குடியுரிமை (CITIZENSHIP)

அரசும் குடியுரிமையும்


D.JEGATHEESWARAN.

B.A(HONS), M.A(PERA), PGDE, M.ED(RED), DIP.H.R, SPE.IN.POLITICAL SCIENCE.

குடியுரிமை என்பது தற்காலத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு  சொற்பதமாக உள்ளது. அன்றாட அரசியல் சொல்லாடலின் ஒரு மைய எண்ணக்கருவாகவும் உள்ளது. குடியுரிமை என்பது நபரொருவருக்கும் அரசொன்றுக்குமிடையிலான தொடர்பை குறித்து நிற்கின்றது. இது சாதாரணமாக தேசியத்துவம் எனும் சொற்பதத்தின் ஒத்த சொல்லாகவும் உள்ளது. குடியுரிமையை கொண்டிருத்தல் என்பது பொதுவாக ஒரு நாட்டில் வாழ்வதற்கான மற்றும் தொழில் புரிவதற்கான உரிமை அரசியல் வாழ்வில் பங்கு பற்றுவதற்கான உரிமையுடன் தொடர்புபடுகின. எந்தவொரு அரசினதும் குடியுரிமையை கொண்டிராத ஒருவர் நாடற்றவர் ஆவார்.

குடியுரிமை (CITIZENSHIP) என்றால் என்ன என்பது தொடர்பில் பொதுவாக தெளிவான நிலைப்பாடு நிலவுவதில்லை. வேறு வார்த்ததையில் கூறின் குடியுரிமை பற்றிய கருத்தொருமைப்பாட்டினைக் காண்பதரிது.

குடியுரிமை என்பது சிவிஸ் (Civisஅல்லது சிவிடாஸ் (Civitasஎனும் இலத்தீன் சொல்லிருந்து தோற்றம் பெற்றது. இதன் அர்த்தம் புராதன ரோமக்குடியரசு நகர அரசின் ஒரு அங்கத்தவர் எனும் அர்த்தத்தை கொடுக்கின்றது. இருப்பினும் சிவிடாஸ் என்பது கிரேக்க நகர அரசின் ஒரு அங்கத்தவர் என்ற அர்த்தத்தை தரும் பொலிடிஸ் அல்லது குடிமகன் என்பவன் நகரில் வாழ்வதன் மூலம் விவசாய செயன்முறையில் பங்குபற்றிய ஆட்சி புரிகின்ற மற்றும் பதிலுக்கு ஆளப்படுகின்ற ஒருவனாவான்.

எனவே வரலாற்று ரீதியாக குடியுரிமை என்பது சமமானவர்களை கொண்ட நகர்புற சமூகப்பிரிவாக கருதப்படுகின்றது. பிரஜை என்பதன் சரளமான கருத்து 'நகரத்தில் வாழ்பவர்' என்பதாகும் இதன் தற்போதைய அர்த்தம் 'அரசின் உறுப்பினன்' என்பதாகும். அரிஸ்டோட்டிலின் கருத்திற்கு எற்ப பிரஜை என்பவர் 'அரசின் செயற்பாடுகளுக்கு நேரடியாக பங்குபற்றும் நபராவார்.' என்கின்றார். இவர் இக்கருத்தினை கிரேக்க நகர அரசுமுறையின் பின்னணியிலிருந்தே கூறினார் எனலாம்.

மேலும் குடியுரிமை என்பது இருவழி தொடர்பினை கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வகையில் உரிமைகள் மற்றும் கடமைகளினால் பரஸ்பரம் கட்டுப்படுத்தப்படும் வகையில் பிரஜைகளுக்கும் அரசுக்கும் இடையிலான ஓர் உறவுமுறையாக உள்ளது. ஒரு அரசுக்குள் இருக்கின்ற ஒரு மனிதன் எவ்வளவு உரிகைளை அனுபவிக்கின்றானோ அதே அளவு கடமைகளைiயும் மேற்கொள்ள வேண்டும். அதே போல அரசும் பிரஜைகள் மீதான கட்டுப்பாட்டினை கொண்டிருக்க வேண்டும். இதுவே தற்கால ஜனநாயகத்தின் அடிநாதமாக உள்ளது.

குடியுரிமை பற்றிய வரைவிலக்கணம்

முறையான அர்த்தத்தில் குடியுரிமை என்பது தனிமனிதன் அரசுக்கு விசுவாசத்தையும், அரசு தனிமனிதனுக்கு பாதுகாப்பையும் வழங்கும் கடப்பாடினை கொண்ட தனிமனிதனுக்கும் அரசுக்குமிடையிலான உறவு முறையாகவுள்ளது. 

அரிஸ்டோட்டில்:- 'குடிமகன் என்பவன் ஆளுதல் மற்றும் ஆளப்படுதல் ஆகிய இரண்டிலும் பங்கெடுத்து கொள்ளும் ஒருவனாவான்.

T.H.மார்ஷல்:- குடியுரிமை என்பது ஒரு சமூகத்தின் முழுமையான அங்கத்தவர்களாகவுள்ள அத்தகைய அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு அந்தஸ்தாகவுள்ளதுடன் அத்தகைய அந்தஸ்தை உடையவர்கள் அதனோடு இணைந்த உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் சமமானவர்களாகும்.

டேவிட் மில்லர்:- குடியுரிமை என்பது வெறுமனே உரிமைகளைக் கொண்டிருத்தல் என்பதல்ல கூடவே அது நம்பிக்கை மற்றும் அதன் பொதுநலனை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள சமூகத்தின் உறுப்பினரின் நடத்தையும் ஆகும்.

ஜெக் பார்பலற்:- குடியுரிமை என்பது அரசியல் பிணைப்பின் தன்மையில் தங்கியுள்ளது. அப்பினைப்பினைப் பொறுத்துதான் அது எவ்வளவு வேகமானது என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

(அரசியல் நிறுவனங்கள் அகராதி) பிளேக்வெல்:- குடியுரிமை என்பது 'முழுமையானதும் பொறுப்புமிக்கதுமான அரசின் உறுப்புரிமையை குறித்து நிற்கின்றது'

குடியுரிமையின் மையக்கரு அரசியல் சமூகத்தில் பங்கேற்பு செய்தலாகும். அதனடிப்படையில் குடியுரிமையின் வரலாற்று அபிவிருத்தியில் கிரேக்ககாலம், உரோம காலம், பிந்திய மத்தியகாலம், 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டு என்ற வகையில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. 

கிரேக்ககாலம்

கிரேக்ககாலத்தில் அரசில் உறுப்புரிமை பெறுவதே குடியுரிமை என்ற வகையில் நோக்கப்பட்டது.

அங்கு குடியுரிமை பெற்ற பிரஜைககளுக்கு அரசியல், நிர்வாகம், நீதி போன்றவற்றில் பதவி வகிக்கவும். பங்கு பற்றவும் தீர்மானம் எடுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இங்கு அடிமைகள், வெளிநாட்டவர்கள், பெண்கள், சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. 

சுருங்கக்கூறின் கிரேக்கத்தில் குடியுரிமை என்பது பொறுப்புகளை வழங்குகின்ற ஒன்றாகவும் வரையறுக்கப்பட்டாதாகவும் அமைந்தது.

எஜமானுக்கு அடிமையாக வாழ்ந்த காலத்தில் பொது வாழ்வில் பங்குகொள்வதற்கு இக்குடியுரிமை உதவியது. 

கிரேக்க மக்களிடத்தில் குடியுரிமை என்பது அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய ஆழமான கடமைகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றது.

உண்மையில் வெளிநாட்டவரான அரிஸ்டோட்டில் உள்ளிட்ட எதேன்சின் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் குடியுரிமையில் பங்கேற்க தகுதியற்றிருந்தனர்.


உரோமானிய குடியுரிமை

ரோமானிய காலத்தில்குடியுரிமை வழங்கும் முறையானது வளர்ச்சி கண்டது.

உரோம பேரரசில் குடியுரிமை சட்டரீதியான அந்தஸ்தாக நோக்கப்பட்டது. உரோம பிரஜைகளுக்கு 

 

இராணுவத்தில் சேவை புரிதல்

சட்ட மன்றத்தில் வாக்களித்தல்

பொது பதவிகளுக்கு தகுதிப்பெறல்

மேன்முறையீடு செய்ய முடிதல்

பரஸ்பர திருமணம்

ஏனைய உரோமானிய குடிகளுடன் வர்த்தகம் செய்தல் ஆகிய 06 சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.

உரோமத்தில் எண்ணிக்கையில் அதிகமானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டமையே விசேட அம்சமாகும்.

இக்காலத்தில் சட்டவாட்சி சமத்துவம் பற்றி பேசப்பட்டது.

இங்கு சிற்றரசு, நகர அரசு என்ற வகையில் இரட்டை குடியுரிமை காணப்பட்டது.

நவீன குடியுரிமை

மத்திய கால அரசுகளிலும், மறுமலர்ச்சி கால அரசுகளிலும் என்ற அம்சம் கிரேக்க, உரோம கால அளவிற்கு பெரிதளவிற்கு செல்வாக்கு பெறவில்லை.

நவீன காலத்தில் செல்வாக்கு பெற்றதாக காணப்பட்டது.

நவீன குடியுரிமையினை நிர்ணயிக்கும் காரணிகளானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை அடிப்படைகளாக கொண்டுள்ளது.

தங்கள் பெற்றோர்களின் ஒருவர் அல்லது இருவரும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் குடியுரிமையினை பெற்றவராயின்  பிறக்கும் குழந்தையும் இயல்பாகவே அந்நாட்டின் குடியுரிமையினை பெற்று கொள்ளும் இதனை ஆங்கிலத்தில் "Right of Blood" (இரத்த உரிமை) என்பர்.

ஒரு நாட்டில் பிறத்தல். இக்குடியுரிமை 'மண் உரிமை' என அழைக்கப்படும் லத்தீன் மொழியில்  “Jus Soil” என்றும் ஆங்கிலத்தில் '“Right to Soil” என்பர்

ஒரு குடிமகன் திருமணத்தின் மூலமான குடியுரிமையை பெற்றுக்கொள்கின்றான்.

நவீன அரசுகளில் குடியுரிமையினை பின்வரும் இரண்டு முறைகளில் காணலாம்

1. செயலூக்கமான குடியுரிமை:- உரிமைகளை அனுபவிப்பது மாத்திரமன்றி கடமைகளையும் நிறைவேற்றுவது ஆகும்.

2. செயலூக்கமற்ற குடியுரிமை:- கடமைகளை பற்றி சிந்திக்காது தம் உரிமைகளை மாத்திரம் அனுபவிக்கும் நிலை.

எனவே ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு செயலூக்கமான குடியுரிமையே தேவையானது. தற்போது அரசு மற்றும் பிரசைகளுக்கிடையிலான தொடர்பில் மிகமுக்கியமான பண்புகள் இரண்டு காணப்படுகின்றன.

  • பிரசைகள் அனுபவிக்கும் அரசியல் உரிமைகள்
  • பிரசைகளின் அரசியல் கடமைகள்

இதன்படி பிரசை என்பவர் அரச நலன்புரி மற்றும் உரிமைகளை அனுபவிப்பவரும் அதற்காக அரசுக்கு அடிபணிவை காட்டுபவருமாவார். அரசொன்றில் ஆள்புலத்தில் வாழ்கின்றவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்கக்கூடியதும், இல்லாதொழிக்கக்கூடியதுமான ஒரே நிறுவனம் அரசாகும். எனினும் உண்மையான நடைமுறையாக அமைவது அரசை நிருவகிப்பவர்களால் அதனை தீர்மானிக்க முடியும் என்பதாகும்.

T.H மார்ஷலின் குடியுரிமை

1940 களில் சமூகத்தில் காணப்பட்ட குடியுரிமை பற்றி குறிப்பிடும் போது மதிப்பு மற்றும் சமூகத்தில் காணப்படும் சமமின்மையால் கட்டியெழுப்பப்பட்டதாக  கூறுகிறார். அதனை கருத்தில் கொண்டு 04 வினாக்களை எழுப்புகிறார்.

1. போட்டி நிறைந்த சந்தையில்  சுதந்திரமில்லாமல் அடிப்படை சமத்துவம் கட்டியெழுப்பப்படுமா?

2. சமூகமயம் மற்றும் சந்தையினுடைய துணை விளைவுகளால் என்ன தாக்கம் ஏற்பட்டது.

3. ஒருவரின் கடமையிலிருந்து உரிமைக்கு மாற்றப்படும் போது எவ்வாறான தாக்கம் ஏற்படும்?

4. சமூக சமநிலையை ஏற்படுத்த நவீன வரையறை ஏதும் இருக்கிறதா?

மார்சல் Citizenship and Social Classes எனும் தன் நூலில் குடியுரிமை என்பது 'முழுமையாக உறுப்புரிமை பெற்றவர்களிடையே பகிரப்படுகின்ற அந்தஸ்தாகும் அவ்வந்தஸ்துக்கு உட்படுபவர்கள் கிடைக்கப்பெறும் உரிமைகள், கடமைகள் தொடர்பில் சமமானவர்கள்' என்கின்றார். மேற்கூறிய வினாக்களை அடிப்படையாக கொண்டு மார்ஷல் குடியுரிமை தொடர்பாக 03 விதமான முறையில் வரையறை செய்கிறார்.

சிவில் குடியுரிமை

சட்டவாட்சி கோட்பாட்டை வைத்து உருவாக்கப்பட்டது.

இது தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகளோடு சம்பந்தப்பட்ட விடயமாகும்

பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சொத்து வைத்திருத்தல், ஏனையவருடன் தொடர்பு கொள்ளல்,  நீதி பெறல் ஆகும்.


2.அரசியல் குடியுரிமை

வாக்களித்தல், அரசியல் விடயங்களில் பங்கு பற்றல், அரசியல் மூலகத்திலிருந்து அதிகாரம் பெறல், சமூக பொருளாதார பாதுகாப்பு,

பின்பு சர்வசன வாக்குரிமை பெறவும், பெண்களுக்கான அரசியல் உரிமை பெறவும் வாய்ப்பாக உள்ளது.

3.சமூகக்குடியுரிமை

மார்சல் சமூக குடியுரிமையிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

'எனது விசேட விருப்பமானது சமூகக்குடியுரிமையிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் குடியுரிமை சமூகத்தினுடைய சமநிலையில் செல்வாக்கு செலுத்துகின்றது.' என்றார்.

சமூகக்குடியுரிமை 3 காரணிகளை கொண்டுள்ளது.

1. பொருளாதார ஏற்றத்தாழ்வு

2. சமூகத்தில் காணப்படும் கலாசாரம், பழக்கவழக்கங்கள்

3. குடியுரிமை விஷ்தரிப்பால் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை

வு.ர்.ஆயசளாயடட போன்றோர் இந்த எண்ணக்கருவுக்கு 'சமூக பிரசாவுரிமை' என்பதை இணைத்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி 'தொழிலொன்றை செய்வதற்கு, வீடொன்றை உரிமையாக்கிக்கொள்வதற்கான உரிமை போன்றன சமூக பிரசை என்பதன் கருத்தாகும். மார்சலின் இச் 'சமூக பிரசாவுரிமை' என்ற கருத்து 'லிபரல் பிரசாவுரிமை' என்பதற்கான மாற்றீடாகும்.

குடியுரிமையின் கூறுகள்/ அம்சங்கள்

பிறையன் டியூனர் குறிப்பிடுவது போன்று நவீன குடியுரிமை எண்ணக்கரு மூன்று முக்கிய கூறுகள் அல்லது பரிமாணங்களை கொண்டுள்ளது. 

1. சிவில் குடியுரிமை- பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம்

2. அரசியல் குடியுரிமை- அரசியல் சார்ந்த குடியுரிமை

3. சமூகக்குடியுரிமை- சமூக பொருளாதார நல்வாழ்க்கைக்கு உரித்தானவை.


குடியுரிமையின் கூறுகள்/அம்சங்கள்

குடியுரிமை என்பது சட்ட ரீதியான அந்தஸ்து (இது சிவில்,அரசியல், சமூக உரிமைகளினால் ஆனது.

இங்கு குடிமகன் என்பவன் சட்டத்தின் பிரகாரம் சுதந்திமாக செயற்படும் சட்ட அந்தஸ்து கொண்ட நபராவார் என்பதுடன் சட்டத்தின் பாதுகாப்பினை கோரவும் முடியும்

குடியுரிமை என்பது அரசியல் மற்றும் சமூகசெயற்பாடு

இது மனிதனின் உரிமைகள் மற்றும் கடமைகளோடு தொடர்புபட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

இது அரசுக்கான பிரஜைகளின் விசுவாசமாக உள்ளது


அரசுக்கு பிரசை ஏன் அடிபணிவை காட்டவேண்டும் என்ற வினாவிற்கு அரசறிவியலாளர்கள் பல்வேறு பதில்களை முன்வைத்துள்ளனர். 

அரிஸ்டோட்டலின் கருத்துக்கு அமைவாக, அரசின் இறுதி நோக்கம் அனைத்து பிரசைகளுக்கும் நலன்புரி மற்றும் நல்வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். பிரசைக்கு ஒழுக்கரீதியாக உயர்தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் கூடிய உயர்வான வாழ்க்கை என்பன அரசினால் வழங்கப்படுகின்றது.

சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஏற்ப, பிரசைகள் அரசை உருவாக்கிக்கொண்டதோடு அரசுக்கு அடிபணிவை காட்டுவதற்கான உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்காக அரசு பிரசைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக அரவணைப்பினையும் வழங்குகின்றது.

லிபரல்வாத கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஏற்ப, பிரசைகளின் இயற்கை உரிமைகளை பாதுகாத்துக்கொடுப்பது அரசு என்பதால்  பிரசைகள் அரசுக்கு அடிபணிய வேண்டும். 

ரூசோவின் கருத்துக்கு ஏற்ப, அரசு பொது விருப்பத்தினை பிரதிபலிப்பதோடு, அதன்மூலம் பொது சித்தமே பிரதிநிதித்துவம் செய ;யப்படுகின்றது. இதனால் பிரசை அரசுக்கு அடிபணிய வேண்டும்.

மாக்சீயவாதிகளின் கருத்துப்படி சமூகத்தில் சொத்துடைய வர்கத்தின் நலன்களை பாதுகாத்து சொத்தில்லாத வர்க்கத்தை அடக்கி ஆளும் கருவியாக அரசு செயற்படுகின்றது.

அரசியல் சமூதாயத்தில் குடிமக்களுக்கிடையிலும், மனித குழுக்களுக்கிடையிலும் எழும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் உயர்தீர்வாளன் அரசாகும்.

அரசு சட்டத்தையும், ஒழுங்கையும் தமக்காக நிலைநாட்ட வேண்டும் என குடிமகன் எதிர்பார்கின்றனர்.

அரசு பிறப்பிக்கும் சட்டங்களுக்கு குடிமக்கள் கீழ்படிகின்றனர்.


No comments:

Post a Comment