச் செலுத்துவதை குறித்து நிற்கின்றது. அரசு முழுநிறைவானதாக இருப்பதுடன் அதன் எல்லைக்குள் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் கட்டளைகளை பெற்றுக் கொள்ளாததுமாக இருக்க வேண்டும். அரசை எதிர்க்கக் கூடிய மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் அரசின் எல்லைக்குள் தோன்றாததுடன் அவ்வாறு தோன்றின் அவற்றை அழிப்பதற்கான உயர் அதிகாரம் அரசிடம் இருப்பதை உள்இறைமை குறித்து நிற்கின்றது. 


  வெளி இறைமை 

வெளி இறைமை என்பது ஒரு அரசு உலகத்திலுள்ள வேறு எந்த ஒரு அரசின் தலையீடோ அல்லது கட்டாயப்படுத்தலோ இன்றி சுதந்திரமாகச் செயற்படுதலைக் குறித்து நிற்கின்றது. ஒரு அரசு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி சர்வதேச ஒப்பந்தங்கள் கூட்டுக்கள் அல்லது சர்வதேச சட்டங்களுக்கு உட்படுகின்ற போது அதன் இறைமை பறிக்கப்படக் கூடாது. இவைகள் அரசு ஒன்றிற்குரிய சுய வரையறைகள் என விபரிக்கப்படுகின்றன. மக்களைக் கட்டாயப்படுத்துகின்ற அதிகாரம் அரசிற்கு வெளியே யாரிடமும் இருக்கக் கூடாது. மக்கள் தமது மகிழ்ச்சிக்காக தாம் வாழும் அரசிற்கு மட்டுமே கீழ்ப்படிவார்கள். 

அரசு தனது சொந்த விருப்பத்திற்கு இணங்க செயற்படும். ஏனைய வெளி அதிகாரத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டியதில்லை. ஒரு அரசின் இறைமையினை பிற அதிகார சக்திகள் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், பிரிக்கவும் முடியாது. இறைமையை பிரிக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சித்தால் இறைமையானது அழிக்கப்பட்டுவிடும். இறைமை அரசின் ஒரு பகுதி என்பதுடன் ஒவ்வொரு அரசும் இறைமையினை இழந்து விடாமல் இருக்க வேண்டும். கெட்டல் (புநவவநடட) என்பவர் இது தொடர்பாகக் கூறும் போது 'இறைமை முழு மையானதாக இல்லாவிட்டால் அரசு நீடித்து வாழ முடியாது. இறைமை பிரிக்கப்பட்டால் ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் தோற்றம்பெறும். அரசிற்கு சட்ட ரீதியான அதிகாரம் இங்கு இல்லாமல் போய்விடும்.இதனால் அரசின் இறைமை பின்னடைவினை சந்திக்கும். இறைமையின் வியாபகத்திற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இருக்கக் கூடாது' என்கின்றார். 


மக்கள் இறைமை 

மக்கள் இறைமை என்பது மக்களுக்குரிய அடிப்படையானதும் பிரிக்க முடியாததுமான இறைமையாகும். மக்கள் இறைமையானது 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் அரசனின் கொடுங்கோண்மை அதிகாரத்திற்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பொழுது எழுச்சியடைந்ததாகும். ரூசோ (சுழரளளநயர) மக்கள் இறைமையின் பரப்புரையாளராக கருதப்படுபவராகும். இவருடைய கோசம் பிரான்சியப் புரட்சிக்கு காரணமாகியிருந்ததுடன் அமெரிக்கப் புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. பிறைஸ் (டீசலஉந) என்பவர் இது தொடர்பாக கூறும் போது மக்கள் இறைமை ஜனநாயகத்தின் காவல் மதமும் அடிப்படை மதமுமாகும் என்கின்றார். 

மக்கள் இறைமையானது தேர்தல் தொகுதி அல்லது வாக்காளர் இறைமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தேர்தல் தொகுதி இறைமையானது அரசியலமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்படாதவரை இது சட்ட ரீதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாக்காளர்கள் இறைமை அதிகாரத்தை தாங்களாக அனுபவிப்பதில்லை. பதிலாக அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள். பிரதிநிதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கட்சி சட்டசபை பொறுப்பினை ஏற்றுக் கொள்வதுடன் சட்ட சபை ஊடாக இறைமை அதிகாரத்தினைப் பிரயோகிக்கும் மக்கள் இறைமை என்பது பெரும்பான்மை வாக்காளாகளின் அதிகாரத்தினால் வெளிப்படுத்தப்படுவதாக இருக்கும். இதற்காக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகின்றது. 

ஆனால் மக்கள் தமது இறைமையினைப் பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தும் வாக்குரிமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


இறைமையின் சிறப்பு பண்புகள்

1. வரம்பில்லாதது:-  இறைமையானது அரசினுள்ளும் வெளியிலும் தனக்கு மேலான எந்தவொரு அதிகாரத்தையும் அங்கிகரிப்பதில்லை. அதிகாரமும் அதனை கட்டுப்படுத்த முடியாது. எந்த அரசும் உள்நாட்டு விவகாரங்களில் பிற அரசுகள் தலையிடுவதை ஒப்புகொள்வதில்லை. பன்னாட்டு அமைப்புகளும் உடன்படிக்கைகளும் அரசை கட்டாயபப்படுத்த முடியாது. இறைமையின் இந்த பண்பு அரசின் அதிகாரத்தை பொருள் படைப்பதாகவும் சட்டபூர்வமானதாக ஆக்குகின்றது.

2. அனைவருக்கும் பொருந்த கூடியது:- ஓர் அரசின் அதன் எல்லையினுள்ளும் வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்ததக்கதாகும். அரசை விட உயர்வான அல்லது அதற்கு நிகரான அதிகாரம் யாருக்கும் கிடையாது. அரசு தனது அதிகாரத்தினின்றும் யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை. ஆயினும் பண்பாட்டு நாகரிகத்தை ஒட்டி அயல் நாட்டு தூதர்கள், பிரதிநிதிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு தலைச்சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது. அவை தத்தமது நாடுகளில் சட்டங்களை பின்பற்ற அனுமதிக்கின்றன. இவை ஒரு மரியாதையின் பொருட்டேயாயினும் எச்சந்தர்ப்பத்திலும் அரசு இவ்சலுகைகளை இரத்து செய்யலாம்.


3. நிiயானது:- இறைமையை உடைய நபரோ குழுவோ மாறலாம். ஆனால் இறைமை மாறாது. அதாவது ஒரு நாட்டின் மன்னர் அல்லது அரசாங்க தலைவர் மாறும் போது அல்லது இறக்கும் போதோ இறைமையையும் மறைத்து விடுவதில்லை. மாறாக அடுத்த ஆட்சி பீடம் ஏறுபவரிடம் அது உறைந்து விடுகின்றது. எனவே அது காலத்திற்கு காலம் அதிகாரத்தை பிரயோகிப்பவர் மாறலாம் ஆனால் இறைமை என்னும் அதிகாரம் மாறாது எப்போதும் நிலையானதாக இருக்கும்.


4. பிரிக்க முடியாததது:- இறைமை என்பது பகுக்க முடியாத அதிகாரமாகும்;. அதனை பிரிப்பதென்பது அதனை அழிப்பதற்கு சமமாகும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.  சில அரசியல் சிந்தனையாளர்கள் அரசினுள் இருக்கும் சில சங்கங்கள், அமைப்புகளிற்கு இடையே பகிர்ந்து அளிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். மேலும்; ஹமில்டன், மெடிசன் போன்றோர் சமஸ்டி அமைப்பில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இறைமை பிரிக்கப்படுகின்றது என குறிப்பிடுகின்றனர்.


5. மாற்றமுடியாதது:- இறைமை பிறருக்கு மாற்றப்பட்டால் அரசு தனது மேலாண்மையை இழந்து விடுகின்றது. அவ்வாறு மாற்றப்பட்டால் அரசே மறைந்து விடும் இறைமை உடையோர் இறக்கும் போதோ பதவி விலகும் போதோ இறைமையை மாற்றி கொடுப்பதில்லை அப்பொழுது நிகழ்வது இறைமையின் மாற்று ஒப்படைப்பே ஆகும்.


6. தனியுரிமைமிக்கது:- தனியுரிமை என்பது இறைமையின் அரசில் ஒரே இடத்தில் மட்டும் இருப்பதை குறிக்கும் தலையாய அதிகாரத்தை பங்கிட இயலாது. அனைவரும் அந்த அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அது மட்டுமே தலையாய அதிகாரமாகும்.


இறைமை பற்றிய கோட்பாடுகள் 

இறைமை பற்றிய கோட்பாடுகளைக் காலத்திற்குக் காலம் பல அரசியல் விஞ்ஞானிகள் முன் வைத்துள்ளார்கள். இவர்களின் இறைமை பற்றிய கோட்பாடுகளுக்குள் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையின் தாக்கம் பிரதிபலித்திருந்தன. இவ்வகையில் ஜீன் போடின் (துநயn டீழயனin)இ ஹோப்ஸ் (ர்ழடிடிநள), லொக் (டுழஉமந), ரூசோ (சுழரளளநயர), ஒஸ்ரின் (யுரளவin), குருடியஸ் (புசழவரைள), ஹெகல் (ர்நபநட), ஜோன் மில்டன் (துழாn ஆடைவழn), லஸ்கி (டுயளமi), மக்ஐவர் (ஆயஉஐஎநச), மெயின் (ஆயiநெ) என இவர்களைப் பட்டியல்படுத்த முடியும். 



ஜீன் போடினின் இறைமை பற்றிய கோட்பாடு 

ஜீன் போடின் 1530 - 1596 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த அரசியலறிஞராகும். இறைமை பற்றிய கோட்பாட்டாளர்களுள் காலத்தால் முந்தியவராக இவர் கருதப்படுகின்றார். 1576ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசு (சுநிரடிடiஉ) என்ற நூலில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை இவர் முன்வைக்கின்றார். போடினின் கருத்துப்படி இறைமை என்பது மக்கள் மீதும், குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்றார். 

இறைமையின் உறைவிடமாக தனிமனிதனையே ஜீன் போடின் குறிப்பிடுகின்றார். ஜீன் போடின் பலரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ இறைமை உறைவதை நிராகரிக்கின்றார். அரசு என்பது மக்கள் குடும்பங்களினதும், மக்கள் சொத்துக்களினதும் இணைப்பாகும். இவ் அரசு இறைமை அதிகாரத்தினடிப்படையில் ஆட்சி புரியப்பட வேண்டும். ஒரு அரசில் சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமுலாக்குவதும் அரசின் இறைமையே ஆகும். இதனால் சட்டங்களின் உற்பத்தி மையம் இறைமையேயாகும். இதனால் சட்டத்தினை விட இறைமை உயர்வானதாகும். ஆயினும் சமுதாயக் கடமை, சமூகம் பொறுப்பு சமுதாய நீதி, சர்வதேசச் சட்டம் என்பவற்றினை விட இறைமை உயர்ந்ததல்ல என்ற கருத்தினை ஜீன் போடின் முன்வைக்கின்றார். ஜீன் போடின் இறைமையின் பிரயோகத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார். 


1. சில அடிப்படையான சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இறைமையாளனுக்கு அதிகாரமில்லை.உ-ம் பிரான்சின் சாலிக் சட்டம் (ளுயடiஉ டயற ழக குசயnஉந)

2. தனியார் சொத்துடைமை என்பது சட்டத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டதாகும். இதனால் பலாத்காரமான முறையில் மக்களின் சம்மதமின்றி மன்னன் வரி விதிக்கவோ அல்லது அவற்றை அழிக்கவோ முடியாது.

இறைமை என்பது மக்களின் மீதும் குடிகளின் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்வித சட்டங்களுக்கும் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என்று ஜீன் போடின் முன் வைக்கும் இறைமை பற்றிய கருத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுப்பாடுகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது ஜீன் போடின் இற்குள் காணப்பட்ட முரண்பாட்டினை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள். 

ஜீன் போடின் இறைமை பற்றிய கோட்பாட்டினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இவர் வாழ்ந்த காலப்பகுதியில் பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனை விரும்பாத ஜீன் போடின் அதிகாரம் மிக்க மன்னன் ஒருவனாலேயே இக்குழப்பம் மிகுந்த சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பியிருந்தார். உறுதி ஐக்கியம் அமைதி என்பன ஒரு சமுதாயத்தில் பலம் வாய்ந்த மன்னனொருவனின் மூலமே அடையப்படுவது சாத்தியமானதாகும். இதனால் இறைமையின் உறைவிடமாகத் தனிமனிதனான மன்னன் விளங்க வேண்டும் என்பது ஜீன் போடின் வாதமாகும். உண்மையில் பிரான்சில் இடம் பெற்றிருந்த சிவில் யுத்தத்தின் வெளிப்பாடே ஜீன் போடின் இறைமை பற்றிய சிந்தனையாகும். இந்நிலையில் சிவில் யுத்தங்களுக்குத் தீர்வினையும் சமுதாய மீட்சியையும் வேண்டி நின்ற ஜீன் போடின் தனிமனித இறைமை பற்றி சிந்தித்திருந்தார். இதனாலேயே ஜீன் போடின் முழுநிறை முடியாட்சியை வலியுறுத்தியிருந்தார். 

ஜீன் போடின் இறைமை என்பது எவ்வித சட்டங்களுக்குக் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என வாதிட்டாலும் இறைமையானது தெய்வீகச் சட்டம், இயற்கைச் சட்டம், சர்வதேசச் சட்டம் போன்றவற்றிற்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றார். இது இறைமை தொடர்பாக அவரிடம் காணப்பட்ட அக முரண்பாட்டினை வெளிப்படுத்தியது. ஜீன் போடின் காலத்தில் தெய்வீகச் சட்டம் இயற்கைச் சட்டம் சர்வதேசச் சட்டம் போன்ற யாவும் பெருமளவிற்கு ஒன்றிலிருந்து வேறுபடுத்தப்படாமலிருந்துடன் சாராம்சத்தில் தெய்வீக நீதி என்ற மதச் சிந்தனையுடன் பிணைக்கப்பட்டதாகவேயிருந்தது. இக்காலத்தில் முதன்மை பெற்றிருந்த கிறிஸ்தவ மதம் சார்ந்த சிந்தனைகளாகவே தெய்வீக நீதியும் விளங்கியிருந்தமையால் பாப்பரசரின் கட்டளைகளுக்கு இறைமை கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்தது. இச்சூழ்நிலையின் தாக்கமே இறைமை தொடர்பான இவரின் அகமுரண்பாட்டிற்கு காரணமானதால் தனிமனித இறைமை அவனது பூரணத்துவம் தொடர்பாக ஜீன் போடின் சிந்திக்கின்றார். 

இதன்படி இறைமைமிகு அரசு தமது வெளிநாட்டு கொள்கைகளை அழுத்தங்கள் இன்றி வைத்துக்கொள்வதற்கான திறனாகும். 

இறைமை அதிகாரம் நிலையான, அனைத்தாண்மைவாய்ந்த, பிரிக்கப்பட முடியாத, கைமாற்ற முடியாத, கையளிக்க முடியாத ஒன்றாக கருதப்படுகின்றது.


இறைமைப் பற்றிய எண்ணக்கரு சமஸ்டிவாதம் மற்றும் உலகமயமாக்கலோடு பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தேசிய அரசொன்றினுள் வாழும் பல்வேறு இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்காக இறைமை அதிகாரத்தினை பகிர்ந்தளிக்கும் போக்கொன்று விருத்தியடைந்து வருகின்றது. 


மறுபுறம், இறைமை அதிகாரமானது உலகமயமாக்கலினால் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகின் பொதுக்கொள்கைகள் தேசிய மட்ட இறைமை அலகுகள் மூலம் தீர்மானிக்கப்படுவதிலும் பார்க்க பெரும்பாலும் உயர் தேசிய அமைப்புகளினால் (ளுரிநச – யேவழையெட ழுசபயnணையவழைளெ) தீர்மானிக்கப்படுகின்றது. 


தேசிய அரசுகளுக்கு தேசிய வரிக் கொள்கை மற்றும் குற்றங்கள் யாது என தனித்து தீர்மானிக்கக்கூடிய நிலை இருப்பதினால் இது உள்ளிறைமை நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்கின்றது. எனினும் தற்போதைய மூலதன பாய்ச்சலுடன் (ஊயிவையட குடழற) ஏற்பட்ட சந்தையினை மையப்படுத்தும் உலக வர்த்தக அமைப்புகள் போன்ற நிறுவனங்கள் சர்வதேச மனித உரிமைகள், சட்டங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் குற்றங்கள் என்றால் என்ன என்பதை தீர்மானிப்பதாலும் இறைமை சவாலுக்குட்படுத்தப்பபட்டுள்ளது.


இதனால் தற்கால தேசிய அரசுகள் என்பது உலக உயர் தேசிய நிறுவனங்களில் எடுக்கப்படும் கொள்கைகளை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முகவர்களாக மாறியுள்ளதாக வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பின்புலத்தினுள் பிரபல்யமான அரசுகளின் இறைமை விருத்தியடைந்துள்ளதோடு நலிவான அரசுகளின் இறைமை அடித்துச் சென்றுள்ளமை தெளிவாகின்றது


அரசுகள் காலத்திற்கு காலம் எதிர்நோக்கும் பிரச்சினை நடைமுறைரீதியான மட்டுப்படுத்தல்களை ஏற்படுத்திகொள்வதாகும்.


புதிய அரசுகளில் சட்டரீதியான இறைமைக்கு பதிலாக அவ்வபோது எழுச்சியடையும் பலவந்த சக்திகள் கட்டுப்படுத்துவதை காணலாம்.


ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுதந்திரம் அடைந்திருந்தாலும் 'நவகாலணித்துவம்' என்ற முறைமையின் கீழ் திட்டமிட்ட பொருளாதார சுரண்டல்கள் இறைமை மீதான கட்டுப்பாட்டை கூறலாம்.


சோசலிச தத்துவங்கள் சமத்துவ சிந்தனையை வலியுறுத்தியதுடன் அரசுகளுக்கிடையிலான மேலாண்மை, மேலதிகாரம், இறைமை என்பவற்றுடன் தொடர்புடைய வேறுபாடுகள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.


எனினும் இச்சமத்துவம் கைத்தொழில், பொருளாதாரம், இராணுவ அதிகாரம், என்பவற்றில் வளர்ந்து வரும் ஒன்று குவிப்புகள் அரசுகள் மட்டத்தில் சமத்துவ உணர்வினை தடைசெய்கின்றது.


அதிகார மேண்மையை நாடும் அரசுகள் இறைமையை நிலைநாட்டிக்கொள்ள குளிர்யுத்தம், நட்சத்திரயுத்தங்களில் விருப்பம் காட்டுவதால் அவை இயல்பாக ஏனைய அரசுகளின் இறைமையை கட்டுப்படுத்த முற்படுகின்றது.

 


No comments:

Post a Comment