மதசார்பற்றவாதம் (Secularism)

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE

• மதசார்பின்மைவாதம் என்பது சமயத்தையும் அரசியலையும் ஒன்று கலக்காமலிருப்பதாகும். 

• அரச துறைக்கு சமயத்தின் அழுத்தமோ, சமய துறைக்கு அரசின் அழுத்தங்களோ இல்லாமல் இவை இரண்டும் ஒன்றிற்கொன்று வேறுபட்ட மற்றும் சுயாதீனமான இரண்டு துறைகளாக கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் கருத்தியலாகும். 

• சமயம் அரசியலுக்குள் பிரவேசித்தல், அரசியலுக்காக சமயத்தை ஊடகமாக பயன்படுத்திக் கொள்ளும் பின்னணியில் சமய முரண்பாடுகள் பிரதான அரசியல் கருத்தியலாக காணப்படுகின்ற தற்காலத்தில் மதசார்பற்றவாதம் தொடர்பான இந்திய அரசியலமைப்பிலும் அரசியல் முறைமையிலும் அடிப்படையான கோட்பாடாவும் உள்ளது. தோற்றம் 

இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலொன்று இந்தியாவில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதோடு அரசு மதசார்பற்றதாக இருக்க வேண்டும் என 1975இல் அரசியலமைப்பிற்கு சேர்க்கப்பட்ட சீர்திருத்தத்திலும் குறிப்பிடப்படுகிறது. இது ஜனநாயகத்தைப் போன்றே முக்கியத்துவம் பெறுவதோடு, இந்திய அரசியலமைப்பிலும் அரசியல் முறைமையிலும் அடிப்படையான கோட்பாடாவும் உள்ளது.




தோற்றம்

• 18 - 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. 

• ஐரோப்பிய ஞானிகளின் (Enlightement) சிந்தனையின் ஒரு பகுதியாகும். 

• அதனால் மதசார்பின்மைவாதமானது பழைமை தாராண்மைவாதத்தோடும் சமவுடைமைவாத சிந்தனையுடனும் தொடர்புபட்டது. 

• ஐரோப்பிய மதசார்பின்மைவாதம், மத்திய காலத்தின் இறுதி காலத்தில் பிரதான அங்கமாக அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட நிறுவன இணைப்பின்மீது அரசாட்சியின் காவலனாக திருச்சபை இருந்தமைக்கு எதிராக வளர்ச்சியுற்றதாகும். 

• அரசாட்சி முறைமைக்கு எதிரான இயக்கங்கள் அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட இந்த 'தூய்மையற்ற கூட்டிற்கு' எதிரானதன் மூலம் அந்த போராட்டத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விளைவாகவாவே மதசார்பின்மைவாதமானது தோன்றியது. 

• மதசார்பின்மை வாதம் தோற்றம்பெறுவதற்கான மற்றுமொரு காரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் தோன்றிய தர்க்க அறிவுக்கு முதலிடம் கொடுத்தமையை சுட்டிக் காட்ட முடியும். இது திருச்சபை முன்னெடுத்துச்சென்ற அஞ்ஞான ரீதியான ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். 

• மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய மதசார்பின்மைவாதம், பழைமை தாராண்மை வாதத்தினதும், சமவுடைமை வாதத்தினதும் சிந்தனை ரீதியிலான மூலமாகும். 

• தாராண்மை வாதம், மதச்சார்பின்மையில் தனியாள் சுதந்திரம், சிந்தனை மற்றும் மனசாட்சியை பின்பற்றும் சுதந்திரம் ஆகிய மூலத்தத்துவங்களை அரசின் தன்மை, அரசின் கொள்கை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமயம் தலையிடக் கூடாது என்பதோடு சமய விடயங்களில் அரசு தலையிடக் கூடாது என கருதப்படுகிறது.

இதன்படி 'திருச்சபையும் அரசையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்துவது' (Separation of church and the state) ஐரோப்பிய தாராண்மைவாத மற்றும் சமவுடைமை வாத சம்பிரதாயத்தினுள் தோற்றம் பெற்ற பிரதான அம்சமாகும்.

தாராண்மைவாத மதச்சார்பின்மையின் அடிப்படைகள் 

1. அரசும் மற்றும் திருச்சபை ஆகியவற்றை நிறுவன ரீதியாக வேறாக்குதல் : இதனால், அரசின் தன்மை, அரசின் கொள்கை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமயம் தலையிடக் கூடாது என்பதோடு சமய விடயங்களில் அரசு தலையிடக் கூடாது என கருதப்படுகிறது. 

2. அரசு சமயத்துடன் அன்யோன்யமாக இருக்கக் கூடாது மற்றும் சமய கற்கைக்கும் பிரசாரத்திற்கும் அரசு தொடர்புபடாதிருத்தல். 

3. அரசு எந்தவொரு சமயத்திற்கும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாது. சமயம் மனிதர்களின் தனிப்பட்ட விடயமானவதோடு அதை அரசியலுக்கு கொண்டு வர வேண்டியதில்லை. 

4. மதத்தை புறக்கணிக்க வேண்டும் என தாராண்மை மதச்சார்பின்மைவாதம் குறிப்பிடவில்லை. சமய சுதந்திரம் பிரசைகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதோடு சமயத்தின் பெயரால் எந்தவொரு பிரசைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதிலேயே இது கவனம் கொள்கின்றது.

சமவுடைமைவாத மதச்சார்பின்மை 

• மாக்சியவாதிகள் சமயம் சமூகத்தை துன்பத்திற்கு உள்ளாக்கும் நிறுவனம் ஒன்றெனவும் உலகம் பற்றிய தவறான விளக்கம் ஒன்றை துன்பத்திற்குள்ளான மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் கருத்து தொகுதி ஒன்றெனவும் அறிமுகம் செய்தனர். மாக்சியவாதிகளின் கருத்துப்படி சமூதாய வரலாற்றில் அடித்தளமாக இருப்பது சமயமே. இச்சமய வடிவங்களே வரலாற்றுக்காலக்கட்டங்களின் புறத்தோற்றப்பாடுகளை நிர்ணயிப்பதாகவும் கருதினர். ஒரு நல்ல சமூதாயம் நல்லதாக இருப்பதற்கு நல்ல சமயமே காரணம். மோசமான சமூதாயத்தை இல்லாமல் செய்தல் அல்லது மாற்றுவதன் மூலம் சமூதாயத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்கின்றனர். 1917 ஆம் ஆண்டுசோசலிச அரசினை தாபித்த ரஸ்யா அரசுக்கு மதம் இல்லை என்ற கோட்பாட்டினை முன்வைத்தது.

• சமவுடைமைவாத மதச்சார்பின்மையின் அடிப்படைகள் 

1. சமவுடைமைவாத அரசு முழுமையாக சமயத்திலிருந்து வேறுபடுத்தப்பட்டிக்க வேண்டும். மதமானது அரசின் அனுமதியுடனேயே நிலவ முடியும். 

2. சமவுடைமைவாத முறையினுள் சமயம்சார், அரசியல்சார் நிறுவனங்களுக்கு இருப்பு கிடையாது. 

3. அரசின் தீவிர மேற்பார்வையின் கீழ் சமவுடைமைவாத அரசுக்கு அதனால் அச்சுறுத்தல் இல்லாத வரையில் மட்டுமே மாக்சியவாத முறைமையினுள் சமய நிறுவனங்களுக்கு இடம் கிடைக்கும். 

4. சமய அடையாளத்துடன் அரசியல் மற்றும் சிவில் சமூக இயக்கங்களை நிறுவுவதற்கு வாய்ப்பு இல்லை.


இந்திய மதசார்பின்மைவாதம் 







• தாராண்மைவாத சிந்தனையின் அடிப்படையில் இந்திய மதசார்பின்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

 • இந்திய மதசார்பின்மையின் பிரதான பண்புகள் : 

1. இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 

(அ). தாராண்மை மதசார்பின்மை வாதத்தின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை அனைத்து மதங்களையும் பக்கசார்பின்றி (Impartical) பார்ப்பதாகும். இந்தி மொழியில் அது 'அறநெறி சார்பின்மை' என குறிப்பிடப்படுகிறது. 

(ஆ). சகல மதங்களையும் சமமாக மதித்தல். அதாவது சகல மதங்களும் சமமானவை என ஏற்றுக் கொள்வதாகும். இது 'சர்வ அறநெறிகளினதும் சேர்க்கை' என்ற எண்ணக்கருவினால் வெளிப்படுத்தப்பட்டது.

 1. தனிநபர்களின் சமய அடையாளங்களை கவனத்தில் கொள்ளாது அரசானது சகல பிரசைகளையும் ஒரே சமமாக மதிப்பளித்தல் 

2. பிரசைகளின் உரிமைகளை பெற்றுக் கொள்ளும்போது எந்தவொரு பிரசைக்கும் தனது சமய அடையாளங்கள் தடையாக இருக்க மாட்டாது.

மதசார்பின்மையும் அரசியலும் 

• மதசார்பின்மையின் மூலம் மேற்கொள்ளப்படுவது அரசு மற்றும் சமயங்களுக்கிடையிலான தொடர்பு, அரச கொள்கை மற்றும் பிரசைகளின் உரிமைகளை மதச்சார்பின்றி நிர்ணயிப்பதாகும். 

•எனினும், அரசியலில் மதம் தொடர்புபடாதிருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. 

• மதசார்பின்மை காணப்படும் நாடுகளில் மதவாத அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் காணப்படுவதோடு இந்தியா அதற்கு சிறந்த உதாரணமாகும். 

• மதசார்பின்மையின் தற்கால முக்கியத்துவம் 

• மதசார்பின்மைவாதம் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற இரு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. 

1. சமய அடிப்படைவாதத்தை துணையாகக் கொண்ட மதம்சார் அரசுகள் (Theocratise State) தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படல்.  

2. பன்மைக்கலாசாரவாதத்தினை மையப்படுத்தி சமய அடையாளங்களை உடைய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.


No comments:

Post a Comment