அரசு மற்றும் அரசாங்கம்( STATE AND GOVERMENT)

 அரசு, அரசாங்கம்; மற்றும் ஆட்சிமுறை என்பவற்றுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்




D.JEGATHEESWARAN 
B.A(HONS), M.A(PERA), PGDE, M.ED(RED), DIP.IN HR, SPECIAL IN POLITICAL SCIENCE
அரசு மற்றும் அரசாங்கம்

எல்லா சமூகத்திலும் காணப்படும் அடிப்படை மற்றும் மையமான அரசியல் நிறுவனம் அரசும் அரசாங்கமும் ஆகும் அரசு என்பது பிரிக்க முடியாத உணர்வு வெளிப்படாத, கட்புலனாகாத இலச்சிய மாதிரியாகும். ஆனால் அரசாங்கம் என்பது சட்டத்துறை நிருவாகத்துறை, நீதித்துறை என்பனவற்றைக் கொண்டமைந்த நிறுவனமாகும். அத்துடன் கட்புலனாகும் நிறுவனமாகும். அத்துடன் கட்புலனாகும் நிறுவனமும் நடைமுறைச் செயற்பாட்டை உடையனவாகும். சமூகத்தில் காணப்படும் ஏனைய அரசியல் நிறுவனங்களின் தோற்றமும் அரசு மற்றும் அரசாங்கத்தால் நடைபெற்றுள்ளது. 
உதாரணம் : பாராளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறை, உள்ளுராட்சி அமைப்புகள், ஆயுதப்படைகள், பொலிஸ், சிறைச்சாலை, பாடசாலை, பல்கலைக்கழகம், திணைக்களங்கள் போன்றன.
அரசாங்கம் என்பது அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவராகும். அதேவேளை, அரசின் விருப்பையும், நோக்கங்களையும், நடைமுறைப்படுத்துகின்றது. இதன் படி அரசு எஜமானும், அரசாங்கம் சேவகனுமாகும். இங்கு அரசின் செயற்பாட்டை அரசாங்கத்தின் வாயிலாகவே காணலாம்.. 
சாதாரண மக்களுக்கு அரசும், அரசாங்கமும் ஒன்றாகும். ஆனால் அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு வௌ;வேறுதான் எனும் கருத்தினை 'லஸ்கி' எனும் அறிஞர் வலியுறுத்துகின்றார்.
ஓர் அரசினுடைய நிலைப்பேற்றிக்கு அரசாங்கம் அவசியமானதாகும். அரசு நிலையானது ஆனால் அரசாங்கம் மாறக்கூடியது. ஆரம்பகால ஜனநாயக அரசுகளில் இவ்வேறுபாடு காணப்படவில்லை. உதாரணம் :- மன்னராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாதிருந் ததோடு அரசு மற்றும் அரசாங்கத்திற்கிடையில் வேறுபாடும் காணப்படவில்லை. அரசனே அரசு மற்றும் அரசாங்கமானான்.
தோமஸ் கொப்ஸ் என்பவர் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளார். 
பேராசிரியர் கார்ணர் அரசாங்கத்தினைப் பற்றி கூறுகின்ற போது அரசின் அல்லது மக்களின் விருப்பங்களை, கொள்கைகளாக மாற்றுவதன் மூலம் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் பிரதிநிதி  அரசாங்கமாகும் என்று கூறினார்.
அரசும் அரசாங்கமும் ஒன்றோடொன்று .தொடர்புடையன. எனினும் இவை இரண்டும் ஒன்றல்ல. அரசும் அரசாங்கமும் ஒன்றல்ல என்பதனை ஜோன்லொக் என்பவர் முதன் முதலாக வேறுப்படுத்தினார்.

வேறுபாடுகள்
01. அரசு என்பது ஆள்புலம், மக்கட்தொகை, அரசாங்கம், இறைமை, என்ற காரணிகளின் சேர்மானமாகும். அரசாங்கம் அரசின் ஒர் அங்கம் மட்டுமே.

02. அரசில் வாழும் சகல பிரஜைகளும் அரசின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் உறுப்புரிமை கட்டாயமானதல்ல.

03. மக்கள் அரசுக்கு கட்டாயம்அடிப்பணிய வேண்டும். ஆனால்அரசாங்கத்திற்கான அடிப்பணிவு கட்டாயமாதல்ல.

04. அரசுக்கு இறைமைஅதிகாரம் உண்டு.அரசு ஒப்படைக்கும் அதிகாரத்தையே அரசாங்கம் பெறுகின்றது.

05. அரசின் இருப்புக்கு ஒரு நிச்சயமான ஆல்புலப் பிரதெசம் தேவைப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு அது அவசியமானதல்ல.

06. அரசு மாற்றமுறாது நிலையானதாய் இருக்கும். ஆனால் அரசாங்கம் காலத்திற்கு காலம் மாறும் உதாரணம்:- காலத்திற்கு காலம் நடக்கும் தேர்தல் மூலம் இன்றைய ஜனநாயக அரசாங்கங்கள் மாறுகின்றன.

07. அரசு என்பது சீரானது ஆனால் அரசாங்கம் பல வகையினை சேர்ந்தது. உதாரணம்:- இங்கிலாந்து,இந்தியா, இத்தாலி போன்ற நாடுகளில் மந்திரிசபை அரசாங்கம்உள்ளது. அமெரிக்கா அரசாங்கம் ஜனாதிபதி அரசாங்கமாக காணப்படுகின்றது.சீனா, கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் பொதுவுடமை அரசாங்கம் நிலவுகின்றது. சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் முடியாட்சி அரசாங்கம் நிலவுகின்றது. 

08. மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடியாது. அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் உரிமை மக்களுக்குண்டு.

09. ஓர் அரசின் எல்லைக்குள் ஓர் அரசு மட்டுமே செயற்பட முடியும். ஆனால் ஒரு அரசுக்குள் பல அரசாங்கங்கள் இருக்கலாம்.உதாரணம்:- சமஷ்டியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் காணப்படுகின்றன.

10. அரசு கட்புலனாகாத இலட்சிய மாதிரி ஆகும்.ஆனால் அரசாங்கம் கட்புலனாகும் நிறுவனமாகும் அத்துடன் நடைமுறை செயற்பாடுடையது.

11. அரசு எஜமான் அரசாங்கம் சேவகன்


No comments:

Post a Comment