பால்நிலை அரசியல் அதிகாரம் (Gender and Political Power)

      D. JEGATHEESWARAN
      B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
      SPECIAL IN POLITICAL SCIENCE




பால் நிலை அரசியல்என்பதை மேலெழுந்த வாரியாக அணுகுவதில் எவ்வித பயனையும்  அடைந்து கொள்ள முடியாது ஏனெனில் பால் நிலை என்றால் என்ன? அது அரசியலில் ஏற்படுத்தும் செல்வாக்கு எத்தகையது என்பன போன்றவற்றை அறிந்து கொள்ளாது கோட்பாட்டு ரீதியானவற்றை இலகுவில் அடைந்து கொள்ள முயற்சிப்பது தவறானதாகும். இதன் காரணமாக இப் பகுதி பால்நிலை பற்றி ஆராய்வதுடன் அரசியலில் அதன் செல்வாக்கு தொடர்பாகவும் ஆராய முற்படுகின்றனது.

Gender என்பது 'பால்நிலை' என்ற கருத்தைக் கொடுக்கும். இது Masculine என்ற ஆண்பாலையும் Feminine என்ற பெண்பாலையும் கொண்ட ஆண், பெண் என்ற இருபாலாரையும் உள்ளடக்கும். இயற்கையாகப் பிறந்த மனிதர்களிடத்தில் அவர்களின் உடலின் பௌதீகத் தன்மையினைப் பொறுத்து ஆண், பெண் என்ற  வேறுபாடுகள் உணரப்படுகின்றது. இது பால்   பால் நிலை என்று பொதுப்படையாகவே உணரப்படுகிறது.  இதனால் பால் நிலை எனும் கருத்து பால் எனும் கருத்தை விட மிகவும் சிக்கார்ந்த நிலையைக் கொண்டதாகும். பால்நிலையானது சமூக இடைவினையின் போது கண்டுகொள்ளப்படுகின்றது. இவ்விடைவினையில் ஆண், பெண் என்ற வேறுபாடுகளைச் சமூகமே பிரித்தறிகின்றது. இதற்கு இவ்விரு பால்நிலையினருக்கும் இடையிலுள்ள உயிரியல் மற்றும் உடலியல் வித்தியாசங்கள் காரணமாகின்றன. இதனால் பால் நிலையானது ஒரு சமூகப் பண்பாகவே கண்டு கொள்ளப்படுகின்றது இதனை மூன்று அணுகு முறைகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உயிரியல் ரீதியான ஆதாரத்திலும் நடத்தையிலும் வித்தியாசங்களை உணர்ந்து கொள்வதன் மூலம் நிச்சயமான நடத்தைக் கோலங்கள், உடற்கட்டமைப்புக்கள், ஆண்களுக்கென்றும்,பெண்களுக்கென்றும் உரிமைப்படுத்தப்படடதாகக் காணப்படுகின்றன. இது இயற்கையின் படைப்பாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பெண்களின் குணங்களாக காணப்பட வீரம், துணிவு, உடல் உறுதி, ஆண்மை தவரேல் போன்றன ஆண்களின் பண்புகளாகவும் காணப்படுகின்றன. இது இயற்கையே மனிதர்களை ஆண், பெண் என்று உயிரியல் ரீதியாக வேறுபடுத்துகின்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

சமுகமயமாக்கலின் மத்திய நோக்கக் கோட்பாட்டைக் கொண்டு பால்நிலையின் பங்கு பற்றி அறிந்து கொள்வதன் மூலம் :- பால்நிலையில் சமுகமயமாதல் என்பது முக்கிய தாக்கம் செலுத்துகின்றது.  இதனால் ஆண், பெண் என்ற நிலைகளைச் சமுகமயமாதல் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

சமூக அமைப்பு முறையில் பால், பால்நிலை போன்றவற்றை வேறுபடுத்திபார்ப்பதன் மூலம் :- பால்நிலை என்பது சமூக இடைவினையின் போது பெற்றுக்கொள்ளப்படுகின்றது. மனிதர்கள் தங்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, உறவுகளை வளர்த்துக் கொண்டு செயற்படுகையில் இயல்பாகவே ஆண், பெண் என்ற வேறுபாடு உணரப்படுகின்றது. இது சமுதாயக் குறியீட்டு உருவாக்கத்தால் பெறப்படுவதுடன், கருத்தியல் சார்ததாகவும் நம்பிக்கை சார்ததாகவும் காணப்படுகின்றது.

இதுபற்றி சமூக ஆய்வாளரான மேரி வோல்ஸ்டன் கிராப்ட் என்பவர் கூறும்போது 'பால்நிலை என்பது இயற்கையானதல்ல. இது சமூக விழுமியம், நம்பிக்கை, கூட்டுவாழ்க்கை மூலம் வளர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு பண்பாட்டுக் கட்டமைப்புக்களும் பால்நிலை பற்றி நிலைத்து நிற்கும் கருத்துக்களை வழங்குகின்றன' எனக்கூறியுள்ளார்.

சமூகத்தில் பால்நிலை தொடர்பாகக் காலத்திற்கு காலம் வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அமெரிக்க சமூகவியல் ஆய்வாளரான டெலிங்கர் கில்கலட்றி என்பவர் அமெரிக்கப் பண்பாட்டில் ஆண் தனது தன்மையில் வெற்றி, பகுத்தறிவு, உணர்வினைக் கட்டுப்படுத்தல் போன்ற பண்புகளைக் கொண்டிருக்க, பெண் தனது தன்மையில் அழகானவள், கவர்ச்சியானவள், பொது வாழ்வில் தனது வாழ்க்கையை தியாகம் செய்யக்கூடியவள் என்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றாள் என பால்நிலை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் இக்கருத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிம்மல் என்பவர் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் படி ஆண், தனது தன்மையில் அழகானவன், பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவன் என்றும் பெண், தனது தன்மையில் உடல் கவர்ச்சியானவள், ஆக்கிரமிப்புத் தன்மையுள்ளவள், ஏனையோரின் உதவியில் தங்கி வாழ்பவள் எனவும் கூறினார்.

இவரின் கருத்து நிலையிலும் 2003 ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்பட்டது. மேற்கண்டவாறான ஆண், பெண் வித்தியாசங்கள் எதுமின்றி அமெரிக்கர்கள் செயற்படுகின்றமை பால்நிலையில் ஒத்த தன்மையினை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாக நோக்கமிடத்து பால்நிலை என்பது ஆண், பெண் என்ற இருபாலாரையும் குறித்து நிற்கின்ற போதும் பெண்பால், பெண்கள் பற்றியே ஆய்வு செய்கின்றது.

மேலும் பால்நிலை என்பது உயிரியல் ரீதியாகக் கருவிலிருந்து தோன்றும் பொழுதே குரோமோசோ ஓமோன்களின் பாகுபாட்டினால் பெண், ஆண் எனும் வேறுபாடு உயிரினங்களின் பிறப்பில் நிகழ்கின்றது. இவ்வியற்கையான வேறுபாட்டிற்கு அப்பால் பண்பாட்டை வளர்த்தெடுத்த மானிடம் ஆணுக்கு ஆண்மைக் கோட்பாட்டையும் பெண்ணுக்கு பெண்மைக் கோட்பாட்டையும் ஏற்படுத்தி ஆண், பெண் இருபாலாரிடையேயும் செயற்கையான பிரிகோட்டை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரிகோட்டினையே பால்பாகுபாடு, பால்நிலை வேறுபாடு என்று சுட்டுகின்றனர். பால்நிலைப்பாகு பாடானது அறிவுக்கு புறம்பான நிலையில் பெண்ணை அடிமையின் சின்னமாகச் சித்தரிக்கின்றது.பெண் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதை பாலின் வேறுபாடே வற்புறுத்துகின்றது. பாலினப் பாகுபாட்டுக் கோட்பாட்டின் இடிப்படையில் சமகாலத்தில் வாழ்வதற்குத் தற்காலப் பெண்களின் அறிவு இடமளிக்காது. இன்றைய காலவோட்டத்தில் பால்நிலை வேறுபாடு ஏன்? என்ற கேள்விக் கணையைப் பெண்ணியவாதிகள் தொடுப்பதுடன் அதனை முற்றாகத் தகர்த்தெறியவும் போராடி வருகின்றனர்.

எனவே தான் பால்நிலை மற்றும் அதன் வகிபங்கு நிலை என்பன குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரையில் அது துரித வளர்ச்சி அடையப்பெற வேண்டும். சனத்தொகை ரீதியாகக் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையைக் கொண்ட பெண்களிடத்தில் அரசியல் மற்றும் ஏனைய விடயத்தில் சமமின்மை காணப்படுவதென்பது வருந்தத்தக்க விடயமாகவே கருதப்படக்கூடியது. இவற்றிற்கு

  • பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமை.
  • ஆணாதிக்கச் செயற்பாடு அரசியலில் பெண்களை முடக்குகின்றமை.
  • போதிய கல்வி அறிவு பெண்களுக்கின்மை 
  • மரபுகள், கலாசாரத்திற்கு உட்பட்ட பெண்களின் வாழ்க்கை முறை
  • அரசியல் கட்சிகளில் தகுந்த பிரதி நிதித்துவம் பெண்களுக்கு கிடைக்காமை
  • பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் உரிமைகள், கடமைகள் பற்றிய தெளிவின்மை
  • பெண்களின் சமுகமயமாக்கலில் ஏற்படுகின்ற தாக்கம்
  • நிதி விடயங்கள் பெரும்பாலும் ஆண்களின் கைகளில் இருப்பதினாலும் பெண்கள் ஆண்களில் தங்கி வாழும் நிலை தோன்றுவதும்
  • பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாகச் சட்டத்தில் சில ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் அவைகளின் மந்தகரச்செயற்பாடு
  • இயற்கையிலேயே பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்ற நிலை


போன்றன காரணிகளாக இருக்கின்றன. இவ்விடயங்களில் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்படுத்தப்படவேண்டும். இவைகளுக்குப் பெண்ணியல் வாதக்கருத்துக்களையும் பால்நிலைச் சமத்துவக் கருத்துக்களையும் வலியுறுத்திப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.பெண் சமத்துவமானது பால்நிலை சமத்துவத்திற்கு இன்றியமையாதது. சமூகத்தில் பால்நிலை சமத்துவம் ஏற்படுத்தப்பட்டால் அது பலவகையான அபிவிருத்திகளையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான வேண்டுதல்களையே பெண்ணியலாளர்களும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் வேண்டுகின்றனர். இதனால் பெண்ணியம் எனும் எண்ணக்கரு தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். 

பெண்ணியம் (Feminism)

தற்காலத்தில் அரசரிவியலில் ஆராயப்படும் பிரதான விடயப்பரப்புக்களில் ஒன்றாகப் பெண்ணியம் என்பதையும் நாம் உள்ளடக்க முடியும். பெண்ணியம் என்பது பெண்களின் சமூக நிலையை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கருத்தியலும் நோக்கமும் ஆகும். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரித்துக்களைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று வாதாடுவதே இதுவாகும். பெண்ணியலாளர்கள் பெமினிசம் என்ற ஆங்கிலப் பதமானது பெமினா என்ற இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் பெமினிசம் என்ற ஆங்கிலப் பதமானது பெமினிஸ்மி என்ற பிரென்ஞ்சு மொழிச் சொல்லில் இருந்து வந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். 



பெமினிசம் என்பது 1880கள் வரை பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றித் தட்டிக்கேட்கவே ஆரம்பத்தில் பயன் படுத்தப்பட்டது. இவ்வாறு இருந்த போதும் 1890கள் வரையில் பெண்ணியம் என்பதை 'மகளிரியம்' என்று அழைத்தனர். பொதுவாக பெண்ணியமானது 'ஆணாதிக்கத்தின் இரும்புப்பிடியிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணப்பாட்டின் தோற்றத்திலேயே கட்டியெழுப்பப்படுகின்றது. எனவே ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு கருதிதியலும் கோட்பாடுமே பெண்ணியம்' எனலாம். இவ்வாறான அறிமுகத்துடன் பெண்ணிய வாதம் தொடர்பான எளிய புரிதலுக்குப் பின்வரும் வரைவிலக்கணங்களை நோக்க முடியும்.


'டாக்கர் தேவதத்தா' என்பவர் பெண்ணியம் என்பது'சகல தளங்களிலும் ஆணுக்;குள்ள அனைத்து உரிமைகளையும் பெண்ணிற்கும் தேவை என்பதை வலியுறுத்துவது' என்கின்றார்.


'பார்பரா ஸ்மித்' - 'எல்லா பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் எனும் கொள்ளை உடையதாகும். இளம் பெண்கள்,தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஏழைப் பெண்கள்,வயதான பெண்கள்,பொருளாதார முறையாலும் சமூக முறையாலும் மரபு சார்ந்த முறையாலும் துன்புறும் பெண்கள்  ஆகிய அனைவருக்கும் விடுதலையைப் பெற்றுக் கொடுப்பது'பெண்ணியம் என்று விளக்கமளிக்கின்றார்.

ஓக்ஸ்போட் அகராதி - 'பெண்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது' பெண்ணியம் எனக்கூறுகின்றனது.

பெண்ணியவாதம் தொடர்பான கருத்துக்களும் எழுத்துக்களும் மிக நீண்ட காலமாக சமூகத்தில் வேண்டியிருந்தாலும்  இக்கருத்துகள் ஒன்றுதிரட்டப்பட்டு ஒர் அரசியல் கருத்தியலாக 18ஆம்,19ஆம் நூற்றாண்டுகளிலேயே அறியப்பட்டது. இக்காலத்தில் பெண்ணியவாதிகள் அதிகமான இயக்கங்களைத் தோற்றுவித்து பெண்களின் அரசியல் உரிமைகள் மீது குறிப்பாக வாக்குரிமை தொடர்பான சீர்திருத்தங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன.


பெண்ணிலைவாதத்தின் எழுச்சிக்கட்டங்கள்

பெண்ணிலைவாதத்தின் முதல் எழுச்சிக் கட்டம் - பெண்ணிலைவாதத்தின் முதலாம் எழுச்சிக்கட்டமானது 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் ஐக்கிய அnமிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் அரசியல் உரிமைகளை குறிப்பாக பெண்களின் வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றுக்காக போராடி அதில் வெற்றி  கண்ட காலப்பகுதியை குறிக்கின்றது. இக்காலத்தில் சட்டங்களில் காணப்படும் ஆண், பெண்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைத்து அவற்றை சமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெண்ணிலைவாதிகளால் கையாளப்பட்டது. நடுத்தர பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண சடங்கு பேன்றவற்றில் காணப்பட்ட சமமற்றத் தன்மையை எதிர்த்து போராடுவதாக இக்கால பெண்ணியவாதம் காணப்பட்டது எனலாம். இருப்பினும் இக்கால பெண்ணியவாதம் பணிக்குப் போகும் பெண்களின் இன்னல்கள் குறித்துக் கூட கருத்துத் தெரிவிக்க இயலாததாகவும், நவீனத்துவத்துக்கு ஏற்றவகையில் நடாத்திச் செல்ல முடியாததாகவும் காணப்பட்டது. இருந்த போதும் தான் எடுத்துக் கொண்ட கொள்கையில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி கற்க இருந்த தடைகள் நீங்கின. பெண்களின் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட இக் காலகட்டம் காரணமாகியது.


பெண்கள், ஆண்கள் எழுதும் அனைத்துத் தகுதி தேர்வுகளிலும் தேர்வு எழுதும் வாய்ப்புகளை பெற்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் 1770 ஆம் ஆண்டில் திருமணமான பெண்களின் சொத்துரிமை குறித்த சட்டம் இயற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கு வாக்குரிமையை பெற்றுத் தந்தது. 1893இல் முதன் முதலில் நியுசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஜக்கிய அமெரிக்கா அதன் அரசியலமைப்பில் மேற்கொண்ட 19ஆம் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமையை அங்கீகரித்தது. 1978இல் பிரித்தானியா பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. ஆனாலும் இந்நாட்டில் அனைத்துப் பெண்களும் வாக்குரிமை பெறுவதற்குப் பல தசாப்த காலங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அத்துடன் மணவிலக்கு, குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றில் பெண்களின் சமத்துவத்தை எடுத்துரைக்க வழிவகைகள் செய்யப்பட்டன. முதலாம் உலக போரின் நிறைவு பெறும் வரையில் பெண்ணியவாதத்தின் முதலாம் எழுச்சிக் கட்டம் இடம்பெற்றது.

பெண்ணியம், பெண்ணியவாதம், பெண்ணியவாதி போன்ற சொற்களின் பயன்பாடு இக் காலகட்டத்திலேயே பயன்பாட்டிற்கு வந்தது. அப்போதைய பெண்ணியக் கோட்பாட்டாளர்களின் வரிசையில் 'மேரி உல்ஸ்டோன் கிராஃப்ட்' ஆற்றிய பணிகள் முதன்மையானவையாகும். பெண்பால் என்ற தனித்துவத்தைக் கடந்து பெண் ஒரு மனித உயிரியாக வரவேண்டிய அவர் நோக்கமாக கருதினார். இவரை தொடர்ந்து கரோலின் நோர்ட்டன், ஜோன் ரஸ்கின்,த.ள. மில் ஆகியோரின் கோட்பாடுகளையும் இக்காலத்தில் காணலாம்.

கரோலின் நோட்டனின் செயற்பாடுகள் திருமண உறவில் நிகழும் அநீதிகள் தொர்பான செய்திகளை வெளிப்படுத்தியது.  கரோலின் அவரது கணவர் மெல்போர்ன் பிரபுவிற்குஎதிராக குற்றரீதியான பேச்சை நிகழ்த்தியதாக கரோலின் மீது குற்றஞ்சாட்டி அவரது கணவர் விவாகரத்தக் கோரி நீதிமன்றம் அணுகினார். இதன்போது கரோலின் அக்கால சட்டங்களுக்கு எதிராக போராடியதனால் 'திருமண காரணங்கள் சட்டம்' அறிமுகமானது.

இதன் தொடர்ச்சியாக 1850-1860 வரையிலான காலப்பகுதி செயலூக்கமான காலப்பகுதியாக காணப்பட்டது. பொருளாதார தற்சார்பு நிலையை தேர்ந்தெடுத்த காலப்பகுதியாக இது அமைந்திருந்தது. மேலும் இராணுவத்தில் பால்வினை நோய் (ளலிhடைளை) பரவுவதை தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட தெற்றுவியாதிச் சட்டங்கள், இராணுவம் முகாமிட்டுள்ள நகரங்களில் பாலியல் தொழில் செய்பவர்கள் என சந்தேக்திற்கு ஆளான எந்தவொரு பெண்ணையும் அணுவணுவாக அதிகாரிகள் சோதிக்கலாம் என்ற அதிகாரத்தை வழங்கியது. ஜோஸ்பின் பட்வர் போன்ற பெண்களுடைய முயற்சியால் 1886 இல் இச்சட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

1867 ஆம் ஆண்டு ஜோன் ஸ்டூவர்ட் மில் முதன் முதலாக வாக்குரிமைக்காக குரல் கொடுத்தார். ஆனால் அதற்கான வாக்கெடுப்பின் போது அவர் தோற்கடிக்கப்பட்டார். 1928 இல் தான் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாக்குரிமைக் கிடைத்தது. 1895 இல் முதன் முதலாக 'அதீனியம்' என்ற இதழிலேயே பெண்ணியம் என்ற சொல் பயன்படத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.இவ்வாறு நோக்கும் போது பெண்ணியவாதத்தின் முதல் எழுச்சிக் கட்டம் பெண்களின் அரசியல் உரிமைகள், சொத்தரிமை தொடர்பில் பேசியது எனலாம்.

இரண்டாவது எழுச்சிக் கட்டம். -  இரண்டாவது எழுச்சிக் கட்டத்தில் அதிகமான பெண்ணிய இயக்கங்கள் தோற்றம் கண்டன. 1963 Betty Friedan எழுதிய 'பெண்நிலைப் புதிர்' என்ற நூல் பெண்ணிலை வாதத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. இதில் இவர் பெண்கள் பாதுகாப்பையும் விருத்தியையும் குடும்ப வாழ்க்கையில் பெண்களுக்குரிய நடவடிக்கைகளையும் பாலியல் ரீதியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளையும் இல்லாது செய்ய வேண்டும் என்றும் பெண்கள் எதிர்நோக்கும் சந்தோசமின்மை,நம்பிக்கையின்மை, விரக்தி போன்றவற்றையும் ஆராய முற்படுகின்றார். இதனை இவர் 'பெயரில்லாப் பிரச்சினை' (THE PROBLEM WITH NO NAME) என்கின்றார்.

இக்காலத்தில் பல்வேறு பெண்ணிய இயக்கங்கள், பல வழிமுறைகள் மூலம் பிரிந்து செயற்பட ஆரம்பித்தன. சில மிதவாதப் போக்குடையனவாகவும் சில தீவிரப் போக்குடையனவாகவும் செயற்ப்பட ஆரம்பித்தன. Kete Millett என்பவர் 1970இல் எழுதிய 'பாலியல் அரசியல்' (Sexual Politics) எனும் நூலும் பெண்களின் தனியாள் பாலியல் உணர்வுகளை வலியுறுத்துகின்றன. இதனால் பெண்ணியவாதத்தின் இரண்டாவது எழுச்சிக்கட்டம் பெண்களின் அரசியல் விடுதலை என்பதைவிட, பெண்களின் சுந்திரம் என்பதாகவே அமைந்துள்ளது எனலாம். இதனை அடையப் பெண்ணியவாதிகள் சட்டச் சீர்திருத்தம், சமூக மாற்றம் போன்றவற்றை வேண்டி நின்றனர்.


மூன்றாவது எழுச்சிக் கட்டம். - பெண்ணிய வாதத்தின் மூன்றாவது எழுச்சிக்கட்டமானது 1980களின் பின்னர் ஆரம்பித்தது. இது பின்நவீனத்துவ பெண்ணியம் என அழைக்கப்பட்டது. குறிப்பாக 1990களின் பின்னர் மேற்குலத்திலும், மூன்றாம் உலக நாடுகளிலும் பெண்ணிலைவாத இயக்கங்கள் அரசியல்சார் கோரிக்கைகளை முதன்மைப்படுத்திச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றன. இவ்வாறு பெண்கள் தொடர்பாகவும் அவர்களது விடுதலை பற்றியும் பேசுகின்ற பெண்ணியமானது பல்வேறு வகையாகத் தற்காலத்தில் நோக்கப்படுகின்றது. அவற்றைப்பின்வருமாறு நோக்கமுடியும்.

கோட்பாடுகளின் பார்வையில் பெண்ணியம்.


தாராள பெண்ணியம் :- தாராள பெண்ணிலை வாதமானது 1960களில் செல்வாக்கு செலுத்தியது. 1971இல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட வேண்டும், பெண்களாலும் கல்வி கற்க முடியும் என 'மேரி வோல்ஸ்ரொன் கிராப்ட்' என்பவர் தான் 1792இல் எழுதிய 'மகளிர் உரிமை கொள்கை சாசனம் A Vindication of the Rights of Women - எனும் நூலில் சுட்டிக்காட்டினார். மேலும் பெண்களுக்கு சமமான உரிமை, அரசியல் உரிமை குறிப்பாக வாக்குரிமைக்குக் குரல்கொடுத்தார்.

1869இல் ஜோன் ஸ்டூவர்ட் மில் என்பவர் தான் எழுதிய 'பெண்ணடிமைத்தனம் - - The Subjection of Women” எனும் நூலில் பெண்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றார். மட்டுமன்றி அமெரிக்காவில் ஏளைய பெண்கள் இயக்கம் தாராள பெண்ணியவாதத்தின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இதற்குப் பெருமளவு குரல் கொடுத்தவர் பெண்ணியத்தின் தாய் எனப்போற்றப்படும் Betty Friedan என்பவராவார். இவரின் 'பெண்நிலைப் புதிர் -The Feminine Mystique” என்ற நூலும் அதன் கருத்துக்களும் இவ்வகைப் பெண்ணிலைவாதத்திற்கு உத்வேகமளித்தது. இதே போன்று அமெரிக்காவின் தேசிய பெண்கள் அமைப்பு (The National Organization of Women) பிரித்தானியாவின் சமவாய்ப்பு ஆணைக்குழு கொமிசன் (Equal Opportunities Commission in England) ஆகியனவும் இவ்வகைப் பெண்ணியத்திற்கு அர்பணிப்புச் செய்தன.


மார்க்ஸிச பெண்ணியம் (Marxist Feminism) :-பாலிநிலைப் பாகுபாட்டிற்கும் சமத்துவமின்மைக்கும்காரணம் இவை முதலாளித்துவ உற்பத்திக் கோட்பாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கின்றமையே என்பதாக இவ்வகைப் பெண்ணியம் எடுத்துரைக்கின்றது. பெண்களின் அடிமைத்தனத்திற்கும் உயிரியல் காரணிகளின் செல்வாக்கு மட்டுமின்றி மேலதிக உற்பத்தி வடிவங்களினால் சொத்துக்கள் தனியுரிமை ஆக்கப்பட்டதன் விளைவு என்றும் இப் பெண்ணியம் கூறுகின்றது. இதனால் குடும்பம், தனியுரிமைச் சொத்து போன்றன அழிக்கப்பட்டு அவை பொதுவுடமை ஆக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

சோசலிச பெண்ணியம் :- பால்நிலை வேறுபாடுகள், சமத்துவமின்மைகள் போன்றவற்றில் தாராள மற்றும் மார்க்ஸிச பெண்ணியங்கள் கொண்டுள்ள கருத்து நிலைக்கு எதிரான கற்பிதத்தையே இப்பெண்ணிலைவாதம் கொண்டுள்ளது. வர்க்க வேறுபாடு, பால் வேறுபாடு ஆகிய இரண்டையும் சமூகத்திலிருந்து ஒழிப்பதன் மூலம் எந்தவித ஆண்மேலாதிக்கமோ, பெண் மேலாதிக்கமோ இல்லாத சமூகத்தை உருவாக்கல் இதன் நோக்கமாகும். இது பெண்கள் தமக்கு தாமே சுதந்திரத்தைத் தேடி வகுப்பு யுத்தம், பாலியல் யுத்தம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்கின்றது. மேலும் பெண்களின் குடும்ப வேலைக்கும் கூலி கொடுக்கப்பட வேண்டும் என வாதாடுகின்றது.


தீவிர பெண்ணியம் :- பெண்ணிய வாதிகளின் கேள்விகளுக்கு தகுந்த தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை  என்பதால் பிற்பட்ட காலத்தில் பெண்ணிலை வாதக் கருத்துக்கள் தீவிரத் தன்மை கொண்டதாகவும் புரட்சித்தன்மையுடையதாகவும்மாறிவந்தது. இவ்வகைப் பெண்ணியம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு அவர்களை அடிமைகளாக்குகின்றன என வாதிடுகின்றனர் இவர்கள் குழந்தை வளர்ப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுமையாக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். இவ்வகைப் பெண்ணியத்திற்கு முநவந ஆடைடநவவ என்பவர் 1970இல் எழுதிய 'பாலியல் அரசியல்' எனும் நூல் “Germaine Green”  எழுதிய '“The Female Eunuch”எனும் நூலும் சிறந்த எடுத்துக் காட்டுக்கள் எனலாம்.


பின்நவீனத்துவ பெண்ணியம் :- 1980களின் பின்னர் இவ்வகைப் பெண்ணியம் பிரபல்யம் பெற்றதெனலாம். இப் பெண்ணியம் பெண் மொழி, பெண் சமூகம்,  ஆண் மொழி, ஆண் சமூகம் போன்ற வேறுபாடுகளை எதிர்க்கின்றது. மேலும் ஆண், பெண் இருபாலாரும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்களின் எதிர்கால வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் இது வலியுறுத்துகின்றது.

கோட்பாடுகளுள் பெண்ணுரிமை சிந்தனைகள்

மேற்கு தேசம் உட்பட பால்நிலை சமத்துவம் என்ற கமூக சிந்தனையினை அடிப்படையாக கொண்டு பெண்களை சமமாக மதிக்கின்ற சமூக இயக்கங்கள் மிகவும் குறைந்தளவிலேயே வளர்ந்து வந்துள்ளன. இச் சமூக இயக்கங்கள் பெண், பெண்களின் சமத்துவத்தினை அடிப்படை;யாகக் கொண்டவர்கள். என்பதால் இவர்களின் இயங்கு சக்தியினை பெண்ணுரிமை சிந்தனை என அழைக்கின்றோம்.

பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்களின் உரிமைகளுக்காக போராடி வந்தன. அண்மைக் காலங்களில் பெண்களின் உரிமைக்கான சிந்தனைகளும் கோட்பாடுகளும் சமூக விஞ்ஞான கற்கைத் துறைக்குள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பெண்ணுரிமை அணுகுமுறை அரசியல் கோட்பாடாக முதன்மைப்படுத்தப்படுகின்றது. சமூக விஞ்ஞானங்கள் கற்கை நெறிகளில் ஒன்றாக பெண்ணரிமை அணுகுமுறை தோற்றம் பெற்று பால்நிலை சமத்துவம் என்ற சிந்தனையாகி சமூக கோட்பாடாக உருவாகி நிலைபெற்றுக் கொண்டது. பெண்களின் அசைவியக்கம், வரலாறு போன்றவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு அரசியல் கோட்பாட்டில் பெண்ணுரிமை அணுகுமுறை அவசியமாக உள்ளது. 

பெண்களின் விகவாரத்துடன் தொடர்புபடும் வகையில் வரலாற்றுக் காலம் தொடக்கம் இன்று வரையிலான பெண்ணுரிமை சிந்தனையின் வளர்ச்சியினை பிரதானமாக மூன்று கட்டங்களாக பிரித்தாராய முடியும்.

முதலாம் காலகட்டம் - 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் ஆரம்பமாகி 1930 வரை தொடர்வதினை அவதானிக்கலாம். இக்காலப்பகுதியில் பெண்ணுரிமைச் சிற்தனை பின்வரும் பிரதான விடயங்களை தனது கருப் பொருளாகக் கொண்டிருந்தது. அவையாவன,

  • வாக்குரிமை
  • சம உடன்படிக்கை செய்யும் உரிமை
  • சம திருமண உடன்படிக்கை உரிமை
  • பெற்றோராகும் உரிமை
  • சொத்துரிமை
  • சம பால்நிலை சமத்துவ உரிமை
  • குழந்தை பிரசவிக்கும் உரிமை போன்றன முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தன.

பெண்களின் வாக்குரிமை தொடர்பான சமூக இயக்கங்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, போன்ற நாடுகளில் ஆரம்பமாகியது. அமெரிக்காவில் லுழஅiபெ மாநிலத்தில் 1869 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆயினும் 1920 ஆம் ஆண்டுவரை சமஸ்டி அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவது தொடர்பில் எவ்விதமான உடன்பாட்டிற்கும் வரவில்லை.

பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த அவுஸ்திரேலியா 1893 ஆம் ஆண்டும், 1895 ஆம் ஆண்டு நியூசிலாந்தும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கியிருந்தன. ஆயினும் பிரித்தானியா 1918 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமையினை வழங்கியிருந்தது. அதாவது பெண்கள் 30 வயதினை பூர்த்திச் செய்திருத்தல் வேண்டும், சொந்தமாக வீடு ஒன்றினை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் பிரித்தானியா பெண்களுக்கு வாக்குரிமையினை வழங்கியிருந்தது. 1928ஆம் ஆண்டு 21 வயதினை பூர்த்தி செய்த அனைத்துப் பெண்களுக்கும் பிரித்தானியாவில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. 

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 1949 களில் சீன் கம்யூனிச கட்சி அதிகாரத்திற்கு வந்த போது பெண்களுக்கு அரசியல் அந்தஸ்தும், அரசியல் உரிமைகளும் வழங்கப்பட்டன.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் குறிப்பாக துருக்கி, எகிப்து,ஈரான் போன்ற நாடுகளில் மாத்திரம் ஆரம்பக் காலங்களில் பெண்கள் இயக்கங்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை செலுத்தியிருந்தது. 

1922 ஆம் ஆண்டு துருக்கியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமையினைப் பெற்றுக் கொண்டனர். 1923 ஆம் ஆண்டு எகிப்தில் பெண்கள் அமைப்பு தோற்றம் பெற்றதுடன் பெண்களுக்கு சமத்துவ, சட்ட, சமூக, அரசியல் உரிமைகளுக்காக இயக்கங்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் அரபு தேசியவாதத்தின் எழுச்சியுடன் பெண்ணியமும் பலமானதொரு சமூக இயக்கமாக வளரத் தொடங்கியது. 

இரண்டாம் கட்டம் - 

இரண்டாம் கட்டத்தினை 1990 வரையில் அடையாளம் காணலாம். இரண்டாம் கட்டத்தில் அரசியல், சமூக கலாசார ரீதியில் பெண்களுக்குக் காணப்பட்ட சமத்துவமின்மை முதன்மைப்படுத்தப்பட்டது. இவ்விடயங்களின் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மாத்திரமன்றி பால்நிலை அதிகார கட்டமைப்பிலும் செல்வாக்கு செலுத்தியது. மரபு ரீதியான சமூகக் கட்டமைப்பு பல சமூகங்களில் பேணப்பட்டு வந்தது. இச் சமூக கட்டமைப்பு முடிவுக்கு வர வேண்டும் என்பதில் பெண்ணுரிமை சமூக இயக்கங்கள் அக்கறை செலுத்தின. பெண்களுக்கு வீடுகளில் நான்கு வேலைகள் பிரதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவைகள் நான்கும் பெண்களை தாங்கி நிற்கும் நான்கு தூண்களாக நோக்கப்பட்டன. அவையாவன,

  • குழந்தைகளை பெறுதல்
  • வீட்டினை சுத்திகரித்தல்
  • துணிகளை கழுவுதல்
  • சமையல் செய்தல் என்பனவாகும்.

இதற்கு சமமாக ஆண்கள் வியாபாரத்தில் அல்லது தொழில் ஒன்றில் ஈடுபட்டு வருமானம் ஈட்டித் தருபவனாக செயற்படுகின்றான். இச் செயன்முறை தன்னிச்சையாக ஓர் ஆண் வீட்டின் எஜமான் என்ற அந்தஸ்தினை பெற்றுக் கொடுத்தது. 

ஆண் செய்யும் வியாபாரம் மற்றும் தொழிலுக்கு வழங்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் பெண் வீட்டில் செய்யும் கடமைகளுக்கு வழங்கப்படவில்லை. பெண் வீட்டில் செய்யும் கடமைகளுக்கும் பொருளாதார முக்கியத்துவம் உள்ளது. அதற்கு ஊதியம் வழங்கப்படவேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால் இதற்குறிய சமூக பொருளாதார பொறிமுறை சமூகத்தில் கிடையாது. எனவே பெண் முதனிலையில் வீட்டிற்குள்ளேயே பாரபட்சத்துக்கு உள்ளாகின்றாள். இப்பாரபட்சத்தின் விளைவே பெண் சமூகத்திலும், குறிப்பாக அரசியல் சமூகத்திலும் பாரபட்சமாக்கப்படுவதற்கு காரணமாகிறது. எனவே அக்காலக் கட்டத்தில் சமூக அரசியல் மட்டத்தில் பெண்களின் நிலை சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெண்ணுரிமை சமூக இயக்கங்களினால் முன்னிறுத்தப்பட்டது. பெண்ணுரிமை சமூக இயக்கங்களின் இக் கோரிக்கைகளுக்கு சம்யூனிச அரசாங்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள் ஆதரவாக செயற்பட்டன.

மூன்றாம் காலகட்டம் - 

பெண்ணுரிமை சிந்தனைகள் பற்றிய மூன்றாம் காலகட்டம் 1990களின் பின்னர் ஆரம்பமாகியது எனலாம். இரண்டாம் காலகட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுகின்ற காலகட்டமாக இது நோக்கப்பட்டது. பின் கட்டமைப்புவாத நோக்கில் பால்நிலை சமத்துவத்தின் அடிப்படையில் பெண்களின் விடயங்களை இது ஆய்வுக்குட்படுத்தியது. வீட்டுத் தலைவியாக ஒரு பெண்ணின் வகிப்பாகத்தினை தீர்மானிக்கின்ற நுண்ணிய அரசியலை மையமாகக் கொண்டு மூன்றாம் காலகட்டம் நோக்கப்பட்டது.

அரசியல் சித்தாந்தங்களின் பார்வையில் பெண்ணுரிமை


பழைமைவாதம் கூறும் பெண்ணுரிமை

பழைமைவாதிகள் 'பால்' (Gender)   என்ற பதத்தினை ஆண், பெண் இருவருக்கும் இடையிலான உடல் வேறுபாட்டை குறிக்கும் பதமாக பயன்படுத்துகின்றனர். அனேகமான பழைமைவாதிகள் குடும்பத்தில் பெண்களின் வகிப்பங்கை இரண்டாம் நிலையில் வைத்தே நோக்குகின்றனர்.பெண்களால் உடல் ரிதியான தொழில் செய்து வருமானம் ஈட்ட முடியாது. ஆண்களால் மட்டுமே உடல் ரீதியான வேலைகளை செய்து பொருளாதாரத்தை ஈட்ட முடியும். பெண்களால் வீட்டு வேலைகளை மாத்திரமே செய்ய முடியும். கல்வியறிவு ஆண்களின் தனியுடைமையாக இருக்க வேண்டும் என்பதில் பழைமைவாதிகள் அதிக நம்பிக்கைக் கொண்டவர். இதனால் பெண்கள் கல்வி கற்பதை பழைமைவாதிகள் நீண்டகாலமாகவே எதிர்த்து வந்தனர்.

பழைமைவாதிகள் சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் ஆண்களின் அந்தஸ்தினை பேணும் விருப்பம் கொண்டவர்களாவர். இதனால் இவர்கள் சமூக,அரசியல் வாழ்க்கையில் பால்நிலை வேறுபாட்டினை முதன்மைப்படுத்துகின்றார்கள். ஆண், பெண் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டே சமூகத்தில் பால்நிலை வேறுபாடும், பால்நிலை அமைப்பும் பேணப்பட வேண்டும் என்றக் கருத்தினை இவர்கள் கொண்டிருந்தார்கள். ஆயினும் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த தாராண்மைச் சிந்தனையினால் பழைமைவாதக் கருத்துக்கள் தோற்கடிக்கப்பட்டன.

தாராண்மைவாதம் கூறும் பெண்ணுரிமை

தாராண்மைவாதம் எல்லாவகையான பாரபட்டசப்படுத்தலையும் நிராகரிக்கின்றது. தனிமனித கௌரவம், சமத்துவம் தெரிவுச் சுதந்திரம் போன்றவற்றினை தாராண்மைவாதம் ஏற்றுக் கொள்கின்றது. து.ளு. மில் பால்நிலைச் சமத்துவம் பற்றிக் கூறுகின்ற போது 

'நடைமுறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சட்டரீதியான உறவில் பெண்களின் தாழ்ந்த நிலைக் காணப்படுகின்றது. இது இது சமூக அபிவிருத்திக்கு பிரதான தடையாகும். இத்தடை சிறப்பான சமத்துவக் கொள்கை மூலம் நீக்கப்பட வேண்டும். ஒருபகுதி மறுப்பகுதியை சட்டக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளாக்க முடியாது. ஒரு பகுதி மறுப்புகதி மீது சிறப்புரிமை அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது'. எனக் கூறுகின்றார். 

சமூக வரலாற்றில் அடிமைப்படுத்தப்பட்ட வர்க்கத்தவர்களாக பெண்கள் இருந்தார்கள். ஆண்களின் வாழ்க்கைப் போன்று அல்லாமல் அன்பிற்கும் சலுகைக்கும் பெண்கள் ஆண்களை எதிர்ப்பார்த்தார்கள். பெண்கள் இணங்கிச் செல்கின்ற வாழ்க்கை துணையாகவும், கீழ்ப்படிவுள்ள வாழ்க்கை துணையாகவும் இருக்க வேண்டும் என ஆண்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஏனையவர்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கையின் சிறப்பு, பெருமை தொடர்பாக பெண்களுக்கு அறிவுரைக் கூறப்பட்டது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கற்பனையான ஓர் உறவினையே இது தோற்றுவித்தது. இது தொடர்பாக து.ளு. மில் கூறுகின்ற போது,

'ஆண்கள் தமது உடல் வலிமையினை வெளிப்படுத்தி பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் அவர்கள் தங்களை தாங்களே இழிவுப்படுத்திக் கொள்கின்றவர்களாக மாறுகின்றனர். பலமான மனத்தைரியம் உள்ள ஆண், பலமான மனத்தைரியம் உள்ள பெண் இருவருக்கும் இடையில் நிகழும் திருமணமே சிறப்பான அன்பானத் திருமணமாகும். ஆணும் பெண்ணும் பரஸ்பரம் வெளிப்படுத்தும் நட்பு, கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் தமக்கிடையில் உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.' எனக் கூறுகின்றார்.

பெண்களின் உடல் ரீதியான பலவீனம் என்பது இயற்கையானது என்பதனை J.S மில் நிராகரித்துள்ளார். ஒரு மனிதனின் மனப்பாங்கு, இயல்பு என்பவற்றை ஆற்றலே தீர்மானிக்கின்றது. முறையான கல்வி, சொத்துக்களை சமமாக பங்கீடு செய்தல் போன்ற சூழ்நிலை மாற்றப்படுமாயின் பெண்களின் பலவீனம் என்றக் கருத்து மீளப்பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் உள்ளது.

எனவே தாராண்மைவாதம் பொது வாழ்க்கையில் பெண்கள் பாரபட்சப்படுத்தப்படக் கூடாது. தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியால் தலையீடு செய்தல் தடைச் செய்யப்படுதல் வேண்டும் என்றக் கொள்கையினை தாராண்மைவாதம் கொண்டுள்ளது.

மாக்ஸிசம் கூறும் பெண்ணுரிமை.

தாராண்மைவாதிகளைப் போன்று சோசலிசவாதிகளும் பால்நிலை வேறுபாட்டை நிராகரிக்கின்றனர். பால்நிலை வேறுபாட்டை தந்தைவழிக் கோட்பாட்டின் ஊடாக நோக்குகின்றனர். பொருளாதார, வர்க்க சமத்துவமின்மை பால்நிலை வேறுபாட்டைத் தோற்றுவித்தது. பால்நிலை சமூகம் உருவாக்கிய சமூக, பொருளாதார ஒழுங்கு முறையில் பால்நிலை சமத்துவத்தினை எதிர்ப்பார்க்க முடியாது. எனவே பெண்களின் உண்மையான சமூக, பொருளாதார அரசியல் விடுதலை சோசலிஸ பொருளாதாரத்தில் மாத்திரமே சாத்தியமாகும். தனியார் சொத்துடைமை அழிக்கப்பட்டு கூட்டுறவு முறையிலான புதிய பொருளாதார கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும். இப் புதிய பொருளாதார சமூகம் நல்லிணக்கம், சமாதானம் கொண்ட புதிய சமுதாயத்தினை உருவாக்க வேண்டும். கம்யூனிச கோட்பாடு பெண்களை கொடுமைப்படுத்துவதற்கும், தொழிலாளர் சுரண்டலுக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது. முடிவாக மாக்ஸிச பெண்ணுரிமை அணுகுமுறை வர்க்க அடக்குமுறையினை இல்லாதொழிப்பதன் மூலமே பால்நிலை அடக்குமுறையினை இல்லாதொழிக்க முடியும் எனக் கூறுகின்றது.


No comments:

Post a Comment